கடோற்கஜன்
Appearance
கடோத்கசன் | |
---|---|
![]() கடோற்கஜனும் கர்ணனும் போரிடுதல் | |
தேவநாகரி | घटोत्कच |
வகை | பாதி-அரக்க குணம் |
இடம் | காம்யக வனம் |
ஆயுதம் | கதாயுதம் |
போர்கள் | குருச்சேத்திரப் போர் |
குழந்தைகள் | பர்பரிகன், அஞ்சனபர்வன், மேகவர்ணன் |
கடோற்கஜன் மகாபாரதக் கதையில் வரும் ஒரு பாத்திரம் ஆவான். இடும்பிக்கும் பீமனுக்கும் பிறந்தவன். இராட்சசிக்குப் பிறந்தவனாகையால் மந்திர வலிமைகள் உடையவனாக இருந்தான். இவனது தலை பானை போலிருந்ததால் கடோற்கஜன் என்ற பெயர் பெற்றான்.இவன் வாழ்விடம் காம்யக வனம் ஆகும். இவனது மனைவி அகிலாவதி. நாககன்னியான அகிலாவதி கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளித்தே அவளைத் திருமணம் செய்தான். கடோற்கஜன் தனது தந்தையைப் போலவே கதாயுதத்தால் போரிட்டான். குருச்சேத்திரப் போரில் கர்ணனால் கொல்லப்பட்டான்.[1][2][3]
கடோற்கசன் மகன் பர்பரிகன், யார் சார்பாகவும் போரிடாமல் ஒரு குன்றில் அமர்ந்து 18 நாள் போர் முடியும் பார்த்துக் கொண்டிருந்தான்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Datta, Amaresh (2006-01-01). The Encyclopaedia of Indian Literature (Volume Two) (Devraj to Jyoti). ISBN 978-81-260-1194-0.
- ↑ "Ghatotkacha - Rakshasa Son of Bheema - Indian Mythology". Archived from the original on 10 சனவரி 2007. Retrieved 3 திசம்பர் 2006.
- ↑ "The Mahabharata, Book 1: Adi Parva: Hidimva-vadha Parva: Section CLVII".