உள்ளடக்கத்துக்குச் செல்

இசுகந்தர் புத்திரி மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசுகந்தர் புத்திரி (P162)
மலேசிய மக்களவைத் தொகுதி
 ஜொகூர்
Iskandar Puteri (P162)
Federal Constituency in Johor
இசுகந்தர் புத்திரி மக்களவைத் தொகுதி
(P162 Iskandar Puteri)
மாவட்டம்ஜொகூர் பாரு மாவட்டம்
வாக்காளர்களின் எண்ணிக்கை222,437 (2022)[1][2]
வாக்காளர் தொகுதிஇசுகந்தர் புத்திரி தொகுதி
முக்கிய நகரங்கள்இசுகந்தர் புத்திரி; சுகூடாய்; கெலாங் பாத்தா; முத்தியாரா ரினி; லீமா கெடாய், கங்கார் பூலாய்; தஞ்சோங் குப்பாங்
பரப்பளவு294 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்2018
கட்சி      பாக்காத்தான் அரப்பான்
மக்களவை உறுப்பினர்லியூ சின் தோங்
(Liew Chin Tong)
மக்கள் தொகை447,697 (2020)[4][5]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2018
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1]

இசுகந்தர் புத்திரி மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Iskandar Puteri; ஆங்கிலம்: Iskandar Puteri Federal Constituency; சீனம்: 依斯干达公主城国会议席) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் ஜொகூர் பாரு மாவட்டம்; கூலாய் மாவட்டம் ஆகிய இரு மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P162) ஆகும்.[6]

இசுகந்தர் புத்திரி மக்களவைத் தொகுதி 2018-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2018-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

2018-ஆம் ஆண்டில் இருந்து இசுகந்தர் புத்திரி மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[7]

இசுகந்தர் மலேசியா

[தொகு]

இசுகந்தர் புத்திரி மக்களவைத் தொகுதி, ஜொகூர் மாநிலத்தின் இசுகந்தர் மலேசியா வளர்ச்சி மண்டலத்தில் உள்ள ஒரு தொகுதி ஆகும். இசுகந்தர் மலேசியா, தெற்கு ஜொகூர் பொருளாதார வளர்ச்சி மண்டலம் (South Johor Economic Region) (SJER) என்றும் அழைக்கப் படுகிறது.[8]

இசுகந்தர் மலேசியா சுமார் 2,217 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த மண்டலத்தில் ஜொகூர் பாரு மாநகரம், தெற்கு பொந்தியான், கூலாய், பாசிர் கூடாங், இசுகந்தர் புத்திரி ஆகிய பகுதிகள் உள்ளன.[9][10]

2006 நவம்பர் 6-ஆம் தேதி உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, மலேசியாவின் முதல் பொருளாதார வளர்ச்சி மண்டலம் ஆகும். பல பில்லியன் ரிங்கிட் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. உள்ளூர் மற்றும் தேசிய பொருளாதாரத்திற்குக் கணிசமான அளவிற்கு வளர்ச்சியை வழங்கும் வகையில் இந்தப் பொருளாதார மேம்பாட்டு மண்டலம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இசுகந்தர் புத்திரி மக்களவைத் தொகுதி

[தொகு]




இசுகந்தர் புத்திரி தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[11]

  மலாயர் (36.3%)
  சீனர் (47.2%)
  இதர இனத்தவர் (2.4%)





இசுகந்தர் புத்திரி தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022)

  ஆண் (50.07%)
  பெண் (49.93%)

இசுகந்தர் புத்திரி தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022)

  18-20 (7.48%)
  21-29 (23.76%)
  30-39 (21.23%)
  40-49 (18.09%)
  50-59 (15.08%)
  60-69 (9.58%)
  70-79 (3.72%)
  80-89 (0.89%)
  + 90 (0.17%)
இசுகந்தர் புத்திரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் (2018 - 2023)
நாடாளுமன்றம் தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
இசுகந்தர் புத்திரி தொகுதி 2018-ஆம் ஆண்டில்
கெலாங் பாத்தா தொகுதியில் இருந்து உருவாக்கப்பட்டது
14-ஆவது மக்களவை P162 2018–2022 லிம் கிட் சியாங்
(Lim Kit Siang)
பாக்காத்தான் அரப்பான்
(ஜனநாயக செயல் கட்சி)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில் லியூ சின் தோங்
(Liew Chin Tong)

தேர்தல் முடிவுகள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
லியூ சின் தோங்
(Liew Chin Tong)
பாக்காத்தான் அரப்பான்96,81959.1510.09
ஜேசன் தியோ சிவ் கோக்
(Jason Teoh Sew Hock)
பாரிசான் நேசனல்36,78322.478.29
தான் நாம் சா
(Tan Nam Cha)
பெரிக்காத்தான் நேசனல்30,07818.3818.38
மொத்தம்1,63,680100.00
செல்லுபடியான வாக்குகள்1,63,68098.75
செல்லாத/வெற்று வாக்குகள்2,0671.25
மொத்த வாக்குகள்1,65,747100.00
பதிவான வாக்குகள்/வருகை2,22,43774.4211.47
Majority60,03636.681.84
      பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது
மூலம்: [12]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. "PRU-15: Parlimen Tebrau pengundi paling ramai di Johor [METROTV]". 27 October 2022.
  6. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  7. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.
  8. "Iskandar Malaysia is an ambitious economic initiative which aims to develop a substantial and valuable growth corridor in Malaysia's Johor region, stretches over a designated region of 4,749 sq km – almost six-times the entire area of nearby neighbour Singapore". பார்க்கப்பட்ட நாள் 31 August 2022.
  9. Iskandar Regional Development Authority & Iskandar Malaysia Information Pack, 23 February 2007, Khazanah Nasional, pg 3, retrieved 3 March 2009
  10. "Iskandar Malaysia growth corridor doubles in size". பார்க்கப்பட்ட நாள் 22 February 2019.
  11. "chinapress". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
  12. "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF JOHOR" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]