உள்ளடக்கத்துக்குச் செல்

குளுவாங் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குளுவாங் (P152)
மலேசிய மக்களவைத் தொகுதி
 ஜொகூர்
Kluang (P152)
Federal Constituency in Johor
குளுவாங் மக்களவைத் தொகுதி
(P152 Kluang)
மாவட்டம்குளுவாங் மாவட்டம்
வாக்காளர்களின் எண்ணிக்கை132,342 (2022)[1][2]
வாக்காளர் தொகுதிகுளுவாங் தொகுதி
முக்கிய நகரங்கள்குளுவாங்; பாலோ; ககாங்; மெங்கிபோல்
பரப்பளவு256 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1974
கட்சி      பாக்காத்தான் அரப்பான்
மக்களவை உறுப்பினர்ஓங் சூ கி
(Wong Shu Qi)
மக்கள் தொகை183,855 (2020)[4]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1974
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1]

குளுவாங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kluang; ஆங்கிலம்: Kluang Federal Constituency; சீனம்: 居銮国会议席 என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் குளுவாங் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P152) ஆகும்.[5]

குளுவாங் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1974-ஆம் ஆண்டில் இருந்து குளுவாங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]

குளுவாங் மாவட்டம்

[தொகு]

குளுவாங் மாவட்டம், ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்தின் தலைப்பட்டணமும் முக்கிய நிர்வாக மையமும் குளுவாங் நகரம் ஆகும். ஜொகூர் மாநிலத்தில் நிலத்தால் சூழப்பட்ட மூன்று மாவட்டங்களில் குளுவாங் மாவட்டம் ஒன்றாகும்.

இந்த மாவட்டத்திற்கு வடக்கில் சிகாமட் மாவட்டம்; மேற்கில் பத்து பகாட் மாவட்டம்; கிழக்கில் மெர்சிங் மாவட்டம்; தெற்கில் பொந்தியான் மாவட்டம்; கூலாய் மாவட்டம்; கோத்தா திங்கி மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் அமைந்து உள்ளன.

குளுவாங் மாவட்டம் 8 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.

குளுவாங் மக்களவைத் தொகுதி

[தொகு]




2022-இல் குளுவாங் மக்களவைத் தொகுதியின் வாக்காளர் இனப் பிரிவுகள்:[7]

  மலாயர் (42.7%)
  சீனர் (46.3%)
  இதர இனத்தவர் (0.9%)
குளுவாங் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1974 - 2023)
நாடாளுமன்றம் தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
குளுவாங் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது
4-ஆவது மக்களவை P101 1974–1978 லோபூக் யென்
(Loh Fook Yen)
பாரிசான் நேசனல்
(மலேசிய சீனர் சங்கம்)
5-ஆவது மக்களவை 1978–1982 லீ காவ்
(Lee Kaw)
ஜனநாயக செயல் கட்சி
6-ஆவது மக்களவை 1982–1986 குவா வீ லியாம்
(Quah Wee Liam)
பாரிசான் நேசனல்
(மலேசிய சீனர் சங்கம்)
7-ஆவது மக்களவை P120 1986–1990 லிங் சூய் சியெங்
(Ling Chooi Sieng)
8-ஆவது மக்களவை 1990–1995 காங் சோ ஓ
(Kang Chow Oh)
9-ஆவது மக்களவை P130 1995–1999 கூ சியோங் சாங்
(Hoo Seong Chang)
10-ஆவது மக்களவை 1999–2004
11-ஆவது மக்களவை P152 2004–2008
12-ஆவது மக்களவை 2008–2013 ஆவ் கோக் சுங்
(Hou Kok Chung)
13-ஆவது மக்களவை 2013–2018 லியூ சின் தோங்
(Liew Chin Tong)
பாக்காத்தான் ராக்யாட்
(ஜனநாயக செயல் கட்சி)
14-ஆவது மக்களவை 2018–2022 ஓங் சூ கி
(Wong Shu Qi)
பாக்காத்தான் அரப்பான்
(ஜனநாயக செயல் கட்சி)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில்

குளுவாங் தேர்தல் முடிவுகள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
ஓங் சூ கி
(Wong Shu Qi)
பாக்காத்தான் அரப்பான்49,80152.087.12
கான் பிங் சியூ
(Gan Ping Sieu)
பாரிசான் நேசனல்23,39524.476.10
சுல்கர்னாயின் அலியாஸ்
(Dzulkarnain Alias)
பெரிக்காத்தான் நேசனல்22,02123.0323.03
ராமேந்திரன் உலகநாதன்
(Ramendran Ulaganathan)
சுயேச்சை4040.420.42
மொத்தம்95,621100.00
செல்லுபடியான வாக்குகள்95,62198.41
செல்லாத/வெற்று வாக்குகள்1,5411.59
மொத்த வாக்குகள்97,162100.00
பதிவான வாக்குகள்/வருகை1,32,34273.4211.03
Majority26,40627.611.02
      பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது
மூலம்: [8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.
  7. "chinapress". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
  8. "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF JOHOR" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]