அம்மோனியம் மக்னீசியம் சல்பேட்டு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
மக்னீசியம்;அசேன்;ஐதரசன் சல்பேட்டு
| |
வேறு பெயர்கள்
ஈரமோனியம் மக்னீசியம் பிசு(சல்பேட்டு)
| |
இனங்காட்டிகள் | |
7785-18-4 ![]() | |
ChemSpider | 21160313 |
EC number | 238-782-2 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 118856368 |
| |
பண்புகள் | |
H8MgN2O8S2 | |
வாய்ப்பாட்டு எடை | 252.50 g·mol−1 |
தோற்றம் | படிகங்கள் |
அடர்த்தி | 1,723 கி/செ.மீ3 (அறுநீரேற்று) |
கரையும் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அம்மோனியம் மக்னீசியம் சல்பேட்டு (Ammonium magnesium sulfate) என்பது (NH4)2Mg(SO4)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மாகும். இச்சேர்மம் நீரேற்றுகளாக உருவாகும்.[1]
தயாரிப்பு
[தொகு]அமோனியம் பெர்சல்பேட்டுடன் மக்னீசியம் உலோகத்தைச் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தினால் அம்மோனியம் மக்னீசியம் சல்பேட்டு உருவாகும்.[2]
இயற்பியல் பண்புகள்
[தொகு]அம்மோனியம் மக்னீசியம் சல்பேட்டு படிகங்களாக உருவாகும். இது தண்ணீரில் கரையும். Mg(NH4)2(SO4)2· 6H2O என்ற வாய்ப்பாடு கொண்ட படிகநீரேற்றாக இது உருவாகிறது.[3][4] ஒற்றைச்சரிவச்சுப் படிக அமைப்பில் P21/c, என்ற இடக்குழுவில் a = 0.928 நானோமீட்டர், b = 1.257 நானோமீட்டர், c = 0.620 நானோமீட்டர், β = 107.1°, Z = 4. என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் அம்மோனியம் மக்னீசியம் சல்பேட்டு படிகமாகிறது.[5]
இயற்கைத் தோற்றம்
[தொகு]அம்மோனியம் மக்னீசியம் சல்பேட்டு அறுநீரேற்று இயற்கையாகவே பவுசிங்கால்டைட்டு என்ற பெயரில் காணப்படுகிறது. இது பிக்ரோமரைட்டு குழுவின் ஓர் அரிய கனிமமாகும். முதலில் இத்தாலியின் டசுகனியில் உள்ள புவிவெப்ப வயல்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு விவரிக்கப்பட்டது. அங்கு இது அதன் இரும்பு ஒப்புமையான மோக்ரைட்டுடன் சேர்ந்து காணப்படுகிறது.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Specifications and Drawings of Patents Issued from the United States Patent Office (in ஆங்கிலம்). U.S. Government Printing Office. 1902. p. 2755. Retrieved 25 February 2025.
- ↑ Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 3456. ISBN 978-0-412-30120-9. Retrieved 25 February 2025.
- ↑ Armarego, W. L. F.; Chai, Christina Li Lin (2013). Purification of Laboratory Chemicals (in ஆங்கிலம்). Butterworth-Heinemann. p. 559. ISBN 978-0-12-382161-4. Retrieved 25 February 2025.
- ↑ "CAS 7785-18-4 Ammonium magnesium sulfate - Alfa Chemistry". alfa-chemistry.com. Retrieved 25 February 2025.
- ↑ Kosova, Daria A.; Druzhinina, Anna I.; Tiflova, Lyudmila A.; Monayenkova, Alla S.; Uspenskaya, Irina A. (1 March 2018). "Thermodynamic properties of ammonium magnesium sulfate hexahydrate (NH4)2Mg(SO4)2·6H2O". The Journal of Chemical Thermodynamics 118: 206–214. doi:10.1016/j.jct.2017.11.016. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-9614. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0021961417304135. பார்த்த நாள்: 25 February 2025.
- ↑ Zhitova, Elena S.; Sheveleva, Rezeda M.; Zolotarev, Andrey A.; Shendrik, Roman Yu; Pankrushina, Elizaveta A.; Turovsky, Konstantin A.; Avdontceva, Margarita S.; Krzhizhanovskaya, Maria G. et al. (October 2024). "The Crystal Chemistry of Boussingaultite, (NH4)2Mg(SO4)2·6H2O, and Its Derivatives in a Wide Temperature Range" (in en). Minerals 14 (10): 1052. doi:10.3390/min14101052. பன்னாட்டுத் தர தொடர் எண்:2075-163X.