பீகாரி மொழிகள்
பிகாரி | |
---|---|
பிராந்தியம் | பீகார் |
இந்தோ-ஐரோபியன்
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | bh |
ISO 639-2 | bih |
ISO 639-3 | – |
பிகாரி மொழிகள் (Bihari languages) என்பது இந்தியாவிலுள்ள பீகாரில் பேசப்படும் மொழிகளை குறிக்கும். இம்மொழிகள் இந்தோ ஐரோப்பிய மொழிகளின் கீழ்வரும் இந்தோ ஆரிய மொழிக்குடும்பத்தை சேர்ந்தவை. இம்மொழிகள் முக்கியமாக இந்திய மாநிலங்களான பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் மற்றும் உத்தரப் பிரதேசம் மற்றும் நேபாளத்தில் பேசப்படுகிறது.[1][2]
இந்த மொழிகளை பேசுபவர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தபோதிலும், 'மைதிலி' மட்டுமே இந்தியாவில் அரசியலமைப்பு அங்கீகாரம் பெற்றது, இது இந்திய அரசியலமைப்பின் 92 வது திருத்தத்தின் மூலம் அரசியலமைப்பு அந்தஸ்தை பெற்றது, 2003 ஆம் ஆண்டில் (2004 இல் அங்கீகாரம் பெற்றது). [3] மைதிலி மற்றும் போஜ்பூரி இரண்டும் நேபாளத்தில் அரசியலமைப்பு அங்கீகாரம் பெற்றுள்ளது.[4] பீகாரில், கல்வி மற்றும் உத்தியோகபூர்வ விஷயங்களுக்கு பயன்படுத்தப்படும் மொழி இந்தியாகும்.[5] இந்த மொழிகள் 1961 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தி உச்சரிப்பாகவே இருந்தன. இது மாநில மற்றும் தேசிய அரசியலில் இம்மொழிகள் ஆபத்தான நிலைமைகளை உருவாக்குகிறது.[6] 1950இல் சுதந்திரம் அடைந்த பிறகு பீகார் அதிகாரப்பூர்வ மொழிச் சட்டத்தில் இந்திமொழிக்கு உத்தியோகபூர்வ அந்தஸ்து வழங்கப்பட்டது. 1981 ல் பீகாரில் ஒரே அதிகாரப்பூர்வ மொழியாக இருந்த இந்தி அகற்றப்பட்டது[7]. உருது இரண்டாவது அதிகாரப்பூர்வ மொழியின் நிலையை பெற்றது.[சான்று தேவை]
மொழி பேசுபவர்கள்
[தொகு]பிகாரி மொழிகளை பேசுபபவர்கள் பற்றிய எண்ணிக்கை பற்றிய சரியான ஆதாரமின்மை காரணமாக கணக்கெடுப்பது மிகவும் கடினமாகும். நகர்ப்புற பிராந்தியத்தில் இந்த மொழியின் பெயரை இந்தி மொழியில் மொழி பெயர்த்துள்ளதாலும், அவர்கள் சாதாரண சூழல்களில் பயன்படுத்துவதாலும், அதைப்பற்றி தெரியாத காரணத்தினாலும். இந்த பிராந்தியத்தின் படித்த மற்றும் நகர்ப்புற மக்கள் தங்கள் மொழிக்கான பொதுவான பெயராக இந்தி என்று நம்புகின்றனர்[8].
பிகாரி குழுவில் சேர்க்கப்பட்ட சில முக்கிய மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகள்
[தொகு]மொழி[9] | ஐ.எசு.ஓ 639-3 | எழுத்துகள் | பேசுபவர்களின் எண்ணிக்கை[8] | புவியியல் ரீதியான பரவல் |
---|---|---|---|---|
அங்கிகா | அன்ப் | முன்னதாக அங்க லிபி; தேவநாகரி | 743,600[10] | கிழக்கு பீகார், வடகிழக்கு சார்க்கண்ட், மேற்கு வங்காளம் மற்றும் கிழக்கு மதேசி மக்கள் |
பஜ்ஜிக்கா மொழி | — | முன்னதாக திர்குட்டா; தேவநாகரி | 8,738,000[சான்று தேவை] | வட மத்திய பீகார் மற்றும் கிழக்கு மதேசி மக்கள் |
போஜ்புரி | போ | முன்னதாக கைத்தி; தேவநாகரி | 39,519,400[11] | வடக்கு பீகார், கிழக்கு உத்தரப் பிரதேசம், வடமேற்கு சார்க்கண்ட், வடக்கு சத்தீசுகர், வடகிழக்கு மத்தியப் பிரதேசம் மற்றும் மத்திய மதேசி மக்கள் |
கோர்த்தா | என்.ஏ | பெங்காலி எழுத்து, தேவநாகரி | 8.04 மில்லியன் [12] | வட கிழக்கு சார்க்கண்ட் |
குடுமலி | kyw | தேவநாகரி, சிச் (அதன் சாத்தியமான ஸ்கிரிப்டாக பரிந்துரைக்கப்படுகிறது) | 556,809 [13] | வட கிழக்கு சார்க்கண்ட், மேற்கு வங்காளம் |
மகாஹி | மேக் | முன்னதாக கைத்தி; தேவநாகரி | 14,035,600[11] | வடக்கு பீகார் |
மைதிலி | மை | திருகுட்டா, கைத்தி மற்றும் தேவநாகரி | 33,890,000[11] | வடக்கு மற்றும் கிழக்கு பீகார், சார்க்கண்ட்[14] மற்றும் கிழக்கு மதேசி மக்கள் |
பஞ்சபர்கானியா | tdb | தேவநாகரி, சில நேரங்களில் பெங்காலி & கைத்தி | 274,000[சான்று தேவை] | மேற்கு வங்காளம், சார்க்கண்ட் மற்றும் அசாம் |
நாக்புரி | sck | தேவநாகரி | 5.1 மில்லியன் [15] | மேற்கு மத்திய சார்க்கண்ட் வட கிழக்கு சத்தீசுகர் வடக்கு ஒடிசா |
சுர்ஜாபுரி | sjp | தேவநாகரி | 2,256,228 [16] | வட கிழக்கு பீகார் |
பிகார் மொழியில் ஒருசில மொழிகளில் மைதிலி மொழி கலந்திருப்பதாகவும், மேலும் பிற பிகாரி மொழிகளுடன் ஒப்பிடுகையில் அது அண்டைமாநில மொழியான பெங்காலிக்கு மிகவும் ஒற்றுமைகள் இருப்பதைக் குறிப்பிடுகிறது
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Yadava, Y. P. (2013). Linguistic context and language endangerment in Nepal. Nepalese Linguistics 28: 262–274.
- ↑ "Language, Religion and Politics in North India". p. 67. Retrieved 1 April 2017.
- ↑ "The Constitution (Ninety-Second Amendment) Act, 2003". National Portal of India. 7 January 2004. Archived from the original on 12 April 2015. Retrieved 11 April 2015.
- ↑ https://www.thehindu.com/todays-paper/tp-in-school/nepal/article24876497.ece
- ↑ Damani, Guarang (2015). "History of Indian Languages". Die-hard Indian. Archived from the original on 13 April 2015. Retrieved 11 April 2015.
- ↑ Verma, Mahandra K.. "Language Endangerment and Indian languages : An exploration and a critique". Linguistic Structure and Language Dynamics in South Asia.
- ↑ Brass, Paul R. (8 September 1994). The Politics of India Since Independence (Second ed.). கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். p. 183. ISBN 9780521459709. Retrieved 11 April 2015.
- ↑ 8.0 8.1 Cardona, George; Jain, Dhanesh, eds. (11 September 2003). The Indo-Aryan Languages. Routledge Language Family Series. Routledge. p. 500. ISBN 978-0415772945.
...the number of speakers of Bihari languages are difficult to indicate because of unreliable sources. In the urban region most educated speakers of the language name Hindi as their language because this is what they use in formal contexts and believe it to be the appropriate response because of lack of awareness. The uneducated and the urban population of the region return Hindi as the generic name for their language.
- ↑ Bihari Languages பரணிடப்பட்டது 2012-01-04 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Archived copy". Archived from the original on 2016-03-24. Retrieved 2016-03-17.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ 11.0 11.1 11.2 "India". Ethnologue. 2016. Archived from the original on 2 October 2017.
- ↑ "Statement 1: Abstract of speakers' strength of languages and mother tongues - 2011". www.censusindia.gov.in. Office of the Registrar General & Census Commissioner, India. Retrieved 2018-07-07.
- ↑ "Statement 1: Abstract of speakers' strength of languages and mother tongues - 2011". www.censusindia.gov.in. Office of the Registrar General & Census Commissioner, India. Retrieved 2018-07-07.
- ↑ https://m.livehindustan.com/jharkhand/story-maithili-will-get-second-state-language-status-in-jharkhand-1835624.html
- ↑ "Statement 1: Abstract of speakers' strength of languages and mother tongues - 2011". www.censusindia.gov.in. Office of the Registrar General & Census Commissioner, India. Retrieved 2018-07-07.
- ↑ "Statement 1: Abstract of speakers' strength of languages and mother tongues - 2011". www.censusindia.gov.in. Office of the Registrar General & Census Commissioner, India. Retrieved 2018-07-07.
வெளி இணைப்புகள்s
[தொகு]- A Comparative dictionary of the Bihārī language, Volume 1 By August Friedrich Rudolf Hoernle, Sir George Abraham Grierson (1885)
- Translation of useful phrases in Angika, Bhojpuri and Maithili
- Documentation for ISO 639 identifier: bih பரணிடப்பட்டது 2006-07-19 at the வந்தவழி இயந்திரம், on www.sil.org
- Nalanda Open University offers courses on Bihari languages (Magahi, Bhojpuri, Maithili)
- incubator:Wp/anp/Main Page|Angika Language Wikipedia (incubator)