உள்ளடக்கத்துக்குச் செல்

சுவர்க்க ஆரோஹன பருவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுவர்க்க ஆரோஹன பருவம் (சுவர்க்கத்தில் ஏற்றம் பெறுவது) (Svargarohana Parva) என்பது மகாபாரத இதிகாச காவியத்தின் 18வது மற்றும் இறுதி பர்வமாகும். இப்பர்வத்தில் துரியோதனன், சகுனி, மற்றும் துச்சாதனன் ஆகியோர் சொர்க்கத்தில் மகிழ்ச்சியாக இருப்பதையும், பீஷ்மர், துரோணர், கர்ணன், வீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன் மற்றும் திரௌபதி நரகத்தில் துயர் அடைவதையும் காண்கிறான் தருமர் . தர்ம வழியில் வாழ்ந்தவர்கள் நரகத்திலும், அதர்ம வழியில் வாழ்க்கையை நடத்தியவர்கள் சொர்க்கத்தில் மகிழ்ச்சியாக இருக்க என்ன காரணம் என்று தருமர் கேட்க, அதற்கு எமதர்மராசன், குருச்சேத்திரப் போரில் துரோணர் மரணத்திற்கு காரணமாக நீ (தருமர்) கூறிய பொய்யே சிறிது நேரம் நரக லோக காட்சியை காண வேண்டிய கட்டாயம் உண்டாயிற்று எனக் கூறினார். மேலும் நீ, கண்ட காட்சி வெறும் மாயையே அன்றி உண்மையல்ல என தருமனுக்கு உணர்த்தினார் எமதர்மராசன்.

பின்னர் பாண்டவர் மற்றும் கௌரவர் தேவ லோகத்தில் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2016-03-05. Retrieved 2014-11-01.

வெளியிணைப்புக்கள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவர்க்க_ஆரோஹன_பருவம்&oldid=3555163" இலிருந்து மீள்விக்கப்பட்டது