உள்ளடக்கத்துக்குச் செல்

துச்சலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துச்சலை திருதராஷ்டிரன் காந்தாரி தம்பதிகளுக்குப் பிறந்த மகளாவார். இத்தம்பதிகளுக்கு பிறந்த ஒரே பெண் இவர். மற்றவர்கள் நூறு ஆண் மகன்களாவர். அந்நூறு பேரும் கௌரவர் என்று அழைக்கப்பெறுகின்றனர்.[1][2][3]

துச்சலை மகாபாரதக் கதாபாத்திரங்களில் ஒருத்தி. துரியோதனின் சகோதரி. இவளது கணவன் ஜயத்ரதன் பாரதப் போரில் அருச்சுனனால் கொல்லப்பட்டான். இவளுக்கு சுரதா என்னும் ஒரு மகன் இருந்தான். குருசேத்திரப் போரின் பின்னர் தர்மனின் அசுவமேத யாகத்துக்காக சிந்து நாட்டுக்கு வந்த அருச்சுனனுடன் துச்சலையின் பேரன் போர் புரிந்தான். துரியோதனனது சகோதரியை தனது சகோதரியாகவே கருதிய அருச்சுனன் சுரதாவின் மகனைக் கொல்லாமல் சிந்து நாட்டை விட்டு அகன்றான்.

இவற்றையும் பார்க்க

[தொகு]

ஆதாரம்

[தொகு]
  1. www.wisdomlib.org (2017-06-28). "Dushshala, Duśśalā, Duśśala: 3 definitions". www.wisdomlib.org (in ஆங்கிலம்). Retrieved 2022-11-29.
  2. "Unveiling the secret of Duhsala, the only sister of 100 Kaurava Brothers". Detechter. 2017-10-24. Retrieved 2020-08-26.
  3. www.wisdomlib.org (2019-01-28). "Story of Duśśalā". www.wisdomlib.org. Retrieved 2022-11-29.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=துச்சலை&oldid=4099621" இலிருந்து மீள்விக்கப்பட்டது