அம்மோனியம் நியோடிமியம் நைட்ரேட்டு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
டையசானியம்;நியோடிமியம்(3+);பெண்டாநைட்ரேட்டு
| |
வேறு பெயர்கள்
ஈரம்மோனியம் நியோடிமியம் நைட்ரேட்டு, ஈரம்மோனியம் நியோடிமியம் பெண்டாநைட்ரேட்டு
| |
இனங்காட்டிகள் | |
15653-40-4 ![]() | |
ChemSpider | 21160394 |
EC number | 239-721-2 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 57370190 |
| |
பண்புகள் | |
H8N7NdO15 | |
வாய்ப்பாட்டு எடை | 490.34 g·mol−1 |
தோற்றம் | செவ்வூதா படிகங்கள் (நீரேற்று) |
கரையும் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அம்மோனியம் நியோடிமியம் நைட்ரேட்டு (Ammonium neodymium nitrate) என்பது Nd(NH4)2(NO3)5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1][2][3] இந்தச் சேர்மம் நைட்ரேட்டு குழுவைச் சேர்ந்த ஓர் அருமண் உலோக உப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.[4]
தயாரிப்பு
[தொகு]நியோடிமியம் ஆக்சைடு, நைட்ரிக் அமிலம் மற்றும் அம்மோனியம் நைட்ரேட்டு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து வினைக்கு உட்படுத்தினால் அம்மோனியம் நியோடிமியம் நைட்ரேட்டு உருவாகும்.[5]
மேலும், நியோடிமியம் ஆக்சைடு அல்லது நியோடிமியம் கார்பனேட்டை அம்மோனியம் நைட்ரேட்டுடன் சேர்த்து வினைபுரியச் செய்தாலும் துணை விளைபொருளாக தண்ணீரை வெளியிட்டு அம்மோனியம் நியோடிமியம் நைட்ரேட்டு உருவாகிறது:[4]
- Nd2O3 + 6NH4NO3 -> 2(NH4)2Nd(NO3)5 + 3H2O
இயற்பியல் பண்புகள்
[தொகு]அம்மோனியம் நியோடிமியம் நைட்ரேட்டு தண்ணிரில் கரையும்.
இந்தச் சேர்மம் Nd(NH4)2(NO3)5 • 4H2O—சிவப்பு-ஊதா நிறப் படிகங்களின் கலவை கொண்ட ஒரு நீரேற்றை உருவாக்குகிறது. 47 °செல்சியசு வெப்பநிலையில் சொந்த படிகமயமாக்கல் நீரில் இது உருகும்.
வேதிப் பண்புகள்
[தொகு]இந்தச் சேர்மம் வலுவான அமிலங்களுடன் வினைபுரிந்து கரையக்கூடிய சேர்மங்களை உருவாக்குகிறது. சிதைக்கப்படும்போது நைட்ரசன் ஆக்சைடுகளை வெளியிடும்.[4]
பயன்கள்
[தொகு]அம்மோனியம் நியோடிமியம் நைட்ரேட்டு பல நியோடிமியம் சேர்மங்கள் தயாரிப்பதற்கான ஒரு முன்னோடிச் சேர்மமாகப் பயன்படுகிறது. பல்வேறு வேதியியல் வினைகளுக்கு ஒரு வினையாக்கியாகவும் பயன்படுத்தப்படுகிறது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Einecs (European Inventory of Existing Commercial Chemical Substances) (in ஆங்கிலம்). Office for Official Publications of the European Communities. 1990. p. 545. Retrieved 10 March 2025.
- ↑ "diammonium neodymium pentanitrate" (in ஆங்கிலம்). chemsrc.com. Retrieved 10 March 2025.
- ↑ "CAS 15653-40-4 Diammonium neodymium pentanitrate - Alfa Chemistry". alfa-chemistry.com. Retrieved 10 March 2025.
- ↑ 4.0 4.1 4.2 "Buy Diammonium neodymium pentanitrate (EVT-13870826)". evitachem.com. Retrieved 11 March 2025.
- ↑ 5.0 5.1 "Buy Diammonium neodymium pentanitrate | | BenchChem" (in ஆங்கிலம்). benchchem.com. Retrieved 11 March 2025.