ஒட்டாவைட்டு
ஒட்டாவைட்டு Otavite | |
---|---|
ஒட்டாவைட்டு, திசுமெப், ஓசிக்கோட்டோ மண்டலம், நமீபியா | |
பொதுவானாவை | |
வகை | கார்பனேட்டு கனிமங்கள் |
வேதி வாய்பாடு | CdCO3 |
இனங்காணல் | |
படிக அமைப்பு | முக்கோணம் |
ஒட்டாவைட்டு (Otavite) என்பது CdCO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் அரிய காட்மியம் கார்பனேட்டுக் கனிமம் ஆகும். ஒட்டாவைட்டு கனிமம் முக்கோண வடிவமைப்புத் திட்டத்தில் படிகமாகிறது. தகடுகளாகவும் சிறிய சம்பக்கமில்லாத முக்கோணங்களாகவும் முத்துப்போல ஒளிர்வும் வளைந்து கொடுக்காத தன்மையும் கொண்ட கனிமமாக இது உருவாகிறது. வெண்மை, சிவப்பு கலந்த வெண்மை, வெண்மை கலந்த மஞ்சள் பழுப்பு நிறங்களில் இது காணப்படுகிறது. ஒட்டாவைட்டின் மோவின் கடினத்தன்மை மதிப்பு அளவு 3.5 முதல் 4 ஆகவும் ஒப்படர்த்தி அளவு 5.04 ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளன. அசூரைட்டு, கால்சைட்டு, மாலகைட்டு, சிமித்சோனைட்டு போன்ற கனிமங்களுடன் கலந்து இது காணப்படுகிறது.
1906 ஆம் ஆண்டு நமீபியா நாட்டில் உள்ள மத்திய நமீபிய நகரமான ஒட்டாவியில் அமைந்திருக்கும் திசுமெப் மாவட்டத்தில் முதன்முதலாக இக்கனிமம் கண்டறியப்பட்டது.
பன்னாட்டு கனிமவியல் சங்கம் ஒட்டாவைட்டு கனிமத்தை Ota[1] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. https://www.cambridge.org/core/journals/mineralogical-magazine/article/imacnmnc-approved-mineral-symbols/62311F45ED37831D78603C6E6B25EE0A.
- Mindat locality data
- Webmineral
- Mineral galleries பரணிடப்பட்டது 2005-10-29 at the வந்தவழி இயந்திரம்