பிரசியோடைமியம் அறுபோரைடு
![]() | |
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
பிரசியோடைமியம் போரைடு
| |
இனங்காட்டிகள் | |
12008-27-4 ![]() | |
ChemSpider | 62852859 ![]() |
EC number | 234-534-2 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 170843463 |
| |
பண்புகள் | |
PrB6 | |
வாய்ப்பாட்டு எடை | 205.77 கி/மோல் |
தோற்றம் | கருப்பு நிறப் படிகங்கள் |
அடர்த்தி | 4.84 கி/செ.மீ3 |
உருகுநிலை | 2610 °செல்சியசு[1] |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுரம் |
புறவெளித் தொகுதி | Pm3m ; Oh |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பிரசியோடைமியம் அறுபோரைடு (Praseodymium hexaboride) என்பது PrB6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பிரசியோடைமியம் எக்சாபோரைடு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. பிரசியோடைமியமும் போரானும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது. கருப்பு நிறப் படிகங்களாக பிரசியோடைமியம் அறுபோரைடு தோன்றுகிறது. இது தண்ணிரில் கரையாது.
தயாரிப்பு
[தொகு]விகிதவியல் அளவுகளில் பிரசியோடைமியத்தையும் போரானையும் சேர்த்து வினைபுரியச் செய்தால் பிரசியோடைமியம் அறுபோரைடு உருவாகும்.
- Pr + 6B -> PrB6
பண்புகள்
[தொகு]பிரசியோடைமியம் அறுபோரைடு Pm3m என்ற இடக்குழுவில், a = 0.4129 நானோமீட்டர், Z = 1 என்ற செலளவுருக்களுடன் கனசதுர படிக அமைப்பில் கருப்பு நிற படிகங்களாக உருவாகிறது. கால்சியம் அறுபோரைடுடன் சமகட்டமைப்பைக் கொண்டுள்ளது.[2] பிரசியோடைமியம் அறுபோரைடு 2610 °செல்சியசு வெப்பநிலையில் முற்றொருமித்து உருகும்.[3] 7 கெல்வினுக்கும் குறைவான வெப்பநிலையில், இச்சேர்மத்தில் ஓர் எதிர்ப்பு காந்த நிலைக்கான காந்த மாற்றம் ஏற்படுகிறது.[4][5][6] இது தண்ணீரில் கரையாது.
பயன்
[தொகு]பிரசியோடைமியம் அறுபோரைடு உயர் சக்தி மின்னணு சாதனங்களின் நேர்மின்வாய்களுக்கான உலோகக் கலவைகளின் ஓர் அங்கமாகப் பயன்படுத்தப்படுகிறது
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Справочник химика. Vol. 2 (3-е изд., испр ed.). Л.: Химия. 1971.
{{cite book}}
: Unknown parameter|agency=
ignored (help) - ↑ Справочник химика. Vol. 1 (2-е изд., испр ed.). М.-Л.: Химия. 1966.
{{cite book}}
: Unknown parameter|agency=
ignored (help) - ↑ Руководство по неорганическому синтезу: В 6-ти т. Vol. 4. М.: Мир. 1985.
{{cite book}}
: Unknown parameter|agency=
ignored (help) - ↑ М.А. Анисимов, А.В. Кузнецов, А.В. Богач, В.В. Глушков, С.В. Демишев, Н.А. Самарин, Н.Ю. Шицевалова, А.В. Левченко, В.Б. Филипов, Н.Е. Случанко (2012). Подавление спонтанной намагниченности в парамагнитной фазе PrB6 (Материалы Международной научно-технической конференции ). பக். 160–163. http://conf.mirea.ru/CD2012/pdf/p2/39.pdf.
- ↑ H. Hacker Jr., Y. Shimada, K. S. Chung (1971). Magnetic properties of CeB6, PrB6, EuB6, and GdB6. 4 (Physica Status Solidi (a) ). பக். 459–465. doi:10.1002/pssa.2210040221.
- ↑ М.А. Анисимов, А.В. Богач, В.В. Глушков, С.В. Демишев, Н.А. Самарин, В.Б. Филипов, Н.Ю. Шицевалова, Н.Е. Случанко (2010). Новая магнитная фаза в гексабориде празеодима. 2 (Труды МФТИ. — . — Том , № (5) ). பக். 9–12. https://mipt.ru/upload/154/9-12-arphcxl1tgs.pdf.