இரும்பு(II) கார்பனேட்டு
![]() | |
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
பெரசு கார்பனேட்டு
| |
இனங்காட்டிகள் | |
563-71-3 ![]() | |
ChemSpider | 10774? |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 11248 |
| |
UNII | MZ3Q72U52O ![]() |
பண்புகள் | |
FeCO3 | |
வாய்ப்பாட்டு எடை | 115.854 கி/மோல் |
தோற்றம் | வெண்மையான தூள் அல்லது படிகம் |
அடர்த்தி | 3.9 கி/செ.மீ3[1] |
உருகுநிலை | சிதையும் |
0.0067 கி/லி;[2] Ksp = 1.28 × 10−11 [3] | |
கரைதிறன் பெருக்கம் (Ksp)
|
3.13×10−11[4] |
+11,300·10−6 செ.மீ3/மோல் | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | அறுகோணம் / முக்கோணம் (32/m) இடக்குழு: R 3c, a = 4.6916 Å, c = 15.3796 Å |
ஒருங்கிணைவு வடிவியல் |
6 |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | அன்னபேதி |
ஏனைய நேர் மின்அயனிகள் | தாமிர(II) கார்பனேட்டு, துத்தநாக கார்பனேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இரும்பு(II) கார்பனேட்டு (Iron(II) carbonate) என்பது FeCO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பெரசு கார்பனேட்டு என்ற பெயராலும் அறியப்படுகிறது. இயற்கையில் சிடரைட்டு என்ற கனிமமாக இரும்பு(II) கார்பனேட்டு தோன்றுகிறது. சாதாரண சுற்றுப்புறச் சூழ்நிலையில் இது Fe2+ நேர்மின் அயனியும் CO32− எதிர்மின் அயனியும் கொண்ட பச்சை-பழுப்பு நிறத்தில் திண்மநிலை அயனிச் சேர்மமாகக் காணப்படுகிறது.[5]
தயாரிப்பு
[தொகு]இரும்பு(II) குளோரைடு மற்றும் சோடியம் கார்பனேட்டு போன்ற இரண்டு அயனிகள் சேர்ந்து வினைபுரிவதால் இரும்பு(II) கார்பனேட்டு உருவாகிறது.
- FeCl
2 + Na
2CO
3 → FeCO
3 + 2NaCl
இரும்பு(II) உப்பின் கரைசலான இரும்பு(II) பெர்குளோரேட்டு கரைசலுடன் சோடியம் பைகார்பனேட்டுடன் கரைசலைச் சேர்த்து கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுவதன் மூலமும் இரும்பு(II) கார்பனேட்டைத் தயாரிக்கலாம் :[6]
- Fe(ClO
4)2 + 2NaHCO
3 → FeCO
3 + 2NaClO
4 + CO
2 + H
2O
செல் மற்றும் பிறர் இந்த வினையைப் பயன்படுத்தினர். ஆனால் Fe(ClO4)2)n சேற்மத்திற்குப் பதிலாக இதை தயாரிக்க FeCl
2 சேர்மத்தை 0.2 மோலார் கரைசலைப் பயன்படுத்தினர்.[7]
கரைசலிலிருந்து ஆக்சிசனை தவிர்க்க வினையை கவனமாக கையாளவேண்டும். ஏனெனில் Fe2+ அயனி எளிதாக Fe3+ ஆக ஆக்சிசனேற்றப்படுகிறது. குறிப்பாக காடித்தன்மை எண் 6.0 மதிப்புக்கு மேல் சென்றால் இம்மாற்றம் நிகழும்.[6]
எஃகு அல்லது இரும்பு மேற்பரப்பில் கார்பன் டை ஆக்சைட்டின் கரைசல்களுக்கு வெளிப்படும் போது இரும்பு கார்பனேட்டு நேரடியாக செதில்களாக உருவாகிறது:[3]
- Fe + CO
2 + H
2O → FeCO
3 + H
2
பண்புகள்
[தொகு]வெப்பநிலையுடன் நீரில் கரையும் தன்மையின் சார்பு வெய் சன் மற்றும் பிறரால் தீர்மானிக்கப்பட்டது.
இங்குள்ள் T என்பது கெல்வின்களின் முழுமையான வெப்பநிலையையும் I என்பது திரவத்தின் அயனி வலிமையையும் குறிக்கின்றன. [3]
இரும்பு கார்பனேட்டு சுமார் 500-600 ° செல்சியசு வெப்பநிலையில் (773-873 கெல்வின்) சிதைகிறது.[8]
பயன்கள்
[தொகு]இரும்பு கார்பனேட்டு இரத்த சோகைக்கு சிகிச்சையளிப்பதற்கு இரும்பு உணவு நிரப்பியாக பயன்படுத்தப்படுகிறது. [9]
நச்சுத் தன்மை
[தொகு]இரும்பு கார்பனேட் சற்று நச்சுத்தன்மை கொண்டது; 0.5 முதல் 5 கிராம்/கிலோ (70 கிலோ எடையுள்ள நபருக்கு 35 முதல் 350 கிராம் வரை) வாய்வழி மரணமடையும் வாய்ப்பு உள்ளது.[10]
இரும்பு(III) கார்பனேட்டு
[தொகு]இரும்பு(II) கார்பனேட் போலல்லாமல், இரும்பு(III) கார்பனேட் தனிமைப்படுத்தப்படவில்லை. நீரிய பெரிக் அயனிகள் மற்றும் கார்பனேட்டு அயனிகளின் வினை புரிவதன் மூலம் இரும்பு(III) கார்பனேட்டுக்குப் பதிலாக இரும்பு(III) ஆக்சைடைடு உருவானது. கார்பன் டை ஆக்சைடு அல்லது பைகார்பனேட்டு வெளியிடப்பட்டது.[11]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ D R. Lide, ed.(2000): "CRC Handbook of Chemistry and Physics". 81st Edition. Pages 4-65.
- ↑ Patty, F., ed. (1963): "Industrial Hygiene and Toxicology"; volume II: 'Toxicology". 2nd ed. Interscience. Page 1053.
- ↑ 3.0 3.1 3.2 Wei Sun (2009): "Kinetics of iron carbonate and iron sulfide scale formation in CO2/H2S corrosion". PhD Thesis, Ohio University.
- ↑ John Rumble (June 18, 2018). CRC Handbook of Chemistry and Physics (in English) (99 ed.). CRC Press. pp. 5–188. ISBN 1138561630.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ (1995): "Kirk-Othmer Encyclopedia of Chemical Technology". 4th ed. Volume 1.
- ↑ 6.0 6.1 Philip C. Singer and Werner Stumm (1970): "The solubility of ferrous iron in carbonate-bearing waters". Journal of the American Water Works Association, volume 62, issue 3, pages 198-202. https://www.jstor.org/stable/41266171
- ↑ Ozlem Sel, A.V. Radha, Knud Dideriksen, and Alexandra Navrotsky (2012): "Amorphous iron (II) carbonate: Crystallization energetics and comparison to other carbonate minerals related to CO2 sequestration". Geochimica et Cosmochimica Acta, volume 87, issue 15, pages 61–68. எஆசு:10.1016/j.gca.2012.03.011
- ↑ "Kinetics of Thermal Decomposition of Iron Carbonate". Egyptian Journal of Chemistry 53 (6): 871–884. 2010-12-31. doi:10.21608/ejchem.2010.1268. பன்னாட்டுத் தர தொடர் எண்:2357-0245. http://dx.doi.org/10.21608/ejchem.2010.1268.
- ↑ "AAFCO methods for substantiating nutritional adequacy of dog and cat foods (proposed for 2014 publication)" (PDF). AAFCO. 2013.
- ↑ Gosselin, R.E., H.C. Hodge, R.P. Smith, and M.N. Gleason. Clinical Toxicology of Commercial Products. 4th ed. Baltimore: Williams and Wilkins, 1976., p. II-97
- ↑ Ronald Rich (2007). "8 Iron through Hassium". Inorganic Reactions in Water (in ஆங்கிலம்) (1st ed.). Springer Berlin, Heidelberg. p. 178. ISBN 9783540739616.