உள்ளடக்கத்துக்குச் செல்

நரநாராயண் சேது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நரநாராயண் பாலம்

அசாமிய மொழி: নৰনাৰায়ণ সেতু Naranarayan Setu

தாண்டுவது பிரம்மபுத்திரா ஆறு
இடம் யோகிகோபா, அசாம்
வடிவமைப்பு Truss Bridge
மொத்த நீளம் 2.284 கிலோமீட்டர்கள் (1.419 mi)
திறப்பு நாள் ஏப்ரல் 15, 1998

நரநாராயண் பாலம், இந்திய மாநிலமான அசாமில் பாயும் பிரம்மபுத்திரா ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ளது. இப்பாலமானது இரண்டு அடுக்குகளைக் கொண்டது. கீழடுக்கில் தண்டவாளமும், மேலடுக்கில் சாலையும் அமைக்கப்பட்டுள்ளன. இது 2284 மீற்றர் நீளத்தில் அமைந்துள்ளது. இந்த பாலத்தின் மூலம் பஙாய்காமோ மாவட்டத்தில் உள்ள யோகிகோபா என்ற ஊரில் இருந்து, கோவால்பாரா மாவட்டத்தில் உள்ள பஞ்சரத்னா என்ற ஊருக்கு சென்று திரும்ப முடியும். இதை 1998ஆம் ஆண்டின் ஏப்ரல் பதினைந்தாம் நாளில், அப்போதைய இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாச்பாய் திறந்து வைத்தார். கட்டுமானப் பணிகளை பிரைத்வெய்டே, பர்ன் & ஜெசோப் கட்டுமான நிறுவனம் மேற்கொண்டது. மொத்தமாக 301 கோடி ரூபாய் செலவானது.[1][2] பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த நரநாராயண் என்ற அரசரின் நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டது.

மேலும் பார்க்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. "Naranarayan Setu In India". India9. India9. பார்க்கப்பட்ட நாள் 10 April 2011.
  2. "Model project on Construction of Naranarayan Setu over river Brahmaputra at Jogihopa" (PDF). Archived from the original (PDF) on 14 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 8 May 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

"https://ta.wikipedia.org/w/index.php?title=நரநாராயண்_சேது&oldid=3575440" இலிருந்து மீள்விக்கப்பட்டது