உள்ளடக்கத்துக்குச் செல்

பிரசியோடைமியம்(III) மாலிப்டேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரசியோடைமியம்(III) மாலிப்டேட்டு
Praseodymium(III) molybdate
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/2Pr.3Mo.12O/q2*+3;;;;;;;;;;6*-1
    Key: BVFZSWQSIJJNQM-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
  • [Pr+3].[Pr+3].[O-][Mo](=O)(=O)[O-].[O-][Mo]([O-])(=O)=O.[O-][Mo]([O-])(=O)=O
பண்புகள்
Pr2(MoO4)3
தோற்றம் crystals
அடர்த்தி 4.84 கி/செ.மீ3[1]
உருகுநிலை 1030 °C[1]
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.


பிரசியோடைமியம்(III) மாலிப்டேட்டு (Praseodymium(III) molybdate) என்பது Pr2(MoO4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பிரசியோடைமியமும் மாலிப்டினிக்கு அமிலமும் சேர்ந்து இந்த பிரசியோடைமியம் உப்பு உருவாகிறது. படிகங்களாக உருவாகும் இச்சேர்மம் நீரில் கரையாது.

இயற்பியல் பண்புகள்

[தொகு]

பிரசியோடைமியம்(III) மாலிப்டேட்டு ஒற்றைச்சரிவச்சு படிகத்திட்டத்தில் I2/b(αβ0)00 என்ற மீயிடக்குழுவில் a = 0.530284 நானோமீட்டர், b = 0.532699 நானோமீட்டர், c = 1.17935 நானோமீட்டர் மற்றும் β = 90.163 என்ற அணிக்கோவை அளவுருக்களில் படிகமாகிறது.[2] 235 பாகை செல்சியசு வெப்பநிலை முதல் 987 பாகை செல்சியசு வெப்பநிலை வரையிலான இடைவெளியில் பல்வேறு நிலை மாற்றங்கள் படிகத்தில் நிகழ்கின்றன.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Справочник химика. Vol. 2 (3-е изд., испр ed.). Л.: Химия. Редкол.: Никольский Б.П. и др. 1971.
  2. Logvinovich, D.; Arakcheeva, A.; Pattison, P.; Eliseeva, S.; Tomeš, P.; Marozau, I.; Chapuis, G. (2010-02-15). "Crystal Structure and Optical and Magnetic Properties of Pr 2 (MoO 4 ) 3" (in en). Inorganic Chemistry 49 (4): 1587–1594. doi:10.1021/ic9019876. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. பப்மெட்:20067248. https://pubs.acs.org/doi/10.1021/ic9019876. 
  3. Ponomarev, B. K.; Zhukov, A. (2012-05-09). "Magnetic and Magnetoelectric Properties of Rare Earth Molybdates" (in en). Physics Research International 2012: e276348. doi:10.1155/2012/276348. பன்னாட்டுத் தர தொடர் எண்:2090-2220.