அவுராகாட்
அவுராகாட்
Hawar-Digathai | |
---|---|
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் அவுராகாட் நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 26°05′14″N 93°08′17″E / 26.08722°N 93.13806°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அசாம் |
மாவட்டம் | கர்பி ஆங்கலாங்கு |
அரசு | |
• வகை | பேரூராட்சி |
• நிர்வாகம் | அவுராகாட் பேரூராட்சி |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 46,590 |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | அசாமிய மொழி, ஆங்கிலம் |
• வட்டார மொழிகள் | கர்பி, திமசா மொழிகள் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | AS |
அவுராகாட் (Howraghat), வடகிழக்கு இந்தியாவின் அசாம் மாநிலத்தில் கிழக்கில் அமைந்த கர்பி ஆங்கலாங்கு மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். இந்நகரத்தில் கர்பி, திமசா கச்சரி, திவா கச்சரி, போடோ கச்சரி மொழிகள் பேசும் பழங்குடி மக்கள் அதிகம் வாழ்கின்றனர்.
அமைவிடம்
[தொகு]அவுராகாட் நகரம், மாவட்டத் தலைமையிடமான திபு நகரத்திற்கு வடமேற்கே 70.6 நகரத்திலிருந்து கிலோ மீட்டர் தொலைவிலும்; மாநிலத் தலைநகரான குவகாத்திக்கு கிழக்கே 181.3 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 5 வார்டுகளும், 1,077 வீடுகளும் கொண்ட அவுராகாட் நகரத்தின் மக்கள் தொகை 5,443 ஆகும். அதில் ஆண்கள் 2,733 மற்றும் பெண்கள் 2,710 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 992 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 91.2%. ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 668 மற்றும் 610 ஆகவுள்ளனர்.
இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 97.7%, இசுலாமியர் 1.78% மற்றும் பிறர் 0.15% ஆகவுள்ளனர். [1]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]