இலித்தியம் அறுபுளோரோசிலிக்கேட்டு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இருலித்தியம்; அறுபுளோரோசிலிகான்(2-)
| |
வேறு பெயர்கள்
இருலித்தியம் அறுபுளோரோசிலிக்கேட்டு
| |
இனங்காட்டிகள் | |
17347-95-4 | |
ChemSpider | 11254702 |
EC number | 241-372-6 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 13629069 |
| |
பண்புகள் | |
F6Li2Si | |
வாய்ப்பாட்டு எடை | 155.96 g·mol−1 |
தோற்றம் | வெண்மையான தூள் |
அடர்த்தி | 2.33 கி/செ.மீ3 |
கரையும் | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H302 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இலித்தியம் அறுபுளோரோசிலிக்கேட்டு (Lithium hexafluorosilicate) என்பது Li2SiF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1][2]
தயாரிப்பு
[தொகு]அறுபுளோரோசிலிசிக் அமிலத்தை இலித்தியம் ஐதராக்சைடு அல்லது இலித்தியம் கார்பனேட்டுடன் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலமோ அல்லது சிலிகான் டெட்ராபுளோரைடை இலித்தியம் புளோரைடுடன் வினைபுரியச் செய்வதன் மூலமோ இலித்தியம் அறுபுளோரோசிலிக்கேட்டை தயாரிக்க முடியும்.[3]
- H2[SiF6] + 2LiOH -> Li2[SiF6] + 2H2O
இயற்பியல் பண்புகள்
[தொகு]இலித்தியம் அறுபுளோரோசிலிக்கேட்டு நீர் மற்றும் மெத்தனாலில் கரையும். வெள்ளை நிறத்தில் மணமற்ற திடப்பொருளாகக் காணப்படுகிறது. 250 °செல்சியசு வெப்பநிலைக்கு மேல் சூடாக்கப்படும் போது, இது இலித்தியம் புளோரைடு மற்றும் சிலிக்கான்(IV) புளோரைடாக சிதைகிறது. P 321 (எண் 150) என்ற இடக்குழுவில் ஓர் அலகு செல்லுக்கு மூன்று வாய்பாட்டு அலகுகளுடன் முக்கோண படிககட்டமைப்பை கொண்டுள்ளது, சோடியம் அறுபுளோரோசிலிக்கேட்டு சேர்மத்தின் படிகக் கட்டமைப்பை ஒத்துள்ளது.[4][5]
பயன்கள்
[தொகு]இலித்தியம் அறுபுளோரோசிலிக்கேட்டு மருந்துகள் மற்றும் பிற வேதிச் சேர்மங்கள் தயாரிப்பில் ஓர் இடைநிலையாக பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Lithium Hexafluorosilicate". American Elements (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 17 June 2024.
- ↑ "Lithium hexafluorosilicate (CAS 17347-95-4)". Santa Cruz Biotechnology. பார்க்கப்பட்ட நாள் 17 June 2024.
- ↑ Macintyre, Jane E. (15 July 1993). Dictionary of Inorganic Compounds, Supplement 1 (in ஆங்கிலம்). CRC Press. p. 303. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-49090-3. பார்க்கப்பட்ட நாள் 17 June 2024.
- ↑ Hinteregger; Wurst; Niederwieser; Heymann; Huppertz (1 March 2014). "Pressure-supported crystal growth and single-crystal structure determination of LiSiF" (in en). Zeitschrift für Kristallographie – Crystalline Materials 229 (2): 77–82. doi:10.1515/zkri-2013-1622. பன்னாட்டுத் தர தொடர் எண்:2196-7105. https://www.degruyter.com/document/doi/10.1515/zkri-2013-1622/html. பார்த்த நாள்: 17 June 2024.
- ↑ Haynes, William M. (9 June 2015). CRC Handbook of Chemistry and Physics, 96th Edition (in ஆங்கிலம்). CRC Press. p. 4-72. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4822-6097-7. பார்க்கப்பட்ட நாள் 17 June 2024.