உள்ளடக்கத்துக்குச் செல்

பத்து பகாட் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்து பகாட் (P150)
மலேசிய மக்களவைத் தொகுதி
 ஜொகூர்
Batu Pahat (P150)
Federal Constituency in Johor
பத்து பகாட் மக்களவைத் தொகுதி
(P150 Batu Pahat)
மாவட்டம்பத்து பகாட் மாவட்டம்
வாக்காளர்களின் எண்ணிக்கை133,910 (2022)[1][2]
வாக்காளர் தொகுதிபத்து பகாட் தொகுதி
முக்கிய நகரங்கள்பத்து பகாட்; பண்டார் பெங்காராம்
பரப்பளவு446 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1955
கட்சி      பாக்காத்தான் அரப்பான்
மக்களவை உறுப்பினர்ஓன் அபு பக்கார்
(Onn Abu Bakar)
மக்கள் தொகை166,000 (2020)[4]
முதல் தேர்தல்மலாயா பொதுத் தேர்தல், 1955
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1]

பத்து பகாட் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Batu Pahat; ஆங்கிலம்: Batu Pahat Federal Constituency; சீனம்: 峇株巴辖国会议席) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் பத்து பகாட் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P150) ஆகும்.[5]

பத்து பகாட் மக்களவைத் தொகுதி 1955-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1955-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1955-ஆம் ஆண்டில் இருந்து பத்து பகாட் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]

பத்து பகாட் மாவட்டம்

[தொகு]

பத்து பகாட் மாவட்டம், ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்தின் தலைப்பட்டணமும் முக்கிய நிர்வாக மையமுமான பத்து பகாட் நகரம் கோலாலம்பூர் மாநகரில் இருந்து 239 கி.மீ.; மூவார் நகரில் இருந்து 50 கி.மீ.; குளுவாங் நகரில் இருந்து 52 கி.மீ.; ஜொகூர் பாரு நகரில் இருந்து 100 கி.மீ.; தொலைவில் அமைந்து உள்ளது.

இந்த மாவட்டத்திற்கு வடமேற்கில் மூவார் மாவட்டம்; தென்கிழக்கில் குளுவாங் மாவட்டம்; தெற்கில் பொந்தியான் மாவட்டம்; ஆக வடக்கில் சிகாமட் மாவட்டம் ஆகிய நான்கு மாவட்டங்கள் அமைந்து உள்ளன.

பத்து பகாட் நகரம், அண்மையில் பண்டார் பெங்காராம் (Bandar Penggaram) எனும் புதுப் பெயரைப் பெற்றது. இந்த நகரம் மிகத் துரிதமாக வளர்ச்சி பெற்று வருகிறது. இப்போது ஜொகூர் பாருவுக்கு அடுத்த நிலையில் ஜொகூர் மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமாகவும் வளர்ச்சி பெற்றுள்ளது.

பத்து பகாட் மக்களவைத் தொகுதி

[தொகு]




2022-இல் பத்து பகாட் மக்களவைத் தொகுதியின் வாக்காளர் இனப் பிரிவுகள்:[7]

  மலாயர் (53.6%)
  சீனர் (44.8%)
  இதர இனத்தவர் (0.3%)
பத்து பகாட் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1955 - 2023)
நாடாளுமன்றம் தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
பத்து பகாட் தொகுதி 1955-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது
கூட்டரசு சட்டமன்றம்
1-ஆவது மலாயா மக்களவை 1955–1957 செல்வசிங்கம் மெக்கந்தையர்
(Chelvasingam Maclunthlyre)
மலேசிய கூட்டணி
(மலேசிய இந்திய காங்கிரசு)
1957–1959 சையது எசா அல்வி
(Syed Esa Alwee)
மலேசிய கூட்டணி
(அம்னோ)
மலாயா மக்களவை
1-ஆவது மலாயா மக்களவை P093 1959–1963 காங் கோக் செங்
(Kang Kok Seng)
மலேசிய கூட்டணி
(மலேசிய சீனர் சங்கம்)
மலேசிய மக்களவை
1-ஆவது மலேசிய மக்களவை P093 1963–1964 காங் கோக் செங்
(Kang Kok Seng)
மலேசிய கூட்டணி
(மலேசிய சீனர் சங்கம்)
2-ஆவது மக்களவை 1964–1969 சோ ஆ தெக்
(Soh Ah Teck)
1969–1971 மக்களவை இடைநிறுத்தம்[8]
3-ஆவது மக்களவை P093 1971–1973 சோ ஆ தெக்
(Soh Ah Teck)
மலேசிய கூட்டணி
(மலேசிய சீனர் சங்கம்)
1973–1974 பாரிசான் நேசனல்
(மலேசிய சீனர் சங்கம்)
4-ஆவது மக்களவை P111 1974–1978 அப்துல் ஜலால் அபு பக்கர்
(Abdul Jalal Abu Bakar)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
5-ஆவது மக்களவை 1978–1982
6-ஆவது மக்களவை 1982–1986 டாவுட் தாகா
(Daud Taha)
7-ஆவது மக்களவை P125 1986–1990
8-ஆவது மக்களவை 1990–1995
9-ஆவது மக்களவை P135 1995–1999 மன்சூர் மசிகோன்
(Mansor Masikon)
10-ஆவது மக்களவை 1999–2004 சியாம் காசுரின்
(Siam Kasrin)
11-ஆவது மக்களவை P150 2004–2008 சுனைடி அப்துல் வகாப்
(Junaidy Abdul Wahab)
12-ஆவது மக்களவை 2008–2013 முகமட் புவாட் சர்காசி
(Mohd Puad Zarkashi )
13-ஆவது மக்களவை 2013–2018 முகமட் இட்ரிஸ் ஜுசி
(Mohd Idris Jusi)
பாக்காத்தான் ராக்யாட்
(மக்கள் நீதிக் கட்சி)
14-ஆவது மக்களவை 2018–2020 முகமட் ரசீட் அசுனோன்
(Mohd Rashid Hasnon)
பாக்காத்தான் அரப்பான்
(மக்கள் நீதிக் கட்சி)
2020–2022 பெரிக்காத்தான் நேசனல்
(பெர்சத்து)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில் ஓன் அபு பக்கர்
(Onn Abu Bakar)
பாக்காத்தான் அரப்பான்
(மக்கள் நீதிக் கட்சி)

பத்து பகாட் தேர்தல் முடிவுகள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
ஓன் அபு பக்கர்
(Onn Abu Bakar)
பாக்காத்தான் அரப்பான்45,24245.4710.45
முகமட் ரசிட் அசுனோன்
(Mohd Rashid Hasnon)
பெரிக்காத்தான் நேசனல்29,27029.4229.42
இசாக் @ முகமட் பாரிட் சிராஜ்
(Ishak @ Mohd Farid Siraj)
பாரிசான் நேசனல்24,30924.439.70
நிசாம் பசீர் அப்துல் கரீம் பசீர்
(Nizam Bashir Abdul Kariem Bashier)
உள்நாட்டு போராளிகள் கட்சி4100.410.41
சகாரி ஒசுமான்
(Zahari Osman)
மலேசிய மக்கள் கட்சி2630.260.26
மொத்தம்99,494100.00
செல்லுபடியான வாக்குகள்99,49498.82
செல்லாத/வெற்று வாக்குகள்1,1851.18
மொத்த வாக்குகள்1,00,679100.00
பதிவான வாக்குகள்/வருகை1,33,91075.209.61
      பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது
மூலம்: [9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.
  7. "chinapress". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
  8. "www.parlimen.gov.my" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2016-05-14.
  9. "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF JOHOR" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]