தைத்தியர்கள்
தைத்தியர்கள் (Daityas) (சமஸ்கிருதம்: दैत्य) இந்து சமயத்தில், அரசுரர்களில் ஒரு பிரிவினரான தானவர்களைப் போன்றவர்கள் என புராணங்களில் கூறப்பட்டுள்ளது. பிரஜாபதியான காசிபர் - திதி இணையருக்கு பிறந்த இன மக்களில் தைத்தியர்களும் ஒருவகையினர். தைத்திய இன அசுரர்கள் தேவர்களின் பங்காளிகள் மற்றும் பகையாளிகளும் ஆவார். தேவர்களை அழித்து தங்கள் ஆட்சியை தேவலோகத்திலும் நிறுவ, கடும் தவம் நோற்று பிரம்மனிடமிருந்து பெரும் வலிமையும், மாயா சக்திகளையும், பயங்கரமான ஆயுதங்களையும் பெற்றவர்கள்.
தைத்திரியப் பெண்கள் மிகப்பெரிய அளவில் நகைகளை அணிந்திருப்பர்.[1] மனுதரும சாத்திரம் 12ஆம் அத்தியாயம், பகுதி 48இல், தைத்தியர்களில் பலர் நற்குணத்தைப் பெற்றிருந்தாலும், தேவர்களுக்கு அடுத்த நிலையில் வகைப்படுத்துகிறது.
புகழ் பெற்ற தைத்தியர்கள்
[தொகு]
முதல் தலைமுறை
- இரணியகசிபு காசிபர் - திதியின் மூத்த மகன்
- இரணியாட்சன் காசிபர் - திதியின் இரண்டாம் மகன்
- ஹோலிகா அல்லது சின்ஹிகா - காசிபர் - திதி இணையரின் மகள்
இரண்டாம் தலைமுறை
- பிரகலாதன் - இரணியகசிபின் மகன்
- அனுக்ராதான் - இரணியகசிபின் மகன்
- ஹரதன் - இரணியகசிபின் மகன்
- சம்ஹிலாதன் -இரணியகசிபின் மகன்
மூன்றாம் தலைமுறை
- விரோசனன் - பிரகலாதனின் மகன்; பலிச்சக்கரவர்த்தியின் தந்தை
- தேவாம்பா - பலியின் தாய்
நான்காம் தலைமுறை
ஐந்தாம் தலைமுறை
- பானாசூரன், பலியின் மகன்
இதனையும் காண்க
[தொகு]- தேவர்கள்
- அசுரர்
- தானவர்கள்
- நாகர்கள்
- கருடர்கள்
- கிண்ணரர்கள்
- கிம்புருசர்கள்
- வித்தியாதரர்கள்
- பிசாசர்கள்
- யட்சர்கள்
- யட்சினிகள்
மேற்கோள்கள்
[தொகு]- Dictionary of Hindu Lore and Legend (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-500-51088-1) by Anna Dallapiccola