தின்சுகியா மாவட்டம்
Tinsukia District தின்சுகியா மாவட்டம் তিনিচুকীয়া জিলা | |
---|---|
Tinsukia District தின்சுகியாமாவட்டத்தின் இடஅமைவு அசாம் | |
மாநிலம் | அசாம், இந்தியா |
தலைமையகம் | தின்சுகியா |
பரப்பு | 3,790 km2 (1,460 sq mi) |
மக்கட்தொகை | 1,316,948 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 347/km2 (900/sq mi) |
படிப்பறிவு | 70.92% |
பாலின விகிதம் | 948 பெண்கள் / 1000 ஆண்கள் |
வட்டங்கள் | 1. தின்சுகியா, 2. சதியா, 3. மார்கேரிடா, 4. டுமடுமா |
மக்களவைத்தொகுதிகள் | 1.திப்ருகார் (திப்ருகார் மாவட்டத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளது), 2.லக்கிம்பூர் (லக்கிம்பூர், தேமாஜி மாவட்டங்களுட பகிர்ந்துகொண்டுள்ளது) |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 1. தின்சுகியா, 2. டிக்போய், 3. டுமடுமா, 4. மார்கேரிடா, 5. சதியா |
முதன்மை நெடுஞ்சாலைகள் | NH 37, NH 38, NH 153 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
தின்சுகியா மாவட்டம் இந்திய மாநிலமான அசாமில் உள்ளது. இதன் தலைமையகம் தின்சுகியா நகரில் உள்ளது. இந்த மாவட்டம் 3790 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. [1]
பொருளாதாரம்
[தொகு]இங்கு தேயிலை, ஆரஞ்சு, இஞ்சி ஆகியவற்றையும் பயிரிடுகின்றனர். இங்கு ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் கிளை அமைந்துள்ளது. டிக்பாய் நகரியத்தில் இந்திய ஆயில் கார்பரேசனுக்கு சொந்தமான கச்சா எண்ணெய்க் கிணறுகளும், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் உள்ளது.
போக்குவரத்து
[தொகு]இந்த மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஓடுகின்றன. 40 கிலோமீட்டர் தொலைவில் திப்ருகார் விமான நிலையம் அமைந்துள்ளது.
மக்கள் தொகை
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது, 1,316,948 மக்கள் வாழ்ந்தனர். [2] சதுர கிலோமீட்டருக்குள் 347 பேர் என்ற அளவில் மக்கள் அடர்த்தி உள்ளது. [2] ஆயிரம் ஆண்களுக்கு ஈடாக 948 பெண்கள் வாழ்கின்றனர். [2] இங்கு வாழ்வோரில் 70.92% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். [2] இங்கு அதிகளவில் இந்துக்கள் வாழ்கின்றனர். பலர் பழங்குடியின மக்கள் ஆவர். மக்கள் நேபாளி, பீகாரி, வங்காள மொழி ஆகியவற்றை பேசுகின்றனர்.
சான்றுகள்
[தொகு]- ↑ Srivastava, Dayawanti et al. (ed.) (2010). "States and Union Territories: Assam: Government". India 2010: A Reference Annual (54th ed.). புது தில்லி, இந்தியா: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting, இந்திய அரசு. pp. 1116. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-230-1617-7. பார்க்கப்பட்ட நாள் 2011-10-11.
{{cite book}}
:|last1=
has generic name (help) - ↑ 2.0 2.1 2.2 2.3 "மாவட்டக் கணக்கெடுப்பு - 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
இணைப்புகள்
[தொகு]