பிரசியோடைமியம் ஈரயோடைடு
![]() | |
இனங்காட்டிகள் | |
---|---|
65530-47-4 | |
பண்புகள் | |
I2Pr | |
வாய்ப்பாட்டு எடை | 394.72 g·mol−1 |
தோற்றம் | வெண்கலத் திண்மம்[1][2] |
உருகுநிலை | 758 °செல்சியசு[1][2] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | இலந்தனம் ஈரயோடைடு சீரியம் ஈரயோடைடு நியோடிமியம்(II) அயோடைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பிரசியோடைமியம் ஈரயோடைடு (Praseodymium diiodide) என்பது PrI2 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பிரசியோடைமியமும் அயோடினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. பிரசியோடைமியம் டையையோடைடு என்றும் அழைக்கப்படும் இது ஓர் அயனச் சேர்மமாகும். இதன் அயனி வாய்ப்பாடு Pr3+(I−)2e− ஆகும்.[2] எனவே இது ஓர் உண்மையான பிரசியோடைமியம்(II) சேர்மம் அல்ல என்று கருதப்படுகிறது.
தயாரிப்பு
[தொகு]பிரசியோடைமியம்(III) அயோடைடுடன் பிரசியோடைமியம் உலோகத்தைச் சேர்த்து வளிமண்டல வாயுச் சூழலில் 800 முதல் 900 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்தால் பிரசியோடைமியம் ஈரயோடைடு உருவாகும்:[3]
- Pr + 2 PrI3 → 3 PrI2
பாதரசம்(II) அயோடைடுடன் பிரசியோடைமியம் வினைபுரிவதன் மூலமும் பிரசியோடைமியம் ஈரயோடைடு சேர்மத்தைப் பெறலாம். இவ்வினையில் பிரசியோடைமியம் பாதரசத்தை இடப்பெயர்ச்சி செய்கிறது::[3]
- Pr + HgI2 → PrI2 + Hg
பிரசியோடைமியம் ஈரயோடைடு முதன் முதலில் 1961 ஆம் ஆண்டு இயான் டி கார்பெட்டு என்பவரால் கண்டறியப்பட்டது.[4]
பண்புகள்
[தொகு]பிரசியோடைமியம் ஈரயோடைடு தண்ணீரில் கரையும். உலோகப் பளபளப்புடன் கூடிய ஒளிபுகா பண்பு கொண்டு வெண்கல நிறத்தில் திண்மமாக இது காணப்படுகிறது.[3] பளபளப்பும் மிக அதிக கடத்துத்திறனும் {PrIII,2I-,e-} என்ற முறைப்படுத்தல் மூலம் விளக்க இயலும். ஓர் உலோக மையத்திற்கு ஒரு எலக்ட்ரான் என ஒரு கடத்துகை பட்டையில் உள்ளடங்கா பிணைப்பாக மாற்றப்படுகிறது.[2]
பிரசியோடைமியம் ஈரயோடைடு நீருறிஞ்சும் தன்மையைக் கொண்டுள்ளது. தண்ணீருடன் வினைபுரியும்போது பின் வரும் வினை நிகழ்ந்து ஐதரசன் வாயு வெளியேறுகிறது.[3]
- 2 PrI2 + 2 H2O → 2 PrOI + H2↑ + 2 HI
பிரசியோடைமியம் ஈரயோடைடு ஐந்து படிக அமைப்புகளைக் கொண்டுள்ளது. MoSi2 அமைப்பு, அறுகோண MoS2 அமைப்பு, முக்கோண MoS2 அமைப்பு, காட்மியம் குளோரைடு அமைப்பு மற்றும் சிபைனல் அமைப்பு என்பன அந்த ஐந்து கட்டமைப்புகளாகும்.[5] காட்மியம் குளோரைடு அமைப்புடன் கூடிய பிரசியோடைமியம் ஈரயோடைடு முக்கோண படிக அமைப்புக்கு சொந்தமானதாகும். R3m (எண். 166) என்ற இடக்குழுவில் a = 426.5 பைக்கோமீட்டர் மற்றும் c = 2247,1 பைக்கோமீட்டர் என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் இது படிகமாகிறது. சிபைனல் அமைப்பு பிரசியோடைமியம் ஈரயோடைடு கனசதுரப் படிக அமைப்பில் [6]F43 (எண். 216) என்ற இடக்குழுவில் a= 1239.9 பைக்கோமீட்டர் என்ற அணிக்கோவை அளவுருவுடன் இது படிகமாகிறது.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Haynes, William M. (2012). CRC handbook of chemistry and physics : a ready-reference book of chemical and physical data. Boca Raton, Fla.: CRC. p. 84. ISBN 978-1-4398-8049-4. OCLC 793213751.
- ↑ 2.0 2.1 2.2 2.3 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. p. 1240–1242. ISBN 0080379419.
- ↑ 3.0 3.1 3.2 3.3 hrsg. von Georg Brauer. Unter Mitarb. von M. Baudler (1975). Handbuch der präparativen anorganischen Chemie / 1 (in ஜெர்மன்). Stuttgart: Enke. p. 1081. ISBN 3-432-02328-6. OCLC 310719485.
- ↑ Meyer, G.; Naumann, Dieter; Wesemann, Lars (2006). Inorganic chemistry in focus. III. Weinheim: Wiley-VCH. p. 45. ISBN 978-3-527-60993-2. OCLC 86225074.
- ↑ Riedel, Erwin; Alsfasser, Ralf (2007). Moderne anorganische Chemie : mit CD-ROM : [133 Tabellen] (in ஜெர்மன்). Berlin: Gruyter. p. 366. ISBN 978-3-11-019060-1. OCLC 237200027.
- ↑ Warkentin, E.; Bärnighausen, H. (1979). "Die Kristallstruktur von Praseodymdiiodid (Modifikation V)". Z. anorg. allg. Chem. 459: 187–200. doi:10.1002/zaac.19794590120.
- ↑ Gerlitzki, Niels; Meyer, Gerd; Mudring, Anja-Verena; Corbett, John D. (2004). "Praseodymium diiodide, PrI2, revisited by synthesis, structure determination and theory". Journal of Alloys and Compounds (Elsevier BV) 380 (1–2): 211–218. doi:10.1016/j.jallcom.2004.03.046. பன்னாட்டுத் தர தொடர் எண்:0925-8388.