எல்-செலக்ட்ரைடு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இலித்தியம் டிரை-ஈரிணைய-பியூட்டைல்(ஐதரிடோ)மோரேட்டு(1-)
| |
இனங்காட்டிகள் | |
38721-52-7 | |
ChemSpider | 2006164 |
EC number | 254-101-1 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 2723989 |
| |
பண்புகள் | |
C12H28BLi | |
வாய்ப்பாட்டு எடை | 190.10 கி/மோல் |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 0.870 கி/மி.லி |
தண்ணீருடன் தீவிரமாக வினைபுரியும் | |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | தண்ணீரில் வினைபுரியும், தீப்பற்றும், கண்கள், தோலில் எரிச்சல் உண்டாக்கும். |
தீப்பற்றும் வெப்பநிலை | -17 °பாரன்கீட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
எல்-செலக்ட்ரைடு (L-selectride) என்பது C12H28BLi என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமபோரேன் ஆகும். கரிம வேதியியலில் இதுவோர் ஒடுக்கும் முகவராகப் பயன்படுத்தப்படுகிறது. கீட்டோன் ஒடுக்க வினை இதற்கு உதாரணமாகும். சிட்ரைக்னைன் என்ற ஆல்கலாய்டு தயாரிக்க உதவும் ஓவர்மான் தொகுப்பு வினையில் இவ்வினை ஒரு பகுதியாகும் [1]
சில சூழ்நிலைகளில் மட்டும் எல்-செலக்ட்ரைடு சில தேர்ந்தெடுக்கப்பட்ட ஈனோன்களை இணை அணுக்கருகவர் கூட்டுவினையில் ஐதரைடை இணைப்பதன் மூலம் ஒடுக்கம் செய்கிறது. இதனால் கார்பனைல் கார்பன் தொடர்புடைய β- நிலையில் பெரிய ஐதரைடு வினையாக்கி இடக்காரணி தடையை சந்திக்க நேர்கிறது[2]. எல்-செலக்ட்ரைடானது கார்பனைல் குழுக்களை 1,2-நடைமுறையில் முப்பரிமான தேர்வுடன் ஒடுக்குகிறது. மீண்டும் இங்கும் ஐதரைடு மின்னாக்கியின் இடக்காரணி இயல்பு முன் நிற்கிறது[3]
என்-செலக்ட்ரைடும் கேல்-செலக்ட்ரைடும் எல்-செலக்ட்ரைடுடன் தொடர்புடைய சேர்மங்களாகும். ஆனால் இவற்றில் நேர்மின் அயனியாக இருக்கும் இலித்தியத்திற்குப் பதிலாக அவற்றில் முறையே சோடியமும் பொட்டாசியமும் நேர்மின் அயனிகளாக உள்ளன. இவ்வினையாக்கிகள் சில வேளையில் மாற்றாகவும் பயனாகின்றன. உதாரணமாக கனிம வேதியியலில் சோடியம் இரசக்கலவைக்குப் பதிலாக எல்-செலக்ட்ரைடு பயன்படுத்தப்பட்டது.
ஆப்ரிபிடேண்டு என்ற வாந்தியடக்கி மருந்திலும் எல்-செலக்ட்ரைடு பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ S. D. Knight, L. E. Overman and G. Pairaudeau (1993). "Synthesis applications of cationic aza-Cope rearrangements. 26. Enantioselective total synthesis of (−)-strychnine". J. Am. Chem. Soc. 115 (20): 9293–9294. doi:10.1021/ja00073a057.
- ↑ வார்ப்புரு:Clayden
- ↑ Scott A. Miller and A. Richard Chamberlin (1989). "Highly selective formation of cis-substituted hydroxylactams via auxiliary-controlled reduction of imides". J. Org. Chem. 54 (11): 2502–2504. doi:10.1021/jo00272a004.