அமோனியம் கார்பனேட்டு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
அமோனியம் கார்பனேட்டு
| |
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
506-87-6 | |
ChemSpider | 10048 |
EC number | 233-786-0 |
IUPHAR/BPS
|
4509 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 517111 |
| |
UNII | PDP691CN28 |
UN number | 3077 |
பண்புகள் | |
(NH4)2CO3 | |
வாய்ப்பாட்டு எடை | 96.09 கி/மோல் |
தோற்றம் | வெண்ணிறத் தூள் |
அடர்த்தி | 1.50 கி/செமீ3 |
உருகுநிலை | 58 °C (136 °F; 331 K) |
கொதிநிலை | சிதைவுறுகிறது |
100கி/100மிலி(20°செ),சூடான நீரில் சிதைகிறது | |
-42.50·10−6 செமீ3/மோல் | |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | Irritant |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H302, H319 | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | அம்மோனியம் பைகார்பனேட்டு அம்மோனியம் கார்பமேட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | சோடியம் கார்பனேட்டு பொட்டாசியம் கார்பனேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அமோனியம் கார்பனேட்டு (Ammonium carbonate) என்பது (NH4)2CO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டினை உடைய உப்பு ஆகும். இது வெப்பமடையும் போது அம்மோனியா மற்றும் கார்பன் டை ஆக்சைடு வாயுக்களாக எளிதில் சிதைவடைவதால், இது ஒரு புளிப்பேற்றியாகவும் நுகரும் உப்பாகவும் பயன்படுத்தப்படுகிறது. இது ரொட்டி தயாரிப்போரின் அம்மோனியா என்றும் அழைக்கப்படுகிறது, மேலும் இச்சேர்மமானது நவீன புளிப்பேற்றிகள் ரொட்டி சோடா மற்றும் சமையல் சோடாவுக்கு முன்னோடியாக இருந்தது. இது முன்னர் ஆவியாகும் உப்பு என்றும் மற்றும் ஆர்ட்சார்ன் உப்பு என்றும் அழைக்கப்பட்டவைகளின் ஒரு பகுதிப்பொருளாகும்.
உற்பத்தி
[தொகு]கார்பன் டை ஆக்சைடு மற்றும் அம்மோனியாவின் நீர்க்கரைசலை இணைப்பதன் மூலம் அம்மோனியம் கார்பனேட்டு தயாரிக்கப்படுகிறது. 1997 ஆம் ஆண்டு நிலவரப்படி சுமார் 80000 டன் உற்பத்தி செய்யப்பட்டது.
சிதைவு
[தொகு]அம்மோனியம் கார்பனேட்டு இரண்டு திட்ட வெப்ப அழுத்த நிலையில் இரண்டு வழிமுறைகள் வழியாக மெதுவாகச் சிதைகிறது. ஆகவே, தொடக்கத்தில் தூயதாக காணப்படும் அம்மோனியம் கார்பனேட்டின் எந்த மாதிரியும் விரைவில் பல்வேறு துணை விளைபொருள்கள் உள்ளிட்ட கலவையாக மாறும்.
அம்மோனியம் கார்பனேட் தன்னிச்சையாக அம்மோனியம் பைகார்பனேட் மற்றும் அம்மோனியாவாக சிதைகிறது :
- (NH4)2CO3 → NH4HCO3 + NH3
இது கார்பன் டை ஆக்சைடு, நீர் மற்றும் இன்னுமொரு மூலக்கூறு அம்மோனியா என மேலும் சிதைகிறது:
- NH4HCO 3 → H2O + co2 + NH3
பயன்கள்
[தொகு]புளிப்பேற்றி
[தொகு]குறிப்பாக வடக்கு ஐரோப்பா மற்றும் எசுக்காண்டிநோவியாவிலிருந்து (எ.கா. ஸ்பெகுலூஸ், டன்ப்ரூட் அல்லது லெப்குச்சென் ) பெறப்பட்ட பாரம்பரிய சமையல் குறிப்புகளில் அம்மோனியம் கார்பனேட்டு ஒரு புளிப்பேற்றியாக பயன்படுத்தப்படலாம், இன்றைய நிலையில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சமையல் சோடாவிற்கு இது முன்னோடியாக இருந்தது.
முதலில் மான் கொம்பிலிருந்து தயாரிக்கப்பட்டு ஆர்ட்சார்ன் என்று அழைக்கப்பட்டது. இன்று இது ரொட்டி தயாரிப்போரின் அம்மோனியா என்று அழைக்கப்படுகிறது. அம்மோனியம் கார்பனேட்டின் உட்பொருளானது அம்மோனியம் பைகார்பனேட் (NH4 HCO3) மற்றும் அம்மோனியம் கார்பமேட் (NH2COONH4) ஆகியவற்றின் கலவையாகும். இது அம்மோனியம் சல்பேட்டு மற்றும் கால்சியம் கார்பனேட் கலவையிலிருந்து பதங்கமாதல் மூலம் தயாரிக்கப்படுகிறது. இது ஒரு வெண்ணிறத் தூளாகவோ அல்லது கடினமான, வெண்ணிற அல்லது ஒளிஊடுருவக்கூடிய திடப்பொருளாகவோ காணப்படுகிறது[1] இது வெப்பப்பத்தால் தூண்டப்படும் புளிப்பேற்றியாகச் செயல்பட்டு கார்பன் டை ஆக்சைடு (புளிப்பாக்குதல்), அம்மோனியா (சிதைப்பதற்கான காரணி) மற்றும் நீர் எனச் சிதைகிறது. இது சில நேரங்களில் சோடியம் பைகார்பனேட்டுடன் இணைந்து இருநிலை செயலுறு ரொட்டி சோடாவைப் போல் செயல்படுகிறது.
இது அமிலத்தன்மை சீராக்கியாகவும் E503 ஐயும் கொண்டுள்ளது. இதை ரொட்டி சோடாவைக் கொண்டு பதிலியிடலாம், ஆனால், அவ்வாறு செய்யும் போது முடிக்கப்பட்ட உணவுப் பொருளின் சுவை மற்றும் அமைப்பு இரண்டையும் பாதிக்கலாம். மொறுமொறுப்பான ரொட்டிகள் மற்றும் சிறு அளவிலான இனிப்புப்பண்டங்கள் போன்ற மெல்லிய உலர்வான நிலையில் சமைக்கப்பட்ட பொருட்களை உருவாக்க ரொட்டி தயாரிப்போரின் அம்மோனியா பயன்படுத்தப்பட வேண்டும். இது ஒரு அம்மோனியா வாசனையை வெளியேற்ற உதவும் வலிமையான பொருளாக இருக்கிறது. ஈரமான சமைக்கப்பட்ட பொருள்களில் இச்சேர்மத்தை பயன்படுத்தும் போது அம்மோனியாஒரு நீர்க்கவர் பொருளாக இருப்பதால் திடமான கசப்பு சுவை தோன்றும் என்பதால் ரொட்டி போன்ற ஈரமான வேகவைத்த பொருட்களை தயாரிக்க இதைப் பயன்படுத்தக்கூடாது.
பிற பயன்கள்
[தொகு]நுகரும் உப்புகளின் முக்கிய அங்கமாக அம்மோனியம் கார்பனேட்டு உள்ளது, இருப்பினும் அவற்றின் வணிகரீதியான உற்பத்தியின் அளவு குறைவாகவே உள்ளது.கனடாவிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பக்லியின் இருமல் மருந்து இன்று மூச்சுக்குழாய் அழற்சியின் அறிகுறிகளைப் போக்க உதவும் ஒரு பொருளாக அம்மோனியம் கார்பனேட்டைப் பயன்படுத்துகிறது. இது வாந்தியை ஏற்படுத்தும் காரணியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இது ஸ்கோல் போன்ற புகை குறைவான புகையிலை பொருட்களிலும் காணப்படுகிறது, மேலும் இது ஈஸ்ட்மேன் கோடக்கின் "கோடக் வில்லை தூய்மையாக்கி" போன்ற புகைப்பட வில்லை தூய்மையாக்கியாக நீர்க் கரைசலில் பயன்படுத்தப்படுகிறது.
குறிப்புகள்
[தொகு]- ↑ "CFR - Code of Federal Regulations Title 21". www.accessdata.fda.gov. பார்க்கப்பட்ட நாள் 2018-02-07.