உள்ளடக்கத்துக்குச் செல்

தெப்ராவ் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெப்ராவ் (P158)
மலேசிய மக்களவைத் தொகுதி
 ஜொகூர்
Tebrau (P158)
Federal Constituency in Johor
தெப்ராவ் மக்களவைத் தொகுதி
(P158 Tebrau)
மாவட்டம்ஜொகூர் பாரு மாவட்டம்; கூலாய் மாவட்டம்; கோத்தா திங்கி மாவட்டம்;
வாக்காளர்களின் எண்ணிக்கை223,301 (2022)[1][2]
வாக்காளர் தொகுதிதெப்ராவ் தொகுதி
முக்கிய நகரங்கள்உலு திராம்; பிளந்தோங்; தம்போய்
பரப்பளவு502 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1984
கட்சி      பாக்காத்தான் அரப்பான்
மக்களவை உறுப்பினர்ஜிம்மி புவா வீ இசு
(Jimmy Puah Wee Tse)
மக்கள் தொகை475,267 (2020)[4][5]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1986
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1]

தெப்ராவ் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Tebrau; ஆங்கிலம்: Tebrau Federal Constituency; சீனம்: 地不佬国会议席) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் ஜொகூர் பாரு மாவட்டம்; கூலாய் மாவட்டம்; கோத்தா திங்கி மாவட்டம் ஆகிய மூன்று மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P158) ஆகும்.[6]

தெப்ராவ் மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1986-ஆம் ஆண்டில் இருந்து தெப்ராவ் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[7]

ஜொகூர் பாரு மாவட்டம்

[தொகு]

ஜொகூர் பாரு மாவட்டம், ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு ஜொகூர் பாரு தலைநகரமாக விளங்குகிறது.

ஜொகூர் பாரு மாவட்டத்தின் நிர்வாகத் தலைநகரம் இசுகந்தர் புத்திரி. மாவட்ட எல்லைகளாக மேற்கில் பொந்தியான் மாவட்டம்; கிழக்கில் கோத்தா திங்கி மாவட்டம்; வடக்கே கூலாய் மாவட்டம்; தெற்கே ஜொகூர் நீரிணை உள்ளன.

ஜொகூர் பாரு மாவட்டம் நன்கு வளர்ச்சி பெற்ற ஒரு பெருநகர மயமான மாவட்டமாகும். இந்த மாவட்டத்தின் துரிதமான வளர்ச்சியினால், மூன்று துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு மூன்று தனித்தனிப் பிரிவுகளாக நிர்வாகம் செய்யப் படுகிறது.

தெப்ராவ் மக்களவைத் தொகுதி

[தொகு]




தெப்ராவ் தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[8]

  சீனர் (38.9%)
  இதர இனத்தவர் (4.8%)





தெப்ராவ் தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022)

  ஆண் (50.37%)
  பெண் (49.63%)

தெப்ராவ் தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022)

  18-20 (9.67%)
  21-29 (27.08%)
  30-39 (20.41%)
  40-49 (18.27%)
  50-59 (14%)
  60-69 (7.14%)
  70-79 (2.56%)
  80-89 (0.72%)
  + 90 (0.15%)
தெப்ராவ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1986 - 2023)
நாடாளுமன்றம் தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
தெப்ராவ் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது
7-ஆவது மக்களவை P129 1986–1990 சித்தி சைனாபோன் அபு பக்கர்
(Siti Zainabon Abu Bakar)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
8-ஆவது மக்களவை 1990–1995
9-ஆவது மக்களவை P140 1995–1999
10-ஆவது மக்களவை 1999–2004 முகமட் அலி அசன்
(Mohd. Ali Hassan)
11-ஆவது மக்களவை P158 2004–2008 தெங் பூன் சூன்
(Teng Boon Soon)
பாரிசான் நேசனல்
((மலேசிய சீனர் சங்கம்)
12-ஆவது மக்களவை 2008–2013
13-ஆவது மக்களவை 2013–2018 கூ சூ சியாங்
(Khoo Soo Seang)
14-ஆவது மக்களவை 2018–2021 சூங் சியாவ் இயூன்
(Choong Shiau Yoon)
பாக்காத்தான் அரப்பான்
(மக்கள் நீதிக் கட்சி)
2021 சுயேச்சை
2021–2022 மலேசிய தேசிய கட்சி
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில் ஜிம்மி புவா வீ இசு
(Jimmy Puah Wee Tse)
பாக்காத்தான் அரப்பான்
(மக்கள் நீதிக் கட்சி)

தெப்ராவ் தேர்தல் முடிவுகள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
ஜிம்மி புவா வீ இசு
(Jimmy Puah Wee Tse)
பாக்காத்தான் அரப்பான்83,95949.9912.10
முகமட் இசா முகமட் பாசிர்
(Mohamad Isa Mohamad Basir)
பெரிக்காத்தான் நேசனல்53,23931.7031.70
நிக்கோல் வோங் சியாவ் திங்
(Nicole Wong Siaw Ting)
பாரிசான் நேசனல்30,76718.327.96
மொத்தம்1,67,965100.00
செல்லுபடியான வாக்குகள்1,67,96599.14
செல்லாத/வெற்று வாக்குகள்1,4490.86
மொத்த வாக்குகள்1,69,414100.00
பதிவான வாக்குகள்/வருகை2,23,30175.909.78
Majority30,72018.2918.13
      பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது
மூலம்: [9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. "PRU-15: Parlimen Tebrau pengundi paling ramai di Johor [METROTV]". 27 October 2022.
  6. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  7. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.
  8. "chinapress". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
  9. "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF JOHOR" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]