உள்ளடக்கத்துக்குச் செல்

இடும்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீமனும் இடும்பியும். ரவிவர்மாவின் ஓவியம்

இடும்பி (Hidimbi) மகாபாரதக் கதையில் வருபவள். இடும்பனின் உடன்பிறந்தவள். காட்டுவாசியான இவள் பீமனை விரும்பினாள். பீமனுக்கும் இடும்பிக்கும் பிறந்தவன் கடோத்கஜன் ஆவான்.[1]

பாண்டவர்களின் வனவாச காலத்தில் இடும்பன் இடும்பியைப் பாண்டவர்களைக் கொன்று இறைச்சியாக்கி வருமாறு அனுப்புகிறான். பாண்டவர்களில் ஒருவனான பீமனைக் கண்டு இடும்பி அவனை விரும்புகிறாள். ஓர் அழகான பெண்ணாக மாறி பீமனை அணுகுகிறாள். நீண்ட நேரம் இடும்பி திரும்பி வராததால் இடும்பன் பீமனைக் கொல்ல வருகிறான். பீமனுக்கும் இடும்பனுக்கும் நடந்த சண்டையில் இடும்பன் கொல்லப்படுகிறான். பின்னர் இடும்பி பீமனைத் திருமணம் செய்கிறாள். இவர்களுக்குக் கடோத்கஜன் பிறக்கிறான். வனவாசத்தின் பின்னர் இடும்பியும் பீமனும் மீண்டும் சந்தித்தார்களா என்பது பற்றித் தெரியவில்லை.

இமாச்சல் பிரதேசத்தின் சில பகுதிகளில் இடும்பியை வழிபடுவோர் உள்ளனர்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Mahabharata's Bhima was married to a rakshasi – do you know who she is". 5 May 2016.
  2. "All you need to know about Hidimbaa, the demoness wife of Bhima".

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இடும்பி&oldid=4207764" இலிருந்து மீள்விக்கப்பட்டது