உள்ளடக்கத்துக்குச் செல்

சல்லியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சல்லியன்
மகாபாரதக் கதை மாந்தர்
தகவல்
உறவினர் மாத்திரி, நகுலன், சகாதேவன்


சல்லியன் மத்திர நாட்டின் அரசனாவான். இவனது சகோதரி மாதுரி, பாண்டுவின் இரண்டாவது மனைவி ஆவாள். நகுலன் மற்றும் சகாதேவன் இவனது மருமக்கள் ஆவர். பாண்டவர்களின் அன்புக்குப் பாத்திரமானவன். வில் வித்தையிலும் போர்முறைகளிலும் தேர்ந்தவன். தேரோட்டத்தில் வல்லவன்.

துரியோதனனின் தந்திரம்

[தொகு]

நகுலன், சகாதேவனுக்கு தாய்மாமன் ஆனபோதும் துரியோதனின் தந்திரத்தால் குருச்சேத்திரப் போரில் கௌரவர்கள் தரப்பில் போரிட நேர்ந்தது. அத்தினாபுரத்தில் பாண்டவர்கள் அரண்மனை என நினைத்து துரியோதனனின் உபசரிப்பில் மகிழ்ந்திருந்த வேளையில் விருந்தளித்தவருக்கு எந்த உதவியும் செய்ய வாக்களிக்கிறான். அப்போது துரியோதனன் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு கௌரவர் சேனைக்கு ஆதரவு கேட்கிறான். தனது தவற்றை உணர்ந்த சல்லியன் தருமனிடம் நிகழ்ந்தவற்றைக் கூறி மன்னிக்க வேண்டுகிறான். அப்போது தருமன், சல்லியனின் தேரோட்ட வலிமையைக் கருத்தில் கொண்டு, கர்ணனுக்கு சாரதியாக இருக்கும் வாய்ப்பு உண்டானால் அவனது மனவலிமை குன்றுமாறு செய்க என அவனை வேண்டிக்கொள்கிறான். அதற்குச் சல்லியன் இணங்குகிறான். [1]

குருச்சேத்திரப் போரில் தயக்கத்துடன் கலந்து கொண்டாலும் பல பெரும் வீரர்களை கொல்கிறான்.அபிமன்யுவின் மைத்துனனும் விராட நாட்டு இளவரசனுமான உத்தரனுடன் போர் புரிந்து தனது ஈட்டியால் கொல்கிறான். இதனையறிந்த அருச்சுனன் கோபம் கொண்டு சல்லியனின் சகோதரன் மற்றும் மகனைக் கொல்கிறான். தவிர சக்கரவியூகம் அமைத்து சல்லியனையும் போரில் பங்கேற்க விடாது ஓரிடத்தில் கட்டுப்படுத்துகிறான்.

கடைசி மூன்று நாட்கள் போர்

[தொகு]

சல்லியன் கர்ணனுக்கு தேரோட்டியாக இருந்து அருச்சுனனுடன் அவன் சண்டை போடும்போது அருச்சுனனின் திறமைகளை பாராட்டி கர்ணனின் குறைகளை மேம்படுத்தி கர்ணனின் குவியத்தை கெடுக்கிறான். முடிவில் கர்ணனின் மரணத்தின் பின் போரின் கடைசி நாளான பதினெட்டாம் நாள் கௌரவ சேனைக்கு தலைமையேற்கிறான் போரில் தோற்கபோவது உறுதியான நேரத்தில் தருமனின் ஈட்டிக்கு இரையாகிறான்.[2] இதன் பின்னர் கௌரவ சேனை தலைவர் எவருமின்றி போர்க்களத்திலிருந்து ஓடத் துவங்கியது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. துரியோதனனின் தந்திரம்! - உத்யோக பர்வம் பகுதி 8
  2. சல்லியனைக் கொன்ற யுதிஷ்டிரன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சல்லியன்&oldid=4076580" இலிருந்து மீள்விக்கப்பட்டது