குறுவைக் களஞ்சியம் (நெல்)
Appearance
குறுவைக் களஞ்சியம் |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
வகை |
பாரம்பரிய நெல் வகை |
காலம் |
105 - 110 நாட்கள் |
மகசூல் |
ஏக்கருக்கு 1500 - 2000 கிலோ |
தோற்றம் |
பண்டைய நெல் இரகம் |
மாநிலம் |
தமிழ் நாடு |
நாடு |
இந்தியா |
குறுவைக் களஞ்சியம் (Kuruvai Kalanchiyam) என்று அழைக்கப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். தமிழகத்தின், ராமநாதபுரம் மாவட்டத்தித்தில், பிரதானாமாக விளைவதாக கருதப்படும் இந்நெல் வகை, பொய்க்காத பருவமழைக் காலத்தில் ஒரு ஏக்கருக்கு சுமார் 1500 - 2000 கிலோ தானிய மகசூலும், 1 டன் அளவுக்கு வைக்கோலும் கிடைப்பதாக கூறப்படுகிறது.[1]
பருவகாலம்
[தொகு]குறுகியக்கால பயிரான 110 நாட்கள் வயதுடைய இந்நெல் இரகத்தை, செப்டம்பர் மாதம் தொடங்கும் பின் சம்பா பருவத்தில் ( தமிழ் மதம் ஆவணியில்) விதைத்து, சனவரியில் (தமிழ் மதம் தையில்) அறுவடைச் செய்யபடுகிறது.[1] மேலும் இதேப் பருவத்தில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்யப்படுவதாக அறியப்படுகிறது.[2]
குறிப்புகள்
[தொகு]- குறுவைக் களஞ்சிய நெல் வகை நேரடி விதைப்பு முறையில், ஏக்கருக்கு 40 - 50 கிலோ விதை அளவு தேவைப்படுகிறது.[1]
- சிவப்பு சித்திரை கார் அரிசி கஞ்சியை விட குறுவை களஞ்சியத்தின் அரிசிக் கஞ்சி வேறுபடுவதோடு, சமைக்கப்பட்ட சோறு இரண்டு நாட்களுக்குப் பிறகும் சிறந்த சுவையுடன் இருக்கும் என கூறப்படுகிறது.[1]
- குறுவைக் களஞ்சிய நெல் சொரசொரப்புடைய கடினமான நெல் வகையாகும்.[3]
இவற்றையும் காண்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "Traditional Varieties grown in Tamil nadu - Kuruvai kalanchium". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - 2014 TNAU. பார்க்கப்பட்ட நாள் 2017-02-10.
- ↑ பாரம்பரிய நெல் வகைப் பட்டங்கள் |கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "10. Kuruvai Kalanchiyam". Archived from the original on 2017-05-14. பார்க்கப்பட்ட நாள் 2017-02-10.