ஜூலை 2009
<< | ஜூலை 2009 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | |||
5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
MMIX |
ஜூலை 2009, 2009 ஆம் ஆண்டின் ஏழாவது மாதமாகும். இம்மாதம் ஒரு புதன்கிழமை ஆரம்பித்து 31 நாட்களின் பின்னர் ஒரு வெள்ளிக்கிழமை முடிவடையும். தமிழ் நாட்காட்டியின் படி ஆடி மாதம் ஜூலை 17, வெள்ளிக்கிழமை தொடங்கி ஆகஸ்ட் 16 ஞாயிற்றுக்கிழமை இல் முடிவடையும்.
சிறப்பு நாட்கள்
[தொகு]நிகழ்வுகள்
[தொகு]செய்திகள் |
- ஜூலை 30:
- மால்டோவா பொதுத் தேர்தலில் ஆளும் பொதுவுடமைக் கட்சி பெரும்பான்மையைப் பெறத் தவறியதால் எதிர்க்கட்சிகள் ஆட்சியைக் கைப்பற்றும் முயற்சிகளில் இறங்கியுள்ளன. (ஆர்டீஈ)
- இசுப்பானியாவின் மலோர்க்கா தீவில் இடம்பெற்ற கார்க் குண்டுக் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர். (ஸ்ட்ரெயிட் டைம்ஸ்)
- அல்ஜீரியாவில் இசுலாமியத் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 படைத்துறையினர் கொல்லப்பட்டு 20 பேர் காயமடைந்தனர். (பிபிசி)
- ஜூலை 29: வடக்கு நைஜீரியாவில் இடம்பெற்று வரும் மதக் கலவரங்களில் இதுவரை 250 பேருக்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர். (சிட்னி மோர்னிங் ஹெரால்ட்)
- ஜூலை 28:
- கரிபியன் பகுதியில் துர்கசு கைகோசு தீவுப் பகுதியில் 200 எயிட்டிய சட்டவிரோதக் குடியேற்றவாசிகளுடன் சென்றுகொண்டிருந்த படகொன்று மூழ்கியதில் பலர் காணாமல் போயுள்ளனர். (பிபிசி)
- பாலியல் விவகாரத்தில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து, ஜம்மு–காஷ்மீர் மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா பதவி விலகினார். (த டைம்ஸ்)
- ஜூலை 27: மத்தியதரைப் பகுதியில் 8 பேரை பலியெடுத்த காட்டுத்தீ குரோவேசியா வரை பரவியது. (த டைம்ஸ்)
- ஜூலை 26:
- சூறாவளி காரணமாக போலந்தில் 7 பேரும் செக் குடியரசில் இருவரும் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- இந்தியா அரிஹந்த் என்ற தனது முதலாவது அணு ஆற்றலினாலான நீர்மூழ்கிக் கப்பலை வெள்ளோட்டம் விட்டது. (சின்குவா)
- செச்சினியத் தலைநகர் குரொஸ்னியில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- ஜூலை 25:
- தென்னிலங்கையின் பேருவளையில் இரண்டு முஸ்லிம் மதக்குழுக்களிடையே இடம்பெற்ற மோதல்களில் மூவர் கொல்லப்பட்டதுடன், பள்ளிவாசல் ஒன்றும் தீவைத்து எரிக்கப்பட்டது.
- முதலாம் உலகப் போரில் பங்குபற்றிய பிரித்தானிய இராணுவ வீரர்களில் இதுவரை உயிர் வாழ்ந்து வந்த இறுதி வீரரான ஹரி பச் தன்னுடைய 111 ஆவது வயதில் இறந்தார். (பிபிசி)
- ஜூலை 24:
- உறைந்த விந்துவில் இருந்து பெரும் சீனா பாண்டா ஒன்றை உருவாக்கியுள்ளது. (பிபிசி)
- கனாரியின் பெரும் தொலைநோக்கி, உலகின் மிகப்பெரும் தொலைநோக்கி, ஸ்பெயினில் திறந்துவைக்கப்பட்டது. (நியூயோர்க் டைம்ஸ்)
- ஈரானில் 153 பயணிகளுடன் சென்ற விமானம் வீழ்ந்ததில் 17 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- இலங்கையில் தனது தூதரகத்தை மூடிவிட சுவீடன் தீர்மானித்துள்ளது. (வீரகேசரி)
- இந்தோனேசியாவின் குடியரசுத் தலைவராக சுசீலோ பாம்பாங் யுதயோனோ மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். (ஏபி)
- ஸ்பெயினின் வடகிழக்கில் காட்டுத் தீ பரவியதில் 5 தீயணைப்பாளர்கள் இறந்தனர். (Sky News)
- ஜூலை 23:
- திருகோணமலைக்கும் மன்னாருக்கும் இடையில் நேரடி பேருந்து சேவை ஆரம்பமானது. (வீரகேசரி)
- அம்பாறையில் 14 வயது தமிழ் மாணவி ஒருவர் பாலியல் தாக்குதலுக்குள்ளாகிப் படுகொலை செய்யப்பட்டார். (தினகரன்)
- இராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றபோது காணாமற்போனதாக கூறப்படும் இந்திய மீனவர்கள் அறுவரின் சடலங்கள் இலங்கையின் வடக்கு கடலில் கரையொதுங்கியுள்ளது. (தினகரன்)
- ஜூலை 22:
- சூடானில் வடக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களுக்கு இடையில், 22 ஆண்டுகளாக இருந்து வந்த எல்லைத் தகராறு பன்னாட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் முடிவுக்கு வந்தது. (பிபிசி)
- 21ம் நூற்றாண்டின் மிக நீண்ட முழுமையான சூரிய கிரகணம் ஆசியாவின் பல இடங்களிலும் பசிபிக் பெருங்கடல் பகுதியிலும் நிகழ்ந்தது. (ஏபிசி)
- யாழ்ப்பாணம்-கண்டி ஏ-9 நெடுஞ்சாலை பொதுமக்களின் பாவிப்பிற்கு திறக்கப்பட்டிருப்பதாக சிறிலங்கா அரசு அறிவித்தது.
- ஜூலை 21:
- சப்பானியப் பிரதமர் நாட்டின் நாடாளுமன்றத்தைக் கலைத்து ஆகஸ்ட் 30இல் பொதுத்தேர்தலுக்கு நாள் குறித்தார். (சின்குவா)
- வியாழனில் மோதுகை ஒன்று நிகழ்ந்துள்ளதை நாசா உறுதிப்படுத்தியது. இதற்கு முன்னர் 1994 இல் ஒரு மோதுகை நிகழ்ந்தது. (நியூ சயண்டிஸ்ட்)
- சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கு 2.5 பில்லியன் டொலர் கடன் கிடைத்தது. (தினகரன்)
- வவுனியா-திருகோணமலை ஏ-29 நெடுஞ்சாலை மீண்டும் போக்குவரத்துக்காக திறந்து வைக்கப்பட்டது. (தினகரன்)
- தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு செல்வராசா பத்மநாதனைத் தமது புதிய தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளனர். (தமிழ்நெட்)
- ஜூலை 20:
- மும்பை தாக்குதல்களில் கைதான ஒரே குற்றவாளியான முகம்மது கசாப், தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டுள்ளார். டைம்ஸ் ஒஃப் இந்தியா)
- மேற்கு கனடாவில் காட்டுத்தீ பரவியதில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறினர். (ஏஎஃப்பி)
- இந்தியாவிம் ஐக்கிய அமெரிக்காவும் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. (பிபிசி)
- ஜூலை 19: இலங்கை துடுப்பாட்ட அணியின் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். (டெய்லிமிரர்)
- ஜூலை 18:
- உலகின் வயதில் கூடிய மனிதர் ஹென்றி அலிங்கம் 113 வது வயதில் இறந்தார். முதலாம் உலகப் போரின் பங்கெடுத்த பிரித்தானிய ரோயல் வான்படையின் போர்வீரர்களில் உயிரோடுக்கும் இருவரில் ஒருவர் இவர். (பிபிசி)
- சான் பிரான்சிஸ்கோவில் இரண்டு தொடருந்துகள் மோதிக்கொண்டதில் 47 பேர் காயமடைந்தனர். (குரோனிக்கல்)
- ஜூலை 17: இந்தோனீசியாவின் ஜகார்த்தா நகரில் இடம்பெற்ற மூன்று குண்டுவெடிப்புகளில் 9 பேர் கொல்லப்பட்டு பலர் படுகாயமடைந்தனர். (த டைம்ஸ்)
- ஜூலை 16:
- சீனாவின் பொருளாதார வளர்ச்சி 8 வீத வளர்ச்சியை எட்டுவதற்கான தளத்தில் சென்று கொண்டிருப்பதை புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டின. (பிபிசி)
- பப்புவா நியூ கினியில் 6.1 புள்ளி நிலநடுக்கம் பதிவானது. (RTÉ)
- சிகாகோவில் உள்ள 110-மாடி சியேர்ஸ் கோபுரம் விலிஸ் கோபுரம் எனப் பெயர் மாற்றப்பட்டது. (பிபிசி)
- ஜூலை 15:
- நியூசிலாந்தின் தெற்கு தீவிற்கு அப்பால் 7.6 புள்ளி நிலநடுக்கம் பதிவானது. (ஏபி)
- எண்டெவர் விண்ணோடம் பன்னாட்டு விண்வெளி நிலையம் நோக்கி ஏவப்பட்டது. (பிபிசி)
- ஜூலை 14:
- மலேசியாவில் மானிக் ஊராய் தொகுதியில் இடம்பெற்ற இடைத்தேர்தலில் எதிர்க்கட்சி பாஸ் என்ற பான்-மலேசிய இசுலாமியக் கட்சி வெற்றி பெற்றது. (வணக்கம் மலேசியா)
- ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் 28வது தலைவராக போலந்தின் முன்னாள் பிரதமர் யேசி பூசெக் தெரிவு செய்யப்பட்டார். (பிபிசி)
- த ஹேக்கில் உள்ள போர் குற்ற விசாரணை மன்றத்தில் நிறுத்தப்பட்ட லைபீரியாவின் முன்னாள் அதிபர் சார்ல்ஸ் டெய்லர் தனக்கு எதிராகக் கூறப்பட்ட போர் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்று கூறி அவற்றை நிராகரித்தார். (பிபிசி)
- ஜூலை 13: பாகிஸ்தான், மியான் சன்னு நகரில் பள்ளி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 8 மாணவர்கள் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர். (சீஎனென்)
- ஜூலை 12: தெற்கு பெருவில் 6.1 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. (சிபிஎஸ்)
- ஜூலை 11:
- ஜூலை 10: பர்மாவின் எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூ கீ மீதான விசாரணைகள் ஆறு வார இடைவெள்ளிக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பித்தது. (பிபிசி)
- ஜூலை 9:
- சீனாவின் யுனான் மாகாணத்தில் இடம்பெற்ற 5.7 அளவை நிலநடுக்கம் காரணமாக 10,000 பேர் வரையில் வீடுகளை இழந்துள்ளனர். (பிபிசி)
- பாகிஸ்தான், வசிரிஸ்தான் மாகாணத்தில் இடம்பெற்ற அமெரிக்கத் தாக்குதலில் 50 தாலிபான்கள் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- ஜூலை 8:
- மதுரை அருகே பட்டாசுத் தொழிற்சாலை வெடித்து 17 பேர் கொல்லப்பட்டனர். (தினத்தந்தி)
- 35வது ஜி8 உச்சி மாநாடு இத்தாலியில் ஆரம்பமானது. (பிபிசி)
- ஜூலை 7: பாகிஸ்தான், தெற்கு வசிரிஸ்தானில் அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் 12 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்ஸ்)
- ஜூலை 6:
- சீனாவின் சின்சியாங் பகுதியில் இடம்பெற்ற கலவரத்தில் 156 பேர் கொல்லப்பட்டு 800 பேர் காயமடைந்தனர். (பிபிசி)
- கிறித்தவ விவிலியத்தின் ஆரம்பகால நூலின் 800 பக்கங்கள் இணையத்தில் பார்வைக்கு வக்க்கப்பட்டன. (பிபிசி)
- ஜூலை 5:
- இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் இடம்பெற்ற வெடிகுண்டு விபத்தில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- ரொஜர் ஃபெடரர் 2009 விம்பிள்டன் டென்னிஸ் பந்தயப் போட்டி இறுதி ஆட்டத்தில் அண்டி ரொடிக்கை வென்று பீட் சாம்பிரசின் கிராண்ட் சிலாம் சாதனையை முறியடித்தார். (பிபிசி)
- ஜூலை 4:
- 2009 விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் தனது சகோதரியான வீனசை வென்றார். (டெய்லி டெலிகிராஃப்)
- வட கொரியா ஏழு ஏவுகணைகளை ஜப்பான் கடலில் சோதித்தது. (சின்குவா)
- தெற்கு ரஷ்யாவில் இங்குஷேத்தியாவில் ஒன்பது செச்னிய காவல்துறையினர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- ஜூலை 3:
- வணங்காமண் கப்பல் சென்னைத் துறைமுகத்திற்குள் வர அனுமதிக்கப்பட்டது. (தினமலர்)
- ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் டைனசோர்களின் புதிய இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. (பிபிசி)
- ஜூலை 2:
- ஓரினச்சேர்க்கை சட்டபூர்வமானதென தில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. (பிபிசி)
- எச்1என்1 தீநுண்மத்திற்கு எதிரான தடுப்பு மருந்து ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டது. (பிபிசி)
- கத்தாரில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 16 இந்தியர்கள் உட்பட 30 பேர் உயிரிழந்தனர். (தினத்தந்தி)
- ஜூலை 1: இந்தியாவின் புதிய வெளியுறவுச் செயலராக நிருபமா ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். (தினத்தந்தி)
ஜூலை 2009 விக்கி செய்திகள் |
- ஜூலை 30, 2009:
- ஜூலை 29, 2009:
- ஜூலை 28, 2009:
- ஜூலை 27, 2009:
- ஜூலை 26, 2009:
- ஜூலை 25, 2009:
- ஜூலை 24, 2009:
- ஜூலை 23, 2009:
- ஜூலை 22, 2009:
- ஜூலை 21, 2009:
- ஜூலை 20, 2009:
- ஜூலை 19, 2009:
- ஜூலை 18:
- ஜூலை 17:
- ஜூலை 16:
- ஜூலை 15:
- ஜூலை 14:
- ஜூலை 13:
- ஜூலை 12:
- ஜூலை 11:
- ஜூலை 10:
- ஜூலை 8:
- ஜூலை 7:
- ஜூலை 6:
இறப்புகள்
[தொகு]2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்