உள்ளடக்கத்துக்குச் செல்

நகாமோ மாவட்டம்

ஆள்கூறுகள்: 26°21′00″N 92°40′00″E / 26.3500°N 92.6667°E / 26.3500; 92.6667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நகாமோ மாவட்டம்
নগাঁও জিলা
மாவட்டம்
Location of Nagaon district in Assam
Location of Nagaon district in Assam
நாடுஇந்தியா
மாநிலம்அசாம்
தலைமையகம்நகோன்
இணையதளம்nagaon.gov.in

நகாமோ மாவட்டம் இந்திய மாநிலமான அசாமில் உள்ளது. இது அசாமில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட மாவட்டம் ஆகும். [1] இதன் தலைமையகம் நகோன்வில் உள்ளது. இந்த மாவட்டம் 3831 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. [2] காசிரங்கா தேசியப் பூங்காவின் சில பகுதிகள், இந்த மாவட்டத்தின் வரையறைக்குள் வருகின்றன.

பொருளாதாரம்

[தொகு]

இங்கு நெல் பயிரிடுகின்றனர். உழவுத் தொழிலே முதன்மையானது. இங்கு நெசவு ஆலைகளும், தேயிலை, சணல் தொழிற்சாலைகளும் உள்ளன.

மக்கள் தொகை

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது, 2,826,006 மக்கள் வாழ்கின்றனர். [1] சதுர கிலோமீட்டருக்குள் 711 பேர் வசிக்கின்றனர். [1] பால் விகிதத்தில், ஆயிரம் ஆண்களுக்கு ஈடாக 962 பெண்கள் உள்ளனர். [1] இங்கு வசிக்கும் மக்களில் 74% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். [1] இங்கு முஸ்லீம்கள் பெரும்பான்மையினராக வாழ்கின்றனர். குறிப்பிடத்தக்க அளவில் இந்துக்களும் வாழ்கின்றனர்.

இங்கு அசாமிய மொழி, வங்காளம், இந்தி, போடோ, கர்பி, திமாசா, மணிப்பூரி ஆகிய மொழிகளைப் பேசும் மக்கள் வாழ்கின்றனர். அசாமிய மொழியை பொது மொழியாகப் பயன்படுத்துகின்றனர்.

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
  2. Srivastava, Dayawanti et al. (ed.) (2010). "States and Union Territories: Assam: Government". India 2010: A Reference Annual (54th ed.). புது தில்லி, இந்தியா: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting, இந்திய அரசு. pp. 1116. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-230-1617-7. பார்க்கப்பட்ட நாள் 2011-10-11. {{cite book}}: |last1= has generic name (help)

இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=நகாமோ_மாவட்டம்&oldid=3849522" இலிருந்து மீள்விக்கப்பட்டது