உள்ளடக்கத்துக்குச் செல்

உலுப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உலுப்பி அல்லது உலூப்பி, இந்து தொன்மவியல் பெரும்காப்பியமான மகாபாரதத்தில் அருச்சுனனின் பல மனைவிகளில் ஒருத்தியாவாள். நாக குலத்தில் பிறந்த உலுப்பி, இடுப்பிற்கு மேல் மனித உடலும்; இடுப்பிற்கு கீழ் பாம்பு உடலும் கொண்ட நாககன்னி ஆவாள். [1][2] இவள் தந்தை நாகர்களின் மன்னருடன் கங்கை ஆற்றில் வாழ்ந்து வந்தார். [3] உலுப்பி போர்க்கலையில் தேர்ந்தவர்[4] அருச்சுனன் 12 ஆண்டு தீர்த்த யாத்திரையின் போது, கங்கை ஆற்றில் குளிக்கும் போது, நாக கன்னிகை உலுப்பி, அருச்சுனன் மீது மோகம் கொண்டு மயங்குகிறாள். அருச்சுனனுக்கு மயக்கமருந்து கொடுத்து தனது பாதாள உலகிற்கு கொணரச் செய்கிறாள். அங்கு இணங்காத அருச்சுனனை வற்புறுத்தி திருமணம் செய்து கொள்கிறாள்.[5]. அவர்களுக்குஅரவான் என்ற மகன் பிறக்கிறான். பின்னர் கணவனின் பிரிவால் வாடும் சித்திராங்கதாவுடன் அருச்சுனனை சேர்த்து வைக்கிறாள்.

அருச்சுனன் சித்திராங்கதையின் மகன் பாப்புருவாகனனின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றுகிறாள். போர் களத்தில் அருச்சுனன் பாப்புருவாகனனால் கொல்லப்படும்போது அவனை உயிர்ப்பிக்கிறாள். பீஷ்மர் குருச்சேத்திரப் போரில் அருச்சுனனால் கொல்லப்பட்டதால் அவரது சோதரர்களான வசுக்கள் இட்ட சாபத்திலிருந்து அருச்சுனனை காப்பாற்றுகிறாள்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Vogel 1926, ப. 208.
  2. Vettam 1975, ப. 19.
  3. Debroy 2010, sec.Arjuna-vanavasa Parva.
  4. Chandramouli 2012, chpt. Seprent Princess.
  5. உலூபியின் காமமும் அர்ஜுனன் பெற்ற வரமும் - ஆதிபர்வம் பகுதி 216
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலுப்பி&oldid=2093848" இலிருந்து மீள்விக்கப்பட்டது