உள்ளடக்கத்துக்குச் செல்

அசாம் ரைப்பிள்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசாம் ரைப்பிள்ஸ்
சுருக்கம்AR
குறிக்கோள்வடகிழக்கின் காவலாளி (Sentinels of the North East)
துறையின் கண்ணோட்டம்
உருவாக்கம்1835
பணியாளர்கள்63,747 [1]
ஆண்டு வரவு செலவு திட்டம்6,061.87 கோடி (US$759.1 மில்லியன்) (2020-21)[2]
அதிகார வரம்பு அமைப்பு
Federal agencyIN
செயல்பாட்டு அதிகார வரம்புIN
ஆட்சிக் குழுஉள்துறை அமைச்சகம் (இந்தியா), பாதுகாப்புத் துறை அமைச்சகம் (இந்தியா)
Constituting instrument
  • அசாம் ரைப்பிள்ஸ் சட்டம், 2006 & விதிகள் 2010
பொது இயல்பு
செயல்பாட்டு அமைப்பு
தலைமையகம்சில்லாங், மேகாலயா, இந்தியா
அமைச்சர்
துறை நிருவாகி
  • லெப்டிணட் ஜெனரல், பிரதீப் சந்திரன் நாயர் [3], தலைமை இயக்குநர், அசாம் ரைப்பிள்ஸ்
அமைச்சுஇந்தியத் தரைப்படை
இணையத்தளம்
assamrifles.gov.in
வடகிழக்கின் காவலாளி எனப்படும் அசாம் ரைபிள்ஸ் படை குறித்து 1985-இல் வெளியிடப்பட்ட அஞ்சல் தலை

அசாம் ரைப்பிள்ஸ் (Assam Rifles) இந்தியத் துணை இராணுவப் படைகளில் மிகவும் பழமையானது. இதனை இந்தியாவை ஆண்ட பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு 1835-இல் நிறுவியது. இதற்கு 1917-இல் அசாம் ரைப்பிள்ஸ் என்று பெயரிடப்பட்டது. இப்படைகளின் முதன்மை நோக்கம், வடகிழக்கு இந்தியாவின் எல்லைகளை பாதுகாப்பதே. தற்போது இப்படைகளின் ஒரு பிரிவினர் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதிகளில் உள்நாட்டுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. முதலாம் உலகப் போரின் போது இப்படைகள் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் செயல்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது இப்படைகள், ஜப்பானுக்கு எதிராக பர்மாவில் தங்கி போரிட்டது. 1951-இல் திபெத்தை சீனா தன்னுடன் வலுகட்டாயமாக இணைத்துக் கொண்ட போது, அசாம் ரைபிள்ஸ் படைகள் திபெத்-அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லைகளை காத்தனர். மேலும் அசாம் ரைபிள்ஸ் படைகள் அருணாச்சலப் பிரதேசத்தில் சட்டம்-ஒழங்கு பணிகளை உள்ளூர் காவல்துறையுடன் இணைந்து மேற்கொள்கிறது.

அசாம் ரைபிள்ஸ் படைகள், இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் இயங்குகிறது. அசாம் ரைப்பிள்ஸ் படை 63,747 வீரர்களும்[4][5] , 45 பட்டாலியன்களும் கொண்டது. இந்தியத் தரைப்படையின் லெப்டினண்ட் ஜெனரல் பதவி தரத்தில் உள்ள அதிகாரி, இப்படைகளின் தலைமை இயக்குநராக செயல்படுகிறார். இப்படைகளின் தலைமையகம் மேகாலயா மாநிலத்தின் சில்லாங் நகரத்தில் உள்ளது.

இந்திய இராணுவத்தின் தலைமையில், அசாம் ரைபிள்ஸ் படைகள் உள்நாட்டு பாதுகாப்பு, தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைள், மற்றும் எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்கிற்து. மேலும் தொலைதூரத்தில் உள்ள எல்லைப்பகுதி மக்களுக்கு மருத்துவ வசதிகள் மற்றும் தொலைதொடர்பு வசதிகள் செய்து தருகிறது.[6] 2002-ஆம் ஆண்டு முதல் அசாம் ரைபிள்ஸ் படைகள் இந்திய-மியான்மர் எல்லைப்பகுதிகளை காவல் செய்கிறது.[7]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 8 ஆகத்து 2017. பார்க்கப்பட்ட நாள் 12 ஆகத்து 2017.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. "Expenditure Budget - Ministry of Home Affairs". Expenditure Budget | Union Budget of India. Ministry of Finance. Archived from the original on 26 May 2020. பார்க்கப்பட்ட நாள் 6 June 2020.
  3. https://m.economictimes.com/news/defence/lt-gen-pradeep-chandran-nair-takes-over-as-dg-of-assam-rifles/amp_articleshow/83139995.cms?amp_js_v=a6&amp_gsa=1&usqp=mq331AQHKAFQArABIA%3D%3D#aoh=16226027189466&referrer=https%3A%2F%2Fwww.google.com&amp_tf=From%20%251%24s&ampshare=https%3A%2F%2Fm.economictimes.com%2Fnews%2Fdefence%2Flt-gen-pradeep-chandran-nair-takes-over-as-dg-of-assam-rifles%2Farticleshow%2F83139995.cms
  4. See History of the Assam Rifles பரணிடப்பட்டது 10 மார்ச்சு 2009 at the வந்தவழி இயந்திரம்
  5. "MHA Annual Report 2016-2017" (PDF). Archived from the original (PDF) on 8 ஆகத்து 2017.
  6. Sharma 2008.
  7. "One Border One Force?". outlookindia.com.

ஆதார நூற்பட்டியல்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசாம்_ரைப்பிள்ஸ்&oldid=3603910" இலிருந்து மீள்விக்கப்பட்டது