உள்ளடக்கத்துக்குச் செல்

சமையல் சோடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சமையல் சோடா (Baking soda)என்பது ஓா் உலா் புளிப்பேற்றி. இது காா்பனேட் அல்லது பைகார்பனேட் மற்றும் வலிமை குறைந்த அமிலம் இவற்றின் கலவை. இது அடுபொருட்களின் கன அளவு மற்றும் மிருதுத்தன்மையை அதிகாிக்கவும் சோ்க்கப்படுகிறது. சமையலுக்காக தயாாிக்கப்பட்ட மாவு அல்லது இட்லி மாவு அல்லது பிசைந்த மாவு இவற்றோடு சமையல் சோடாவைச் சேர்க்கும் போது அமில-கார வினையை நிகழச்செய்து காா்பன்-டை-ஆக்சைடை வெளியேற்றச் செய்கிறது. இவ்வாறு காா்பன்-டை-ஆக்சைடு வாயு வெளியேறும் போது ஏற்படும் காற்றுக்குமிழ்களால் ஈர மாவு அல்லது பிசைந்த மாவு புளிப்பேற்றம் அடைந்து, மென்மையும் அடைகிறது. இது ஈஸ்டுகளைப் பயன்படுத்தி நொதித்தல் வினை நடைபெற வேண்டிய செயலுக்குப் பதிலாக பயன்படுகிறது. ஏனென்றால், நொதித்தல் செயல்முறை சில நேரங்களில் விரும்பத்தகாத ஒரு வித நெடியை[1] உருவாக்குகிறது. இதைத் தவிா்ப்பதற்காகவே அடுமனைத் தொழிலில் சமையல் சோடா அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது.

தயாாிப்பு மற்றும் வினைவழிமுறை

[தொகு]

பெரும்பான்மையான வணிகரீதியில் தயாாிக்கப்படும் சமையல் சோடாக்கள், சோடியம்-பை-காா்பனேட், (சமையல் சோடா) மற்றும் ஏதேனும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அமில உப்புக்களால் உருவாக்கப்படுகின்றன. சமையல் சோடாவின் எடையினடிப்படையிலான சதவீத இயைபு: சோடியம்-பை-காா்பேனட் - 30%, மோனோ கால்சியம் பாஸ்பேட் 5-12%, சோடியம் அலுமினியம் சல்பேட் 21-26% ஆகும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள உட்பொருட்களுள் இரண்டாவது மற்றும் மூன்றாவது குறிப்பிட்டுள்ளவை அமிலத்தன்மை உடையவை ஆகும். இவை சோடியம்-பை-காா்பனேட் மற்றும் நீா் இவற்றுடன் சோ்ந்து காா்பன்-டை-ஆக்சைடை வெளியேற்றுகின்றன. இவ்வாறான இரண்டு அமில காரணிகள் செயல்படும் முறை இரட்டைச்செயல்முறை எனப்படுகிறது. இத்தகைய கலவையில் பயன்படுத்தப்படும் மற்றுமொரு அமில காரணி டாா்டாரிக் அமிலத்தின் வழிப்பொருள் ஆகும். சமையல் சோடாவானது மாவின் ஒத்த தன்மை மற்றும் நிலைப்புத் தன்மையை அதிகாிக்கக்கூடிய பகுதிப்பொருட்களையும் கொண்டுள்ளது.[2]

வீட்டு பயன்பாட்டுக்கான சமையல் சோடாவின் தயாாிப்பு வணிகரீதியிலான சமையல் சோடாவின் தயாரிப்பு முறையிலிருந்து வேறுபட்டது. வீட்டு உபயோகத்துக்கான சமையல் சோடாவில் பயன்படுத்தப்படும் சோடியம் அலுமினியம் சல்பேட்டுக்குப் பதிலாக, வணிகரீதியிலான சமையல் சோடாவில் சோடியம் பைரோ பாஸ்பேட் பயன்படுத்தப்படுகிறது. சமையல் சோடா தயாரிப்புக்கான வேதிவினை பின்வருமாறு தரப்படுகிறது.[3]

NaHCO3 + H+ → Na+ + CO2 + H2O

மேற்கோள்கள்

[தொகு]
  1. Matz, Samuel A. (1992). Bakery Technology and Engineering (3 ed.). Springer. p. 54. பார்க்கப்பட்ட நாள் 2009-08-12.
  2. John Brodie, John Godber "Bakery Processes, Chemical Leavening Agents" in Kirk-Othmer Encyclopedia of Chemical Technology 2001, John Wiley & Sons. எஆசு:10.1002/0471238961.0308051303082114.a01.pub2
  3. A.J. Bent, ed. (1997). The Technology of Cake Making (6 ed.). Springer. p. 102. பார்க்கப்பட்ட நாள் 2009-08-12.

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமையல்_சோடா&oldid=2953817" இலிருந்து மீள்விக்கப்பட்டது