பெப்ரவரி 2014
<< | பெப்ரவரி 2014 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | |
MMXXIV |
பெப்ரவரி 2014 (February 2014) , 2014 ஆம் ஆண்டின் இரண்டாவது மாதமாகும். இம்மாதம் ஒரு சனிக்கிழமை ஆரம்பித்து 28 நாட்களின் பின்னர் ஒரு வெள்ளிக்கிழமை முடிவடைந்தது. தமிழ் நாட்காட்டியின் படி மாசி மாதம் பெப்ரவரி 13, வியாழக்கிழமை தொடங்கி, மார்ச் 14 வெள்ளிக்கிழமை முடிவடைந்தது.இசுலாமிய நாட்காட்டியின் படி கிஞ்சுரா 1435ம் ஆண்டின் ரபி உல் ஆகிர் மாதம் பெப்ரவரி 1, சனிக்கிழமை தொடங்கி, மார்ச் 1 ,சனிக்கிழமை முடிவடைந்தது.
சிறப்பு நாட்கள்
[தொகு]- பெப்ரவரி 1 - அப்பூதியடிகள் குருபூசை
- பெப்ரவரி 2 - தேவமாதா பரிசுத்தரான திருநாள்
- பெப்ரவரி 4 - கலிக்கம்ப நாயனார் குருபூசை
- பெப்ரவரி 4 - இலங்கையின் 66வது சுதந்திர தினம்
- பெப்ரவரி 10 - கண்ணப்ப நாயனார் குருபூசை
- பெப்ரவரி 11 - அரிவாட்டாய நாயனார் குருபூசை
- பெப்ரவரி 13 - உலக வானொலி நாள்
- பெப்ரவரி 15 - மாசி மகம்
- பெப்ரவரி 18 - எறிபத்த நாயனார் குருபூசை
- பெப்ரவரி 25 - காரி நாயனார் குருபூசை
- பெப்ரவரி 27 - மகா சிவராத்திரி
நிகழ்வுகள்
[தொகு]செய்திகள் |
- பெப்ரவரி 28:
- உக்ரைனின், கிரிமியா பகுதியின் தமது நலனைப் பாதுகாக்க அங்கு தனது படையினரை அனுப்பியுள்ளதாக உருசியா அறிவித்தது. (டெலிகிராப்)
- உருசிய சார்பு ஆயுததாரிகள் கிரிமியாவின் இரண்டு விமான நிலையங்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். (ஸ்கை நியூஸ்)
- தாய்லாந்தில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 15 பாடசாலை மாணவர்கள் கொல்லப்பட்டனர். (சிஎன்என்)
- பெப்ரவரி 27:
- இலங்கை, முல்லைத்தீவு மாவட்டம் உடையார்கட்டு, மூங்கிலாறில் வீட்டுத் திட்டம் ஒன்றின் நிலத்துக்கடியில் ஒன்பது மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. (பிபிசி)
- 1980 ஆம் ஆண்டில் வெளிவந்த பிள்ளைகளின் தீவு (Children's Island) என்ற சுவீடியத் திரைப்படத்தை வெளியிடுவதற்கு ஆஸ்திரேலியாவில் தடை விதிக்கப்பட்டது. (சிட்னி மோர்னிங் எரால்டு)
- உக்ரைன் நாட்டில் உள்ள கிரிமியா குடியரசின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க அங்கு பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும் என கிரிமியா நாடாளுமன்றம் தீர்மானித்தது. (கீவ் போஸ்ட்)
- கிரிமியாவில் உருசியர்களுக்கும் உள்ளூர் தத்தார்களுக்கும் இடையில் இடம்பெற்று வரும் கைகலப்புகளை அடுத்து உருசிய தேசிய சின்னங்களைத் தாங்கிய 50 ஆயுததாரிகள் கிரிமிய நாடாளுமன்றத்தினுள் ஊடுருவினர். உக்ரைன் பாதுகாப்புப் படையினர் உசார் நிலையில் வைக்கப்பட்டனர். (கார்டியன்)
- உக்ரைனின் பிரதமராக அர்சேனி யாத்சென்யூக் என்பவர் தெரிவு செய்யப்பட்டார். (வொயிஸ் ஒஃப் அமெரிக்கா)
- ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பில் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட நான்கு ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிக்க தமிழக அரசு எடுத்த முடிவுக்கு இந்திய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. (பிபிசி)
- கெப்லர் (விண்கலம்) புதிதாக 715 கோள்களைக் கண்டுபிடித்துள்ளது. (பிபிசி)
- பெப்ரவரி 26:
- பிரபல ஈழத்து எழுத்தாளரும், நாடகக் கலைஞரும், விக்கிப்பீடியருமான கே. எஸ். பாலச்சந்திரன் தனது 69வது அகவையில் கனடாவில் காலமானார். (சிஎம்ஆர்)
- உக்ரைனின் இடைக்காலத் தலைவர் அலெக்சாந்தர் துர்ச்சீனொவ் நாட்டின் படைத்துறைத் தலைவராக நியமிக்கப்பட்டார். (பாதுகாப்பு அமைச்சு)
- சிரிய உள்நாட்டுப் போர்: சிரிய இராணுவமும் ஹிஸ்புல்லா படையினரும் இணைந்து நடத்திய தாக்குதலில் 70 கிளர்ச்சிப் படையினர் கொல்லப்பட்டனர். (USA Today), (ராய்ட்டர்சு)
- பெப்ரவரி 25:
- நைஜீரியாவில் போகோ அராம் இசுலாமியப் போராளிகள் கல்லூரி ஒன்றில் தாக்க்தல் நடத்தியதில் 59 மாணவர்கள் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)
- கலிபோர்னியாவில் 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த 1,427 தங்க நாணயங்கள் முதிய தம்பதிகள் இருவரால் கண்டெடுக்கப்பட்டன. (யூஎஸ்ஏ டுடே)
- பெப்ரவரி 24:
- ஆர்ப்பாட்டகாரர்களைக் கொலை செய்ய உத்தரவிட்டமைக்காக உக்ரைன் அரசுத்தலைவர் விக்டர் யானுக்கோவிச் மற்றும் அவரது அதிகாரிகளுக்கு எதிராக கைதாணை பிறப்பிக்கப்பட்டது. (ஏபி)
- உக்ரைனின் இடைக்கால அரசுத்தலைவராக அலெக்சாந்தர் துர்ச்சீனொவ் பதவியேற்றதை ஐரோப்பிய ஆணையம் அங்கீகரித்தது. (ஐரோப்பா ஒன்லைன்)
- நங்கை, நம்பி, ஈரர், திருனர் சமூகத்தினருக்கு எதிரான சட்டமூலத்துக்கு உகாண்டா அரசுத்தலைவர் யொவேரி முசவெனி ஆதரவாகக் கையெழுத்திட்டார். (டைம்)
- ஐக்கிய அமெரிக்கத் தரைப்படையின் எண்ணிக்கையை இரண்டாம் உலகப் போருக்கு முன்னைய நிலைக்குக் குறைப்பதற்கு பென்டகன் திட்டம் ஒன்றை அறிவித்தது. (பிபிசி)
- ஆண்ட்ராய்டை அடிப்படையாகக் கொண்ட நோக்கியா-எக்சு என்ற நுண்ணறிபேசியை நோக்கியா நிறுவனம் அறிமுகப்படுத்தியது. (என்டிரிவி)
- மேற்கு ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட 4.4 பில்லியன் ஆண்டுகள் பழைமையான படிகம் பூமியின் மிகப்பழமையான மேலோடு என அறிவிக்கப்பட்டுள்ளது. (பிபிசி)
- பெப்ரவரி 23:
- உக்ரைன் அரசுத்தலைவர் விக்டர் யானுக்கோவிச் உருசியாவுக்கு தப்பிச் செல்ல முயற்சித்த போது தோனெத்ஸ்க் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் தடுக்கப்பட்டார். (மாஸ்கோ டைம்சு)
- சிரிய உள்நாட்டுப் போர்: சிரியாவின் வடக்கே துருக்கிய எல்லையில் மருத்துவமனை அருகே கார்க்குண்டு வெடித்ததில் 7 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- பெரும் இனவழிப்பில் இருந்து தப்பிய மிகவும் முதுமையானவர் எனக் கருதப்படும் அலீசு ஹெர்சு-சொம்மர் என்பவர் தனது 110வது அகவையில் இலண்டனில் காலமானார். (ராய்ட்டர்சு)
- ஆப்கானித்தானில் தாலிபான்களின் தாக்குதலில் 19 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர், ஏழு பேர் கடத்தப்பட்டனர். இதன் எதிரொலியாக ஆப்கானிய அரசுத்தலைவர் அமீது கர்சாயின் இலங்கைப் பயணம் ஒத்திவைக்கப்பட்டது. (ராய்ட்டர்சு), (டெய்லிமிரர்)
- 2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் உருசியாவின் சோச்சி நகரில் நிறைவடைந்தது. (சிட்னி மோர்னிங் எரால்டு)
- பெப்ரவரி 22:
- உக்ரைனில் இரண்டாண்டுகளாக சிறை வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் அரசுத்தலைவர் யூலியா திமொஷென்கோவை விடுவிக்க அந்நாட்டு நாடாளுமன்றம் ஆதரவாக வாக்களித்தது. (ஐரிசு டைம்சு)
- உக்ரைனில் ஆர்ப்பாட்டக் காரர்கள் தலைநகர் கீவைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அரசுத்தலைவர் விக்டர் யானுக்கோவிச் தலைநகரை விட்டு வெளியேறினார். யானுக்கோவிச்சை பதவியில் இருந்து வெளியேற்ற நாடாளுமன்றம் ஆதரவாக வாகளித்தது. (ஏபி), (யூஎஸ்ஏ டுடே)
- உக்ரைனிய எழுத்தாளரும், பொருளியல் நிபுணருமான அலெக்சாந்தர் துர்ச்சீனொவ் நாடாளுமன்ற அவை முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். (கீவ் போஸ்ட்)
- உரோமை நகரம், புனித பேதுரு பேராலயத்தில் இடம்பெற்ற ஒரு நிகழ்வில் திருத்தந்தை பிரான்சிசு 19 புதிய கர்தினால்களை நியமித்தார். (பிபிசி)
- இத்தாலியின் புதிய பிரதமராக மத்தேயோ ரென்சி பதவியேற்றார். (பிபிசி)
- பெப்ரவரி 21:
- இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்காவின் பதவி நீக்கம் செல்லாது என சனவரி 2013 இல் மேன்முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மீயுயர் நீதிமன்றம் ரத்துச் செய்தது. (தி ஐலண்டு)
- அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவை சீனாவின் எதிர்ப்பை மீறி வெள்ளை மாளிகையில் சந்தித்தார். (பிபிசி)
- இராஜிவ் காந்தி கொலை வழக்கு: தனது தாய்-தந்தையை மன்னிக்குமாறு நளினி - முருகன் தம்பதியரின் மகள் ஹரித்ரா, ராகுல் காந்திக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். (தி இந்து)
- நோயாளிகளை ஏற்றிச் சென்ற லிபிய இராணுவ விமானம் ஒன்று துனீசியாவில் விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த அனைத்து 11 பேரும் உயிரிழந்தனர். (பிபிசி)
- உக்ரைனிய அரசும் எதிர்க்கட்சியும் புதிய கூட்டரசொன்றை அமைக்கவும், விரைவில் நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்தவும் உடன்பட்டன. (த டெலிகிராப்)
- வெனிசுவேலாவில் 22-வயது அழகுராணி ஜெனசிசு கார்மோனா அரசுத்தலைவர் நிக்கோலசு மதுரோவிற்கு எதிராக இடம்பெற்ற மாணவர் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டபோது சுட்டுக் கொல்லப்பட்டார். (நியூயோர்க் டைம்சு)
- பெப்ரவரி 20:
- இராஜிவ் காந்தி கொலை வழக்கு: குற்றவாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்த முடிவுக்கு இந்திய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. (பிபிசி)
- உக்ரைனின் தலைநகர் கீவில் காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் கைகலப்பு நிகழ்ந்ததில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டனர். (கீவ் போஸ்ட்), (பிபிசி)
- ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைனுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளை அறிவித்தது. (பிபிசி)
- பெப்ரவரி 19:
- இராஜிவ் காந்தி கொலை வழக்கு: குற்றவாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. (தி இந்து)
- உக்ரைனில் இடம்பெற்றுவரும் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு அங்கு அரசுத்தலைவருக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. கடந்த இரண்டு நாட்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. (BBC), (யாகூ)
- வாட்சப் மென்பொருள் நிறுவனத்தை $19 பில்லியனுக்கு வாங்குவதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது. (ராய்ட்டர்சு)
- பெப்ரவரி 18:
- தெலுங்கானா என்ற தனி மாநிலத்தை உருவாக்க வகை செய்யும் ஆந்திர மறுசீரமைப்பு மசோதா இந்திய நாடாளுமன்றத்தில் கடும் அமளிக்கு நடுவே நிறைவேற்றப்பட்டது. (கார்டியன்)
- உக்ரைனின் கீவ் நகரில் எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டக்காரகளுக்கும் காவல்துறையினருக்கு இடையில் கைகலைப்பை அடுத்து இறந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்தது. இவர்களில் 6 பேர் காவல்துறையினர். (பிபிசி)
- இராஜிவ் காந்தி கொலை வழக்கு: முன்னாள் இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது. (பிபிசி)
- பெப்ரவரி 17:
- சவுதி அரேபியாவில் ஒரு பத்திரிக்கையின் முதல் பெண் ஆசிரியராக, சவுதி அரேபிய பத்திரிகையாளர், சொமய்யா ஜாபர்த்தி நியமிக்கப்பட்டிருக்கின்றார். (பிபிசி தமிழ்)
- ஈராக் தலைநகர் பக்தாதில் இடம்பெற்ற நான்கு குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர். (நியூயோர்க் டைம்சு)
- பாக்கித்தானின் தாலிபான் போராளிகள் தாம் கைப்பற்றி வைத்திருந்து 23 பாக்கித்தானிய இராணுவத்தினரைக் கொன்றுவிட்டதாக அறிவித்தனர். (விஓஏ)
- அடிஸ் அபாபா இலிருந்து ரோம் நோக்கி சென்ற விமானம் சக விமான ஓட்டியினால் கடத்தப்பட்டு ஜெனீவாவில் தரையிறக்கப்பட்டது. (ஊஸ்டன் குரோனிக்கில்)
- பப்புவா நியூ கினியில் உள்ள மானுசுத் தீவு ஆத்திரேலிய அகதிகள் தடுப்பு முகாமில் இடம்பெற்ற வன்முறைகளில் ஒருவர் கொல்லப்பட்டார், 77 பேர் காயமடைந்தனர். (தி ஆத்திரேலியன்)
- 200 ஈஎம்26 என்ற பெரும் சிறுகோள் ஒன்று பூமிக்கு எவ்விதப் பாதிப்பும் இன்றித் தாண்டிச் சென்றது (என்பிசி)
- பெப்ரவரி 16:
- சீனாவில் பெற்றெடுத்த பிள்ளையை கைவிட விரும்பும் பெற்றோர்கள் அவற்றை பாதுகாப்பான இடத்தில் விட்டுச் செல்வதற்கான 25 நிலையங்களை நாட்டின் பல்வேறு ஊர்களிலுமாக சீன அரசாங்கம் அமைத்துள்ளது. (பிபிசி தமிழ்)
- நைஜீரியாவின் கமரூன் எல்லைப் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் இசுலாமியத் தீவிரவாதிகள் தாக்கியதில் 90 பேர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)
- நேபாள விமானம் ஒன்று அர்காகாஞ்சி மாவட்டத்தில் விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த அனைத்து 18 பேரும் கொல்லப்பட்டனர். (நியூயோர்க் டைம்சு)
- பெப்ரவரி 15:
- மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் முன்னர் முசுலிம்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பாங்கி புறநகர்ப் பகுதியில் கிறித்தவர்களின் மனிதப் படுகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. (ராய்ட்டர்சு)
- சிரிய உள்நாட்டுப் போர்: ஜெனீவாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் உடன்பாடு எதுவும் எட்டப்படாமல் முறிவடைந்தது. (வாசிங்டன் போஸ்ட்)
- நங்கை, நம்பி, ஈரர், திருனர்களுக்கு ஆதரவாக லாசு வேக்சில் இடம்பெற்ற பன்னாட்டு மனித உரிமை மாநாட்டில் கலந்து கொண்ட நடிகை எலன் பேஜ் "தான் ஒரு ஆண்விழைவோன்" என அறிவித்தார். (சிஎன்என்)
- ஐக்கிய இராச்சியத்தின் தேசிய ஆவணப் பிரிவின் ஒரு பகுதி தீக்கிரையானது. (பிபிசி)
- லெபனானில் தமாம் சலாம் தலைமையில் புதிய அரசு அமைக்கப்பட்டது. (ராய்ட்டர்சு)
- பெப்ரவரி 14:
- இந்தோனேசியாவில் அதிக மக்கட்தொகை கொண்ட ஜாவா தீவில் கெலுட் என்ற எரிமலை வெடிதிருப்பதை அடுத்து அத்தீவில் பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற நேர்ந்துள்ளது பிபிசி தமிழ்.
- ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முடியாததால், டெல்லி முதல்வர் பதவியை அரவிந்த் கேஜ்ரிவால் துறந்தார். (தி இந்து)
- இந்தியா வெண்டி டொனிகர் எழுதிய The Hindus: An Alternative History என்ற ஆங்கில நூலை தெய்வ நிந்தனை செய்வதாகக் கருதி தடை செய்தது. (த கார்டியன்)
- பெப்ரவரி 13:
- திருகோணமலையிலுள்ள விளையாட்டு மைதானத்தின் குழியொன்றிலிருந்து மனித எச்சங்கள் என சந்தேகிக்கப்படும் எலும்புகள் காணப்பட்டது குறித்து காவல் துறையினர் விசாரணையை துவங்கியுள்ளனர். (தமிழ்மிரர்)
- பிரபல திரைப்பட இயக்குநர் பாலு மகேந்திரா சென்னையில் காலமானார். (பிபிசி தமிழ்)
- நேட்டோ மற்றும் ஆப்கானியப் படைகள் மீது தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருந்த 65 கைதிகளை ஆப்கானித்தான் விடுதலை செய்தது. (பிபிசி)
- இந்தோனேசியாவின் ஜாவாத் தீவில் கெலூட் எரிமலை வெடித்தது. (எஸ்பிஎஸ்)
- வதையா இறப்பை 18 வயதிற்குட்பட்டோருக்கும் நீடிக்க பெல்ஜியம் சட்டம் கொண்டு வந்தது. (என்டிரிவி)
- வெனிசுவேலாவில் அரசுக் கவிழ்ப்புக்கு சதித் திட்டத்தில் இறங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். (ராய்ட்டர்சு)
- பெப்ரவரி 12:
- சிரியாவின் யாப்ரூத் என்ற முக்கிய எல்லை நகரை கிளர்ச்சியாளர்களிடம் இருந்து மீட்பதற்கு சிரிய இராணுவமும், இஸ்புல்லாவும் இணைந்து தாக்குதல்களை ஆரம்பித்தனர். (ஏபி)
- தட்டம்மை பிலிப்பீன்சு நாட்டில் இருந்து ஆஸ்திரேலியா, கனடா, சீனக் குடியரசு, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளுக்குப் பரவியது. (டொரண்டோ ஸ்டார்)
- வெனிசுவேலாவில் அரசுக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பட்டங்களில் குறைந்தது 2 பேர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)
- ஐநா மனித உரிமை கழக மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தால் அதை எதிர்க்கப் போவதாக சீனா கூறியுள்ளது. (தினகரன்)
- பெப்ரவரி 11:
- சீனாவுக்கும் சீனக் குடியரசுக்கும் இடையில் 65 ஆண்டுகளுக்குப் பின்னர் முதற்தடவையாக அரசு முறைச் சந்திப்பு இடம்பெற்றது. (ஏஎஃப்பி)
- கெவின் பீட்டர்சன் ஐபிஎல் போட்டிகளில் ஆட, டில்லி டேர்டெவில்ஸ் அணியால் 9 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டிருக்கிறார். (பிபிசி தமிழ்)
- ஒரிசாவில் மகாநதியில் படகு கவிழ்ந்ததில் குறைந்தது 13 பேர் ஆற்றில் மூழ்கினர். (பிபிசி)
- அல்ஜீரியா ராணுவத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று திடீரென விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியதில் 103 பேர் பலியாயினர்(டைம் )
- பெப்ரவரி 10:
- டொயோட்டா நிறுவனம் ஆத்திரேலியாவில் தானுந்து உற்பத்தியை 2017 ஆம் ஆண்டு முதல் நிறுத்துவதற்கு முடிவு செய்துள்ளது. (பிபிசி)
- நேபாளத்தின் புதிய பிரதமராக நேபாளி காங்கிரஸ் கட்சியின் தலைவர் சுசில் கொய்ராலா தேர்ந்தெடுக்கப்பட்டார். (பிபிசி)
- புருண்டி, புசும்புரா நகரில் வெள்ளப்பெருக்கு, மற்றும் மண்சரிவில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- இந்திய-அமெரிக்க உறவுகள்: சூரிய ஒளித் தகடுகளை உற்பத்தி செய்யும் அமெரிக்க நிறுவனங்களை இந்திய சட்டங்கள் பாகுபாடு காட்டுவதாக அமெரிக்கா உலக வணிக அமைப்பில் முறையிட்டுள்ளது. (ராய்ட்டர்சு)
- இலங்கை மீனவர்கள் 25 பேர் இந்தியக் கடற்படையினரால் காரைக்கால் பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டனர். (ஹிரு)
- இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசுலாம் மதத்திற்கு மாறினார். (டைம்ஸ் ஒப் இந்தியா)
- பெப்ரவரி 9:
- மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் அனைத்து முஸ்லிம் மக்களும் அடுத்த சில வாரங்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டி இருக்கும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரித்துள்ளது (பிபிசி)
- மிகப் பழமையானதாகக் கருதப்படும் எஸ்.எம்.எஸ்.எஸ் ஜெ031300.36-670839.3 என்ற விண்மீன் 13.6 பில்லியன் ஆண்டுகள் வயதுடையது என ஆத்திரேலிய அறிவியலாளர்கள் கணக்கிட்டுள்ளனர். (நைன்எம்எஸ்என்)
- புற்றுநோய்க்கு எதிரான வேதிச்சிகிச்சைக்கு உயிர்ச்சத்து சி பயனுள்ளது என அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். (பிபிசி)
- ஆபிரிக்காவிற்கு வெளியே சுமார் 8 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன (பிபிசி).
- ஜோர்தான் நாட்டு மன்னர் அப்துல்லா பயணம் செய்த வானுார்தி மோசமான வானிலை காரணமாக மெக்சிகோ நாட்டில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது (லங்காசிறீ).
- பெப்ரவரி 8:
- பிரித்தானிய குடியேற்றத்துறை அமைச்சர் மார்க் ஹார்ப்பர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். (லங்காசிறீ).
- வியட்நாமில் முதலாவது மக்டொனால்ட்ஸ் உணவகம் ஹோசிமின் நகரில் திறக்கப்பட்டது. (பிபிசி)
- சப்பானில் பெரும் பனிப்புயல் தாக்கியதில் 6 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். (ஆத்திரேலியா நெட்வர்க்)
- பிரான்சில் தொடருந்து ஒன்றை பெரும் பாறை ஒன்று தாக்கியதில் இருவர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- சவூதி அரேபியாவின் மதீனா நகரில் உணவகம் ஒன்று திப்பற்றியதில் 15 எகிப்தியப் பயணிகள் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)
- சர்வதேச அளவில் பொருளாதாரம் மந்தநிலையில் இருந்தாலும், கனடிய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளதாக கனடிய புள்ளிவிபர திணைக்களம் அறிவித்துள்ளது (லங்காசிறீ).
- உடலில் சிறிதளவு கூட ரத்தம் இல்லாமல் பிறந்த குழந்தை உயிர் பிழைத்துள்ளது (லங்காசிறீ).
- பெப்ரவரி 7:
- 2014 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்: உருசியாவின் சோச்சி நகரில் ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றன. (பிபிசி)
- இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட 900 கிகி வெடிகுண்டு ஹொங்கொங்கில் கண்டுபிடிக்கப்பட்டது. (பிபிசி)
- கிலாலம் மொழி பேசும் கடைசி அமெரிக்க பழங்குடி இனத்தவர் இறந்தார். (ராய்ட்டர்சு)
- பிரான்சில் மிகக் கடுமையான புயல் காற்று வீசியதால், பல்லாயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின (லங்காசிறீ).
- பெப்ரவரி 6:
- பாக்கித்தானில் அரசுக்கும் தாலிபான் போராளிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின. (பிபிசி)
- படகுகள் மூலம் ஆத்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகச் சென்ற இலங்கையர்களில் 54பேர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். (தமிழ்மிரர்)
- ஈழப்போர் முடிந்த பின்னர், பொதுமக்கள் புதைக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று மனித எச்சங்களை இலங்கை இராணுவத்தினர் திட்டமிட்டு அழித்து விட்டதாக சர்வதேச சட்டத்தரணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். புதிய ஆதாரங்கள் அடங்கிய காணொளியும் வெளியிடப்பட்டது. (மீடியாநெட்), (தமிழ்வின்)
- ஆத்திரேலியாவில் புதிய இன இராட்சத சொறிமுட்டை கண்டுபிடிக்கப்பட்டது. (BBC)
- இலங்கையின் மேற்கு, தெற்கு மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் மார்ச் 29 இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (தி ஐலண்டு)
- யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொறியியல், விவசாய பீடங்களின் ஆரம்ப சமய நிகழ்வுகள் கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள விவசாய பீட வளாகத்தில் இடம்பெற்றது. (தமிழ்வின்)
- பெப்ரவரி 5:
- இங்கிலாந்தின் பல பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருவதால், 14 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கின. (பிபிசி)
- டைட்டானிக் கப்பல் மூழ்குவதற்கு காரணமாக இருந்த பனிப்பாறை உருகி வருவதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். (நியுசோநியூஸ்)
- தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் உள்ள நராதிவாட் மாகாணத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் உயிரிழந்தனர். (நியுசோநியூஸ்)
- பெப்ரவரி 4:
- இந்தியாவில் புனே நகருக்கும் சாத்தாரா நகருக்கும் இடையில் பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்தனர், 35 பேர் காயமடைந்தனர். (என்டிரிவி)
- இந்தியக் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் இந்திய விஞ்ஞானி பேராசிரியர் சி.என்.ஆர்.ராவ் ஆகியோர் இந்தியா வழங்கும் மிக உயர் சிவிலியன் விருதான பாரத ரத்னா விருதைப் பெற்றுக்கொண்டனர்.
- எகிப்தின் தெற்கே எத்ஃபூ என்ற பண்டைய குடியேற்றப் பகுதியில் 4,600 ஆண்டு காலப் பழமையான படிப் பிரமிது ஒன்றை தொல்லியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். (பொக்சு நியூஸ்)
- மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது தலைமை செயல் அதிகாரியாக சத்ய நாடெல்லாவைத் தெரிவு செய்துள்ளது. (பொக்சு)
- ஸ்கொட்லாந்து நாடாளுமன்றம் ஒருபால் திருமணத்தை சட்டபூர்வமாக்கியது. (பிபிசி)
- ஆத்திரேலிய வழக்கறிஞர்கள் சங்கம் விடுத்துள்ள ஓர் அறிக்கையில், ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு பெருமளவு ஆயுதப் படைகளே காரணம் என்றும், போர்க்குற்றங்களுக்கான சாட்சியங்களை அவர்கள் அழித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளது. (ராய்ட்டர்ஸ்), (அல்ஜசீரா)
- பெப்ரவரி 3:
- இலங்கையின் பெண் ஊடகவியலாளர் மெல் குணசேகரா படுகொலை தொடர்பாக வீட்டுக்கு வர்ணம் பூசும் ஒருவர் கைது செய்யப்பட்டார். (தமிழ்மிரர்)
- உலகில் மிக வயதான பெரும் பூநாரை தனது 83 ஆவது வயதில் ஆத்திரேலியாவின் அடிலெயிட் நகரில் இறந்தது. (தி ஆஸ்திரேலியன்)
- கொலைக்குற்றச்சாட்டு தொடர்பில் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் இலங்கை வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் ஈபிடிபி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். (வீரகேசரி)
- பெப்ரவரி 2:
- இலங்கையின் பிரபல வணிகத்துறை பெண் ஊடகவியலாளர் மெல் குணசேகரா (46) கொழும்பில் உள்ள அவரது வீட்டில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டார். (டெய்லிமிரர்)
- வன்முறைகளுக்கு மத்தியில் தாய்லாந்து மக்கள் தேர்தலில் வாக்களித்தனர். (ஏபிசி)
- கோஸ்ட்டா ரிக்காவில் பொதுத் தேர்தல் இடம்பெற்றது. (டைக்கோடைம்சு)
- இலங்கை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டார். (தமிழ்மிரர்)
- பெப்ரவரி 1:
- மும்பை மோனோரயில் திட்டம் ஆரம்பமானது. (என்டிரிவி)
- யாழ்ப்பாணம் சென்றிருக்கும் அமெரிக்க அரசுத் திணைக்களத்தின் தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நிசா தேசாய் பிசுவால் தமிழ் சிவில் சமுகப் பிரதிநிதிகளை சந்தித்து பேசினார். (தமிழ்வின்)
- நிசா தேசாய் பிசுவால் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் உட்பட ஈழப்போரின் நிறைவில் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல் போனவர்களின் உறவினர்களைச் சந்தித்து பேசியுள்ளார். (தமிழ்வின்)
- சிரிய உள்நாட்டுப் போர்: ஜெனீவா பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்தன. (பிபிசி)
- இந்தோனேசியாவின் சினாபுங் எரிமலை வெடித்ததில் 14 பேர் கொல்லப்பட்டனர். (சகார்த்தா போஸ்ட்)
இறப்புகள்
[தொகு]- பெப்ரவரி 2 - பிலிப் சீமோர் ஹாப்மன், அமெரிக்க நடிகர் (பி. 1967)
- பெப்ரவரி 8 - பிரேம்ஜி ஞானசுந்தரம் முற்போக்கு எழுத்தாளர், பத்திரிகையாளர் (பி. 1930)
- பெப்ரவரி 13 - பாலுமகேந்திரா, தமிழ்த் திரைப்பட இயக்குநர் (பி. 1939)
- பெப்ரவரி 17 - ஆர். கே. ஸ்ரீகண்டன், கருநாடக இசைப் பாடகர் (பி. 1920)
- பெப்ரவரி 25 - பாக்கோ தே லூசீயா, எசுப்பானிய இசைக்கலைஞர் (பி. 1947)
- பெப்ரவரி 26 - கே. எஸ். பாலச்சந்திரன், ஈழத்து எழுத்தாளர், நாடகக் கலைஞர் (பி. 1944)
- பெப்ரவரி 27 - ந. பாலேஸ்வரி, ஈழத்துப் புதின எழுத்தாளர் (பி. 1929)
2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்