எண்ணெய்

எண்ணெய் (oil) என்பது முனைவுத்தன்மையற்ற, சூழல் வெப்பநிலையில் பிசுக்குமை தன்மை கொண்ட நீர்மமாக இருக்கும் ஒரு வேதிப்பொருள் ஆகும். இது நீரில் கரையாததும், கொழுமியங்களில் கரையும் தன்மை கொண்டதுமாகும். இவை உயர் கார்பன், ஐதரசன் அளவைக் கொண்டிருப்பதுடன், இலகுவில் எரியும் தன்மை கொண்டதாகவும், மேற்பரப்புச் செயலியாகத் தொழிற்படுவதாகவும் காணப்படும்.[1][2][3]
எண்ணெய் & Oil சொல் மூலம்
[தொகு]தமிழில் எள், நெய் ஆகிய இரண்டு சொற்களின் கூட்டுச் சொல்லாக (எள் + நெய் = எண்ணெய்) எண்ணெய் வந்தது. எள்ளிலிருந்து எடுக்கப்படும் நெய்யையே முதலில் குறித்தது எனினும், இப்போது எல்லா தாவர நெய்களையும் குறிக்கும் பொது தமிழ் சொல்லாக மாறிவிட்டது. Oil என்ற சொல் Olive என்ற ஆங்கில சொல்லில் இருந்து வந்தது. இன்று Oil என்ற சொல் தாவர எண்ணெய்கள், விலங்கு எண்ணெய்கள் மற்றும் கனிம எண்ணெய்களை குறிக்கும் பொது ஆங்கில சொல்லாக மாறிவிட்டது.
எண்ணெய் கிடைக்கும் வழிகள்
[தொகு]தாவரங்களில் கிடைக்கும் எண்ணெய்கள், விலங்குகளில் கிடைக்கும் எண்ணெய்கள், பூமியில் தோண்டி எடுக்கப்படும் எண்ணெய்கள் என வெவ்வேறு வகை எண்ணெய்கள் கிடைக்கின்றன
சமையலில் எண்ணெய்
[தொகு]தமிழர்களின் அன்றாட வாழ்வில் இடம் பிடித்திருக்கும் மிக முக்கியமான உணவுப்பொருள் எண்ணெய் ஆகும். அந்த எண்ணெய் பல வகைப்படும். அவை எண்ணெய் வித்துகளில் இருந்து பெறப்படுகின்றன.
எண்ணெய் வித்துகள்
[தொகு]நல்லெண்ணெய்
[தொகு]எண்ணெய் என்பது எள்ளிலிருந்து பெறப்படும் நல்லெண்ணெயை மட்டுமே முதலில் குறித்தது. கிறிஸ்துவின் சம காலத்திலும் அதற்கு முன்னரும் நல்லெண்ணெய் தமிழர் சமையலில் பயன்பட்டு வந்துள்ளது.
விளக்கெண்ணெய்
[தொகு]ஆமணக்கு விதையினைச் செக்கிலிட்டு பெறப்படும் எண்ணெய் விளக்கெண்ணெயாகும். இது தலையில் தேய்த்துக் கொள்ளவும் மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது.
புன்னை எண்ணெய்
[தொகு]புன்னை மரத்தின் விதைகளில் இருந்து புன்னை எண்ணெய் பெறப்படுகிறது. இது விளக்கு எரிக்க பயன்படுகிறது.
கடலை எண்ணெய்
[தொகு]நிலக்கடலையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் கடலை எண்ணெய் என அழைக்கப்படுகிறது.
தேங்காய் எண்ணெய்
[தொகு]தென்னை மரத்தில் இருந்து பெறப்படும் தேங்காயை வெயிலில் இட்டு காய வைத்து, செக்கிலிட்டு ஆட்டி பெறப்படும் எண்ணெய் தேங்காய் எண்ணெயாகும்.
சளம்பனை எண்ணெய்
[தொகு]பனையின் ஒரு வகையான சளம்பனையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் சளம்பனை எண்ணெய் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Linear B word e-ra-wo". Palaeolexicon. Word study tool of ancient languages. "e-ra3-wo". Archived from the original on 2016-03-21. Retrieved 2014-03-22. Raymoure, K.A. "e-ra-wo". Minoan Linear A & Mycenaean Linear B. Deaditerranean. Archived from the original on 2016-03-20. Retrieved 2014-03-22.
- ↑ Alberts, Bruce; Johnson, Alexander; Lewis, Julian; Raff, Martin; Roberts, Keith; Walter, Peter. Molecular Biology of the Cell. New York: Garland Science, 2002, pp. 62, 118-119.
- ↑ Brown, Jessica. "Which cooking oil is the healthiest?". www.bbc.com. BBC. Retrieved 18 May 2021.