சி என் எம் - 31 (நெல்)
சி என் எம் - 31 (CNM-31) என்பது; 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, புதிய, குறுகிய மற்றும் மத்தியகாலம் என இரு கால அளவில் பயிராகும் நெல் வகையாகும்.[1] சூன் - செப்டம்பர் வரையிலான கோடைப் பருவத்தில் (Kharif)[1][தொடர்பிழந்த இணைப்பு] 135 நாட்களிலும், போரோ எனும் பருவத்தில் (Boro) 155 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், ஐ ஆர் 8 நெல் வகையிலிருந்து சடுதிமாற்றி உருவாக்கப்பட்ட நெல் வகையாகும். வண்டல் குழாய் போன்ற நடுத்தர நிலப் பகுதிகளில் நன்கு வளரத் தக்க இந்த நெற்பயிரின் தானியமணிகள், நீண்டு தங்க நிறத்தில் காணப்படுகிறது. 91 சென்டிமீட்டர் (91 cm) அரை குள்ளமான இந்த நெற்பயிர், ஒரு எக்டேருக்கு சுமார் 4400 - 4600 கிலோ (44-46 Q/ha) மகசூல் தரவல்லது. மேலும் இந்நெல் இரகம், வடகிழக்கு இந்திய பகுதியான மேற்கு வங்க மாநிலத்தில் பெரும்பான்மையாக பயிரிடப்படுகின்றது.[2]
சான்றுகள்
[தொகு]- ↑ நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Details of Rice Varieties : Page 2 - 52. CNM-31". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-07-10.