கால்சியம் பைகார்பனேட்டு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
கால்சியம் ஐதரசன் கார்பனேட்டு
| |
வேறு பெயர்கள்
அழிப்பு சுண்ணாம்பு
| |
இனங்காட்டிகள் | |
ChemSpider | 8351767 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 10176262 |
| |
பண்புகள் | |
Ca(HCO3)2 | |
வாய்ப்பாட்டு எடை | 162.11464 கி/மோல் |
16.1 கி/100 மி.லி (0 °செ) 16.6 கி/100 மி.லி (20 °செ) 18.4 கி/100 மி.லி (100 °செ) | |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | எரிச்சலூட்டும் |
R-சொற்றொடர்கள் | R36 |
தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாது |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
கால்சியம் பைகார்பனேட்டு (Calcium bicarbonate) என்பது Ca(HCO3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கால்சியம் ஐதரசன் கார்பனேட்டு என்றும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது, இந்த சொல் நன்கு அறியப்பட்ட ஒரு திண்ம சேர்மத்தைக் குறிக்கவில்லை. மாறாக இது நீரிய கரைசலாக மட்டும் உள்ளது கால்சியம் (CA2+), நேர்மின் அயனியும், பைகார்பனேட்டு (HCO−3 ) அயனி மற்றும் கார்பனேட்டு ( CO2−3 ) எதிர்மின் அயனிகள், போன்றவைகளுடன் கரைந்த கார்பன் டை ஆக்சைடும் (CO 2 ) இச்சேர்மத்தின் உட்கூறுகளாக உள்ளன. இந்த கார்பன் கொண்ட வேதிச் சேர்மத்தின் ஒப்பீட்டு செறிவு காரக்காடித்தன்மை சுட்டெண்ணை (pH) பொறுத்து அமைகிறது. புதிய நீரில் பைகார்பனேட்டு 6.36-10.25 என்ற வரம்பில் ஆதிக்கம் செலுத்துகிறது.
வளிமண்டலத்துடன் தொடர்பு கொள்ளும் அனைத்து நீரும் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சிவிடும். மேலும் இந்த நீர் பாறைகள் மற்றும் வண்டல்களுடன் தொடர்பு கொள்ளும்போது அவை உலோக அயனிகள், பொதுவாக கால்சியம் மற்றும் மக்னீசியம் ஆகியவற்றைப் பெறுகின்றன, எனவே நீரோடைகள், ஏரிகள் மற்றும் குறிப்பாக கிணறுகளிலிருந்து வரும் பெரும்பாலான இயற்கை நீர்நிலைகள் இந்த பைகார்பனேட்டுகளின் நீர்த்த கரைசல்களாக கருதப்படுகின்றன. இந்த கடின நீர் குழாய்கள் மற்றும் கொதிகலன்களில் கார்பனேட்டு அளவை உருவாக்குகிறது மற்றும் அவை சோப்புகளுடன் வினைபுரிந்து விரும்பத்தகாத கறையை உருவாகின்றன.
அதன் கரைசலை உலர் நிலைக்கு ஆவியாக்குவதன் மூலம் திண்ம கால்சியம் பைகார்பனேட் போன்ற சேர்மங்களைத் தயாரிப்பதற்கான முயற்சிகள் திண்ம கால்சியம் கார்பனேட்டுக்கு பதிலாக மாறாமல் விளைகின்றன [1]
Ca(HCO3)2(நீரிய) → CO2(வாயு) + H2O(நீர்மம்) + CaCO3(திண்மம்)
இலித்தியம் மற்றும் அமோனியம் அயனிகளைத் தவிர மிகக் குறைந்த அளவில் கார உலோகங்களின் திண்ம பைகார்பனேட்டுகள் அறியப்படுகின்றன.
மேலே கூறப்பட்டுள்ள வினை, குகைகளில் தொங்கும் சுண்ணக்கல் விழுதுகள், சுண்ணக்கல் புற்றுப்பாறைகள், சுண்ணாம்புத் தூண்கள், குகைக் கனிமபடிவுகள் போன்றவை உருவாக்கத்திற்கு மிகவும் முக்கியமானதாகும். மண்ணிலிருக்கும் உயிரினங்களிலிருந்து பெறப்பட்ட கூடுதல் கார்பன் டை ஆக்சைடு உட்பட கார்பன் டை ஆக்சைடு கொண்ட நீர் சுண்ணாம்பு அல்லது பிற கால்சியம் கார்பனேட் கொண்ட தாதுக்கள் வழியாக செல்லும்போது, இது கால்சியம் கார்பனேட்டின் ஒரு பகுதியைக் கரைக்கிறது, எனவே பைகார்பனேட்டு மிகுதியாக அதிகரிக்கிறது. நிலத்தடி நீர் குகைக்குள் நுழையும் போது, அதிகப்படியான கார்பன் டை ஆக்சைடு பைகார்பனேட்டின் கரைசலில் இருந்து வெளியிடப்படுகிறது, இதனால் மிகக் குறைவான கரையக்கூடிய கால்சியம் கார்பனேட்டு படிவு உருவாகிறது.
இவ்வினையின் தலைகீழ் செயல்பாட்டில், மழைநீரில் (H 2 O) கரைந்த கார்பன் டை ஆக்சைடு (CO 2 ) சுண்ணாம்பு, கால்சியம் கார்பனேட்டு (CaCO 3 ) போன்றவற்றுடன் வினைபுரிந்து கரையக்கூடிய கால்சியம் பைகார்பனேட்டு சேர்மம் (Ca (HCO 3 ) 2 ) உருவாகிறது. இந்த கரையக்கூடிய சேர்மம் பின்னர் மழைநீரினால் கழுவப்படுகிறது. இந்த வகையான சூழல் மாற்ற வினை கார்பனேற்றம் என்று அழைக்கப்படுகிறது.
மருத்துவத்தில்,இரத்தப் பொட்டாசியக் குறைவு சிகிச்சைக்காக கால்சியம் பைகார்பனேட்டு சில நேரங்களில் நரம்பூடாக செலுத்தப்பட்டு உடனடியாக இருதய அழுத்தத் விளைவுகள் சரி செய்ய நிர்வகிக்கப்படுகிறது . உடலின் கால்சியம் செறிவையும் அதே சமயத்தில் அமில அளவை திருத்தவும் இது பயன்படுகிறது. .
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-02-26. பார்க்கப்பட்ட நாள் 2019-11-20.