உள்ளடக்கத்துக்குச் செல்

கௌதமி (எம் டி யு - 8002) (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கௌதமி (எம் டி யு - 8002) (Gautami (MTU-8002) என்பது; 1976[1] - 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, புதிய, மத்தியகால நெல் வகையாகும்.[2] ஆகத்து மாதம் தொடங்கும் சம்பா பருவத்திற்கு ஏற்றதாக கருதப்படும் இது, 138 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது. ஐ ஆர் 8 நெல் இரகத்தையும், எஸ் எல் ஓ 13 (SLO 13) எனும் நெல் இரகத்தையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட நெல் வகை, கடலோர நிலப் பகுதிகளில் நன்கு வளரத் தக்கது. மேலும் இந்த நெற்பயிரின் தானியமணிகள், குள்ளமாகவும், குறுகி தடித்தும் காணப்படுகிறது. ஒரு எக்டேருக்கு சுமார் 5000 - 5500 கிலோ (50-55 Q/ha) மகசூல் தரவல்ல இந்நெல் இரகம், தென்னிந்திய பகுதியான ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் பெரும்பான்மையாக பயிரிடப்படுகின்றது.[3]

சான்றுகள்

[தொகு]
  1. "Goutami MTU8002) IET 5003 Contributed by rkmp.ap on Tue, 2011-07-12 17:30". Archived from the original on 2017-06-12. பார்க்கப்பட்ட நாள் 2017-07-11.
  2. நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Details of Rice Varieties : Page: 2". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-07-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌதமி_(எம்_டி_யு_-_8002)_(நெல்)&oldid=3599753" இலிருந்து மீள்விக்கப்பட்டது