உள்ளடக்கத்துக்குச் செல்

இலித்தியம் இருசிலிக்கேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலித்தியம் இருசிலிக்கேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இலித்தியம் இருசிலிக்கேட்டு
Lithium disilicate
இனங்காட்டிகள்
66402-68-4[1]
ChemSpider 129431410
EC number 266-340-9
InChI
  • InChI=1S/2Li.O5Si2/c;;1-6(2)5-7(3)4/q2*+1;-2
    Key: WVMPCBWWBLZKPD-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 101943115
  • [Li+].[Li+].[O-][Si](=O)O[Si](=O)[O-]
UNII PDM70D5IQL
பண்புகள்
Li2O5Si2
வாய்ப்பாட்டு எடை 150.04 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Inlay (Lithium disilicate)

இலித்தியம் இருசிலிக்கேட்டு (Lithium disilicate) என்பது Li2Si2O5) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மாகும். ஒரு கண்ணாடி பீங்கான் வகை சேர்மமாக இது வகைப்படுத்தப்படுகிறது. இதன் வலிமை, இயந்திரத்திறன் மற்றும் ஒளிஊடுருவக்கூடிய தன்மை காரணமாக இது பல் பீங்கான் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இச்சேர்மம் இலித்தியம் டைசிலிக்கேட்டு என்ற பெயராலும் அறியப்படுகிறது.

பயன்கள்

[தொகு]

Li2Si2O5) வடிவில் பல் முகடுகள், பற்பாலங்கள் மற்றும் பல் மெல்லுறைகள் போன்ற பல் மறுசீரமைப்புகளுக்கான பல் பீங்கான் பொருளாக பல் மருத்துவத்தில் இலித்தியம் இருசிலிக்கேட்டு பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. இலித்தியம் இருசிலிகேட் ஓர் அசாதாரண நுண்ணிய அமைப்பைக் கொண்டுள்ளது. பல சீரற்ற முறையில் சிறிய மற்றும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட தகடு போன்ற ஊசி போன்ற படிகங்களைக் கொண்டுள்ளது. இந்த அமைப்பு விரிசல்களை திசைதிருப்பவும், மழுங்கடிக்கவும் மற்றும்/அல்லது கிளைகளாக மாற்றவும் செய்கிறது. விரிசல்களை வளரவிடாமலும் தடுக்கிறது.[2] இலித்தியம் இருசிலிக்கேட்டு 360 மெகாபாசுக்கல் முதல் 400 மெகாபாசுக்கல் வரையிலான வரம்பில் ஓர் இருமுனை நெகிழ்வு வலிமையைக் கொண்டுள்ளது; ஒப்பிடுகையில், உலோக பீங்கான்களுக்கு இது சுமார் 80 முதல் 100 மெகாபாசுக்கல் மட்டுமேயாகும். மெல்லுறை சிர்கோனியாவிற்கு இது தோராயமாக 100 மெகாபாசுக்கல் ஆகும். இலியூசைட்டு கண்ணாடி பீங்கான் தோராயமாக 150 முதல் 160 மெகாபாசுக்கல் அளவாகும். இலித்தியம் இருசிலிக்கேட்டின் கடினத்தன்மை மதிப்பு மிகவும் அதிகமாகும். (5.92 +/- 0.18 கிகாபாசுக்கல்) மேலும் இதன் முறிவுக் கடினத்தன்மை (3.3 +/- 0.14 மெகாபாசுக்கல் m1/2) என்ற அளவில் உள்ளது. கூடுதலாக, இலித்தியம் இருசிலிக்கேட்டு இயற்கையான மனித பற்களைப் போலவே தோற்றமளிக்கும்.

இலித்தியம் இருசிலிக்கேட்டு அதிக வெப்ப விரிவாக்கத்தைக் கொண்டிருப்பதால், நிக்கல் மீகலப்புலோகங்கள் அல்லது துருப்பிடிக்காத எஃகு ஆகியவற்றில் கடத்துத்திறன் அல்லாத முத்திரை, பற்சிப்பி போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது.[3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ivoclar Vivadent AG (8 November 2012). "Safety data sheet" (PDF). Retrieved 2 March 2020.
  2. Shenoy A, Shenoy N (2010). "Dental ceramics: An update.". J Conserv Dent 13 (4): 195–203. doi:10.4103/0972-0707.73379. பப்மெட்:21217946. 
  3. Holand, Wolfram; Beall, George H. (2019). Glass-Ceramic Technology (in ஆங்கிலம்). John Wiley & Sons. ISBN 978-1-119-42369-0.
  4. Dai, Steve (September 2015). "Reduction-oxidation Enabled Glass-ceramics to Stainless Steel Bonding Part I: screening of doping oxidants". Sandia Journal Manuscript; Not Yet Accepted for Publication (OSTI). https://www.osti.gov/servlets/purl/1427268. பார்த்த நாள்: 2 March 2020.