உள்ளடக்கத்துக்குச் செல்

அன்னமழகி (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்னமழகி
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
தோற்றம்
பண்டைய நெல் வகை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

அன்னமழகி (Annamazhagi) பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்றான இது, புல் வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். மிகவும் இனிப்பு சுவையுள்ள‌ இந்த நெல் (அரிசி), சகல சுரங்களையும், பித்த வெப்பத்தையும் போக்க கூடியதாகவும், மனித உடலுக்கு சுகத்தை கொடுக்க வல்லதாகவும் உள்ளது.[1][2] மேலும், இந்த அரிசியைச் சமைத்து மோர் சேர்த்து உண்டால் சிறுநீர் கழிப்பதால் ஏற்படும் எரிச்சல், தண்ணீர் தாகம், வயிற்றுப்போக்கு போன்றவைகளைப் போக்கும் எனக் கூறப்படுகிறது. இரவில் நீரூற்றிய சோற்றைப் பழையது என்பார்கள். இந்தப் பழையதை விடியற்காலையில் சோற்றில் உள்ள நீரோடு சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும் என்றும், உடலில் ஒளி உண்டாகும் என்றும், மற்றும் வெறிநோய் முற்றிலும் நீங்கும் எனவும் கருதப்படுகிறது.[3] பழைய சோற்றில் மோர் கலந்து சாப்பிட்டால் உடல் எரிச்சல், பித்தம், மனப்பிரமை முதலியவை நீங்குமென்றும், இரவில் நன்றாகத் தூக்கம் வருமென்றும் கூறப்படுகிறது. மிகுதியாக உண்டுவிட்டால், அப்பொழுதே உறக்கம் கண்களைத் தழுவும் என்பது குறிப்பிடத்தக்கது.[3]

அகத்தியர் குணபாடம்

[தொகு]

அன்ன மழகியரி ஆரோக்கிய ங்கொடுக்குந்
தின்ன வெகுரிசியாஞ் செப்பக்கேள் – இந்நிலத்து
நோயனைத்துந் தூளாய் நொறுங்கத் தகர்த்துவிடுந்
தீயனலைப் போக்குந் தெளி.

மேற்கூறிய பாடலின் பொருளானது, மிகுந்த சுவையுள்ள அன்னமழகி அரிசி, எல்லா சுரங்களையும், வெப்பத்தையும் போக்கி, உடற்கு நன்மை கொடுக்கும் என கூறப்படுகிறது.[4]


இவற்றையும் காண்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. "அரிசி வகைகளும், அதன் குணங்களும்". thamil.co.uk (தமிழ்) 3 5=6=. Archived from the original on 2016-12-27. Retrieved 2016-12-11.
  2. "அரிசி வகைகளும், அதன் குணங்களும்". முனைவர் கோ. நம்மாழ்வார்(தமிழ்) - 2016. Archived from the original on 2017-06-21. Retrieved 2017-01-02.
  3. 3.0 3.1 "அரிசி சாப்பாடு உடல் நலத்திற்குக் கேடா...?". ஒன்லிதமிழ் (தமிழ்) - 2015. Retrieved 2017-01-02.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "சித்தர்களின் கூற்றுப்படி -அரிசி வகைகள் -பயன்கள் -அறிவியல் ஆராய்ச்சி". Archived from the original on 2016-04-01. Retrieved 2017-01-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னமழகி_(நெல்)&oldid=3678900" இலிருந்து மீள்விக்கப்பட்டது