உள்ளடக்கத்துக்குச் செல்

மலாய மொழிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மலாய் மொழிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மலாய மொழிகள்
Malayic Languages
Malayic
Bahasa-bahasa Melayu
புவியியல்
பரம்பல்:
கடல்சார் தென்கிழக்காசியா
மொழி வகைப்பாடு: அவுஸ்திரேலிய
 மலாய-பொலினீசியம்
  மறுப்பீடு:
மலாய் சும்பவான் மொழிகள் வடக்கு போர்னியோ மொழிகள்
   மலாயு சாம்
    மலாய மொழிகள்
Malayic Languages
Malayic
Bahasa-bahasa Melayu
முதனிலை-மொழி: புரோட்டோ மலாய்
துணைப்பிரிவு:
(மறுப்பீடு)

கடல்சார் தென்கிழக்கு ஆசியாவில் மலாய மொழிகளின் பரம்பல்:

  இபான் மொழிகள் மேற்கு மலாய் தயாக்கு (கெண்டாயான் மொழி) மலாய் தயாக்கு
  இதர மலாய் குழுக்கள்

மலாய மொழிகள் (மலாய்: Bahasa-bahasa Melayu; ஆங்கிலம்: Malayic Languages; சீனம்: 马来语群) என்பது ஆஸ்திரோனீசிய மொழிகள் (Austronesian), மலாய-பொலினீசிய மொழிகள் (Malayo-Polynesian) ஆகிய மொழிக் குடும்பங்களில் ஒரு மொழிக்குழு ஆகும்.[1] இதில் மலாய் மொழி என்பது தனி ஒரு மொழியைக் குறிப்பிடுவதாகும். மலாய மொழிகள் (Malayic Languages) என்பது மலாய் மொழி சார்ந்த மொழிக் குழுவைக் குறிப்பிடுவதாகும்.

மலாய மொழிகள் குடும்பத்தில் மலாய் மொழியே முதனமை மொழியாக விளங்குகிறது. மலாய் மொழிக்கு புரூணை, சிங்கப்பூர், இந்தோனேசியா நாடுகளில் தேசியத் தகுதி வழங்கப்பட்டு உள்ளது.

இந்தோனேசியா, மலேசியா, புரூணை ஆகிய நாடுகளின் தேசிய மொழியாகவும், சிங்கப்பூர் நாட்டின் நான்கு அரசு அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒரு மொழியாகவும் இருந்து வருகின்றது. இந்த மொழியை மலாக்கா நீரிணையைச் சுற்றியுள்ள நிலப்பகுதிகளில், 40 மில்லியன் மக்கள், தங்களின் பூர்வீக மொழியாக பேசி வருகின்றனர். [2][3] அதே வேளையில் மலேசியாவில் சிறப்புரிமை பெற்ற தேசிய மொழியாக உள்ளது.

மலாய் மொழி

[தொகு]

மலாய் மொழிக்கு வேறு பல சிறப்புரிமைப் பெயர்களும் உள்ளன. பகாசா கெபாங்சான், பகாசா நேசனல் என்று சில மலேசிய மாநிலங்களில் அழைக்கப்படுகிறது. சிங்கப்பூர், புருணை நாடுகளில் பகாசா மலாயு என்றும்; மலேசியாவில் பகாசா மலேசியா என்றும்; இந்தோனேசியாவில் பகாசா இந்தோனேசியா என்றும்; அழைக்கப்படுகின்றது.

சுமத்திரா, சரவாக், போர்னியோ தீவின் மேற்கு கலிமந்தான் நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் மலாய் மொழியைப் பேசி வருவதால், அந்த மொழியைப் பேசுவோரின் எண்ணிக்கை 215 மில்லியனாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.[4]

பொது

[தொகு]

மலாய மொழிகள் குடும்பத்தில் மலாய் இன மக்கள் பேசும் சாம்பி மலாய் மொழி (Jambi Malay) கெடா மலாய் மொழி (Bahasa Melayu Kedah) ஆகிய உள்ளூர் மொழிகளும் அடங்கும்.

இந்தோனேசியா சுமத்திராவைச் சார்ந்த மினாங்கபாவு மொழி; போர்னியோவைச் சார்ந்த பஞ்சார் மொழி, இபான் மொழி; தாய்லாந்து தென்மேற்கு கடற்கரையைச் சார்ந்த ஊரோக் லாவாய் மொழி ஆகிய வெளிநாட்டு மொழிகளும் மலாய் மொழிகள் குடும்பத்தில் அடங்குகின்றன.[5]

மொழிகள்

[தொகு]

மலாய மொழிகள் சுமத்திரா, சரவாக், போர்னியோ, மலாய் தீபகற்பம், ஜாவா மற்றும் தென் சீனக் கடல், மலாக்கா நீரிணையில் அமைந்துள்ள பல தீவுகளில் பேசப்படுகின்றன.

போர்னியோ

[தொகு]

தீபகற்ப மலேசியா

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Adelaar, K. Alexander (2004). "Where does Malay come from? Twenty years of discussions about homeland, migrations and classifications". Bijdragen tot de Taal-, Land- en Volkenkunde 160 (1): 1–30. doi:10.1163/22134379-90003733. 
  2. Asmah Haji Omar (1992). "Malay as a pluricentric language". In Clyne, Michael J. (ed.). Malay as a pluricentric language Pluricentric Languages: Differing Norms in Different Nations. Berlin & New York: Mouton de Gruyte. pp. 403–4. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-11-012855-1.
  3. Nurdjan, Sukirman; Firman, Mirnawati (2016). Indonesian language for Higher Education (eng). Indonesia: Aksara Timur. p. 4. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-602-73433-6-8. பார்க்கப்பட்ட நாள் 30 Dec 2020.
  4. Even if we are very conservative and consider only two third of Malaysians and 85% of Indonesians as fluent speakers (either native, or near-native), there are still more than 215 million speakers of Malay-Indonesian.
  5. Bellwood, Peter; Fox, James J.; Tryon, Darrell, eds. (2006). The Austronesians: Historical and Comparative Perspectives (in ஆங்கிலம்). Canberra: ANU Press. எண்ணிம ஆவணச் சுட்டி:10.22459/a.09.2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-920942-85-4.

நூல்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலாய_மொழிகள்&oldid=4090357" இலிருந்து மீள்விக்கப்பட்டது