ஆடுதுறை - 9 (நெல்)
Appearance
ஆடுதுறை - 9 ADT 9 |
---|
வேளாண் பெயர் |
பொன் கார் |
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
கலப்பினம் |
நல் விதைத் தேர்வு முறை |
வகை |
புதிய நெல் வகை |
காலம் |
120 - 125 நாட்கள் |
மகசூல் |
4500 கிலோ எக்டேர் |
வெளியீடு |
1933 |
வெளியீட்டு நிறுவனம் |
TRRI (TNAU), ஆடுதுறை |
மாநிலம் |
தமிழ் நாடு |
நாடு |
இந்தியா |
ஏ டி டீ - 9 (ADT 9) பிரபலமாக பொன் கார் (Ponnkar) என்றழைக்கப்படும் இந்த நெல் வகை, நல் விதைத் தேர்வு (Pureline) முறையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]
வெளியீடு
[தொகு]தமிழக தஞ்சை மாவட்டத்தின், ஆடுதுறையில் அமைந்துள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (TRRI),[2] 1933 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[1]
காலம்
[தொகு]குறுகியகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 120 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது.[1] இதுபோன்ற நெடுங்கால நெற்பயிர்கள், நவரை, சொர்ணவாரி, கார், குறுவை, மற்றும் பின்தாளடி போன்ற பட்டங்கள் (பருவங்கள்) ஏற்றதாக கூறப்படுகிறது.[3]
சாகுபடி
[தொகு]நீர்ப்பாசன வசதியுள்ள, தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலும், மற்றும் புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.[2]
சிறப்புப் பண்புகள்
[தொகு]- இந்த நெல் இரகம், ஒரு ஏக்கருக்கு 4500 கிலோவரை ( 4.5 t/ha) மகசூல் தரக்கூடியது.
- இதன் தானியமணிகள், தடித்து குட்டையாக உள்ளது.
- இந்நேல்லின் அரிசி, வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது.
- ஆரம்ப குறுவை பருவத்தில் சாகுபடி செய்வதற்கு சிறந்த இரகமாக கருதப்படுகிறது.[1]
இவற்றையும் காண்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) - CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-08-03.
- ↑ 2.0 2.1 "Rice Knowledge Management Portal ADT 9". www.rkmp.co.in (ஆங்கிலம்) - 2011. பார்க்கப்பட்ட நாள் 2017-07-31.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Paddy Varieties of Tamil Nadu - Long duration varieties". www.agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - TNAU 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-08-03.