உள்ளடக்கத்துக்குச் செல்

பரதன் (மகாபாரதம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பரதன் (பேரரசன்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
காட்டில் சகுந்தலையின் குழந்தை பரதன். (ராஜா ரவிவர்மாவின் ஓவியம்)

பரதன் (Bharata) (சமசுகிருதம்: भरत) சமசுகிருத மொழியில் பரதன் எனில் ஏற்றுக் கொள்ளப்பட்டவன் என்று பொருள். துஷ்யந்தன்-சகுந்தலை தம்பதியருக்குக் காட்டில் பிறந்தவன்.[1][2] பரதனின் இயற்பெயர் சர்வதமனா என்பதாகும். சர்வதமனா எனில் அனைத்தையும் அடக்கி ஆள்பவன் என்று பொருள். ஆறு வயது நிரம்பிய சகுந்தலையின் மகன், கன்வ முனிவரின் ஆசிரமத்தில் வளர்கையில் எந்த பலம் மிகுந்த மிருகத்தையும் பற்றி அடக்கி வைப்பதால் சர்வதமனா (அனைத்தையும் அடக்கி கைப்பற்றுபவன்) என அழைக்கப்படுவான் என்று கன்வர் முனிவர் கூறினார்.

பரதன், துஷ்யந்தனுக்குப் பின்பு குரு நாட்டின் பேரரசனான். பரதனின் வம்சத்தில் பிறந்ததால், பாண்டவர் மற்றும் பரத குலத்தினர் என்பர்.

இந்தியக் குடியரசை பாரத் (பரத கண்டம்) என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படுவது, இப்பேரரசன் பரதன் பெயரில்தான். வர்ஷம் எனில் மலைகளால் சூழப்பட்ட பகுதி எனப் பொருள்.

முன் வரலாறு

[தொகு]

விசுவாமித்திரர் - மேனகைக்கும் பிறந்த சகுந்தலையை விட்டுப் பிரிந்தனர் தம்பதியர். சாகுந்தலப் பறவைகளால் காக்கப்பட்ட சகுந்தலையைக் கன்வர் என்ற முனிவர் எடுத்து வளர்த்தார். பருவ வயதடைந்த சகுந்தலை, தற்செயலாகக் காட்டில் துஷ்யந்தனைச் சந்தித்துப் பழகிக் கந்தர்வ திருமணம் செய்து கொண்டனர். சகுந்தலையின் விரலில் ஒரு மோதிரத்தை அணிவித்து, சில நாட்கள் சகுந்தலையுடன் உறவாடி விட்டு, தன் நாட்டை நோக்கிச் சென்றான். துஷ்யந்தன் பிரிவால் வாடிக் கொண்டிருந்த சகுந்தலைக்குப் பரதன் பிறந்தான். ஒரு நாள் சகுந்தலை பரதனைத் தூக்கிக் கொண்டு, துஷ்யந்தனின் அரண்மனைக்குச் சென்று, தன்னையும் பரதனையும் ஏற்றுக் கொள்ள வேண்டினாள். துஷ்யந்தன் சகுந்தலையையும், சர்வதமனாவையும் ஏற்றுக் கொள்ளவில்லை. விசுவாமித்திரர், துஷ்யந்தனிடம் நடந்த உண்மைகளைக் கூறியும் சகுந்தலையையும் சர்வதமனாவையும் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டான். பின் வானத்தில் அசரீரி ஒலி கேட்ட பின்பு துஷ்யந்தன், சகுந்தலையையும் பரதனையும் ஏற்றுக் கொண்டான். சர்வதமனா ஏற்றுக் கொண்ட குழந்தையானபடியால், பரதன் என்று அழைக்கப்பட்டான். [3]

குடும்பம்

[தொகு]

பரதனின் மூன்று மனைவிகள் மூலம் ஒன்பது குழந்தைகளும் பிறந்தன. ஆனால் அவர்கள் அனைவரும் நாடாள தகுதியற்ற காரணத்தாலேயே, பரதனின் மனைவியர் அவர்களைத் தங்கள் கையாலேயே கொன்று விட்டனர். பின்னர் பரதன் புத்திர வேள்வி செய்து, அவ்வேள்வியில் உதித்த மகனுக்குப் பூமன்யு எனப் பெயரிட்டான். நற்குணமுடைய பூமன்யு பரதனுக்குப் பின் நாடாண்டான்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரதன்_(மகாபாரதம்)&oldid=4055855" இலிருந்து மீள்விக்கப்பட்டது