அமோனியம் தையோசயனேட்டு
![]() | |||
| |||
இனங்காட்டிகள் | |||
---|---|---|---|
1762-95-4 ![]() | |||
ChEBI | CHEBI:30465 ![]() | ||
ChemSpider | 14901 ![]() | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 15666 | ||
வே.ந.வி.ப எண் | XN6465000 | ||
| |||
பண்புகள் | |||
NH4SCN | |||
வாய்ப்பாட்டு எடை | 76.122 g/mol | ||
தோற்றம் | நிறமற்றது நீருறிஞ்சி படிகவடிவ திண்மம் | ||
அடர்த்தி | 1.305 g/cm3 | ||
உருகுநிலை | 149.5 °C (301.1 °F; 422.6 K) | ||
கொதிநிலை | 170 °C (338 °F; 443 K) | ||
128 g/100 mL (0 °C) | |||
கரைதிறன் | அம்மோனியா, ஆல்ககால், அசிட்டோன் ஆகியவற்றில் கரையும் | ||
தீங்குகள் | |||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
அமோனியம் தையோசயனேட்டு ( Ammonium thiocyanate ) என்பது NH4SCN என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஒரு கனிம வேதிச்சேர்மம் ஆகும். இது அமோனியா நேர் மின்அயனியும் தையோசயனேட்டு எதிர் மின்அயனியும் சேர்ந்து உருவாகும் ஒரு உப்பு ஆகும்.
பயன்கள்
[தொகு]பெருமளவில் களைக்கொல்லிகள், தையோயூரியா, மற்றும் செயற்கைப் பிசின்கள் தயாரிக்க அமோனியம் தையோசயனேட்டு உபயோகமாகிறது. புகைப்படத்துறையில் ஒரு நிலைப்படுத்தும் முகவராகவும், தீக்குச்சிகள் தயாரிப்பிலும் பயன்படுகிறது. பல்வேறு துருக்காப்பு பொருள்களில் பகுதிப்பொருளாக இருக்கிறது. நெசவுத் தொழிலில் சாயமேற்றுதல், அச்சிடுதல் போன்ற செயல்பாடுகளில் துணையூக்கியாகச் செயல்படுகிறது. எண்ணெய் வயல்களில் சுவடறி பொருளாகவும் சிர்க்கோனியத்தில் இருந்து ஆஃபினியத்தைப் பிரித்தெடுக்கவும் செறிவு காணும் பகுப்பாய்விலும் இவ்வுப்பு பயன்படுகிறது. மென்பானங்களில் உள்ள இரும்பின் அளவறியும் வெப்ப அளவியல் சோதனைகளிலும் அமோனியம் தையோசயனேட்டு பயன்படுகிறது.
தயாரிப்பு
[தொகு]கார்பன் டைசல்பைடுடன் நீரிய அமோனியாவைச் சேர்த்து வினைபுரிய வைப்பதன் மூலமாகவே அமெரிக்காவில் அமோனியம் தையோசயனேட்டு தயாரிக்கப்பட்டது. இவ்வினையில் அமோனியம் டைதையோ கார்பமேட்டு இடைநிலைச் சேர்மமாக உருவாகிறது. பின்னர் இது சூடுபடுத்தப்பட்டு அமோனியம் தையோசயனேட்டு மற்றும் ஐதரசன் சல்பைடாக சிதைகிறது.
- CS2 + 2 NH3(aq) → NH2C(=S)SNH4 → NH4SCN + H2S
வினைகள்
[தொகு]அம்மோனியம் தையோசயனேட்டு காற்றில் நிலைப்புத் தன்மையுடன் காணப்படுகிறது. இருந்தாலும் சூடாக்கும் போது தையோயூரியாவின் மாற்றியமாகிறது.
150 பாகை செல்சியசு மற்றும் 180 பாகை செல்சியசு வெப்பநிலைகளில் , அம்மோனியம் தையோசயனேட்டு மற்றும் தையோயூரியா இரண்டும் முறையே நிறை அளவில் 30.3 % மற்றும் 25.3 % கலவையாக உள்ளன. 200 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்கும்போது இது அமோனியா,ஐதரசன் சல்பைடு, மற்றும் கார்பன் டைசல்பைடாகச் சிதைகிறது. இறுதியில் குவானிடினியம் தையோசயனேட்டு கசடாக தங்குகிறது.
அமோனியம் தையோசயனேட்டு ஒரு வலிமை குறைந்த அமிலமாகும். இது எரிசோடா அல்லது எரிபொட்டாசுடன் வினைபுரிந்து சோடியம் தையோசயனேட்டு அல்லது பொட்டாசியம் தையோசயனேட்டு உருவாக்குகிறது. மேலும், இது பெர்ரிக் உப்புகளுடன் வினைபுரிந்து அடர் சிவப்பு நிறமுள்ள பெர்ரிக் தையோசயனேட்டு கூட்டுப்பொருளையும் தருகிறது.
- 6 SCN− + Fe3+ → [Fe(SCN)6]3−
தாமிரம், வெள்ளி, துத்தநாகம், காரீயம் மற்றும் பாதரசம் போன்ற தனிமங்களுடன் அமோனியம் தையோசயனேட்டு சேர்ந்து அவற்றின் தையோசயனேட்டுகளை உண்டாக்குகிறது. பின்னர் இவை கரிம கரைப்பான்களாக பிரித்தெடுக்கப்படுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- A. F. Wells, Structural Inorganic Chemistry, 5th ed., Oxford University Press, Oxford, UK, 1984. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0198553700