உள்ளடக்கத்துக்குச் செல்

வீடுபேறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வீடுபேறு, அல்லது மோட்சம், என்பது மனிதர் வாழ்வில் அடைய வேண்டிய புருஷார்த்தங்கள் எனப்படும் இலக்குகள் நான்கில் இறுதியானது என இந்து சமயம் சொல்கிறது. புருஷார்த்தங்களில் முதல் மூன்றான தர்மம் அல்லது அறம், அர்த்தம் அல்லது செல்வம், காமம் அல்லது இன்பம் ஆகியவற்றிற்கு இறுதியில் வீடுபேறு என்னும் மோட்சம் (விதேக முக்தி) வைக்கப்பட்டுள்ளது. இந்த இறுதி இலக்கான வீடுபேற்றுக்குத் துறவு வழியில் நடந்திட அதற்கு முந்தைய பாதையான இல்லறம் அவசியமானது. ஏனெனில் இல்லறத்தில் கர்ம யோக வாழ்க்கையில் ஒருவர் பக்குவப்பட்ட பின்னரே அவர் துறவு வாழ்க்கைக்குத் தயாராகிறார். துறவு வாழ்க்கையில் பக்குவப்பட்டு, இறுதி இலக்கான வீடுபேறு என்னும் மறுபிறவி இல்லாத நிலையான விதேக முக்தியை அடைகிறார். இதுவே இந்து மறைகளில் பொதுவாக உரைக்கப்பட்ட பாதை. ஆயினும் இல்லற வாழ்க்கையில் இருந்து கொண்டே விடுபட்ட நிலையினை அடைய இயலுமென்பதும் நம்பிக்கை.[1][2][3]

வீடு அல்லது வீடுபேறு என்பது இந்துக் கருத்துருவில் சொர்க்கம் புகுதல் எனப்பொருளுடையது. பொதுப்பயன்பாட்டில் "வீடுதல்" என்பது "மரணித்தல்" அல்லது "அழித்தல்" எனப் பொருள்படும். எடுத்துக்காட்டாக, கம்பராமாயணத்தில் சீதையைத் தேடி இலங்காபுரி வந்த அனுமான் தேடி இவ்வழி கண்பனேன் தீருமென் சிறுமை மற்றிவ் வீடுவேன் இவ்விலங்கன் மேல் இலங்கையை வீட்டு என்கிறான்.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. "moksha". (Online). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்.  (Subscription or participating institution membership required.)
  2. "The Soka Gakkai Dictionary of Buddhism, vimoksha". Archived from the original on 22 பெப்பிரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 17 பெப்பிரவரி 2014.
  3. John Bowker, The Oxford Dictionary of World Religions, Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0192139658, p. 650

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீடுபேறு&oldid=4132671" இலிருந்து மீள்விக்கப்பட்டது