உள்ளடக்கத்துக்குச் செல்

மூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மூர்த்தி என்பது தெய்வீக சக்தியைக் குறிக்கப் பயன்படும் உருவம் ஆகும். மூர்த்தம் என்றால் உருவம் அளித்தல் என்று பொருள். கல், மரம், உலோகம் போன்றவற்றின் வழியாக இறையை வணங்க முடியும் என்பது இந்து சமயத்தவரின் நம்பிக்கை. மூர்த்தி என்ற சமசுகிருதச் சொல்லுக்கு, வேறு வடிவம் என்று பொருள். இந்துக்கள் இறைவனுக்கு மனித, விலங்கு உருவங்களைக் கொண்டு வழிபடுகின்றனர். மனித உடலையும் தெய்வீகமாகக் கருதுவதால், உடலைத் தூய்மையாக வைத்திருப்பதும் செயற்பாடுகளைச் செம்மையாகவும் வைத்திருக்க வேண்டும் என்பதும் நம்பிக்கை.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Flueckiger, Joyce Burkhalter (2015). Everyday Hinduism. John Wiley & Sons. p. 77-88. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781118528204.
  2. John Cort (2011), Jains in the World, Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0199796649, pages 80-85
  3. Murtipujakas, Overview of World Religions, University of Cumbria (2009)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூர்த்தி&oldid=4102301" இலிருந்து மீள்விக்கப்பட்டது