உள்ளடக்கத்துக்குச் செல்

நியோடிமியம்(II) அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நியோடிமியம்(II) அயோடைடுNeodymium(II) iodide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஈரயோடோநியோடிமியம்
வேறு பெயர்கள்
நியோடிமியம் ஈரயோடைடு
இனங்காட்டிகள்
61393-36-0
EC number 622-142-8
InChI
  • InChI=1S/2HI.Nd/h2*1H;/p-2
    Key: XKFMXEILCPYOQT-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 57351516
  • [I-].[I-].[Nd+2]
பண்புகள்
NdI2
வாய்ப்பாட்டு எடை 398.05
தோற்றம் அடர் கருநீல திண்மம்[1]
கட்டமைப்பு
படிக அமைப்பு SrBr2 type (Tetragonal)
புறவெளித் தொகுதி P4/n (No. 85)
Lattice constant a = 1257.3 பைக்கோமீட்டர், c = 765.8 பைக்கோமீட்டர்
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)[2]
GHS signal word எச்சரிக்கை[2]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் நியோடிமியம்(II) புளோரைடு, நியோடிமியம்(II) குளோரைடு, நியோடிமியம்(II) புரோமைடு
ஏனைய நேர் மின்அயனிகள் இலந்தனம் ஈரயோடைடு, சீரியம் ஈரயோடைடு, பிரசியோடைமியம் ஈரயோடைடு, யூரோப்பியம்(II) அயோடைடு, சமாரியம்(II) அயோடைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

நியோடிமியம்(II) அயோடைடு (Neodymium(II) iodide) என்பது NdI2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நியோடிமியமும் அயோடினும் சேர்ந்து இந்த உப்பு உருவாகிறது. நியோடிமியம் ஈரயோடைடு, நியோடிமியம் டையையோடைடு என்ற பெயர்களாலும் இது அடையாளப்படுத்தப்படுகிறது. நியோடிமியம்(II) அயோடைடு சேர்மத்தில் நியோடிமியம் +2 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் உள்ளது.

கருநீல நிறத்தில் ஒரு திண்மமாக நியோடிமியம்(II) அயோடைடு காணப்படுகிறது.[1] இச்சேர்மத்தின் உட்கூறுகள் விகிதாச்சார அளவுகளில் இல்லை.[3] 562 பாகை செல்சியசு வெப்பநிலையில் இது உருகும்.[4]

தயாரிப்பு

[தொகு]

உருகிய நிலையிலுள்ள நியோடிமியம்(III) அயோடைடுடன் நியோடிமியம் உலோகத்தைச் சேர்த்து 800 மற்றும் 580 பாகை செல்சியசு வெப்பநிலையில் 12 மணி நேரம் சூடாக்குவதன் மூலம் நியோடைமியம்(II) அயோடைடு சேர்மத்தை உருவாக்கலாம்.[3] 800 முதல் 900 பாகை செல்சியசு வெப்பநிலை வரை வெற்றிடத்தில் நியோடிமியம்(III) அயோடைடுடன் நியோடிமியம் உலோகத்தைச் சேர்த்து குறைத்தல் வினையில் ஈடுபடுத்தியும் இதைப் பெறலாம்.:[1]

Nd + 2NdI3 → 3NdI2

பாதரசம்(II) அயோடைடுடன் நியோடிமியத்தைச் சேர்த்து வினை புரியச் செய்து தயாரிப்பதும் சாத்தியமாகும். ஏனெனில் நியோடிமியம் பாதரசத்தை விட அதிக வினைத்திறன் கொண்டது.:[1]

Nd + HgI2 → NdI2 + Hg

அயோடின் மற்றும் நியோடிமியம் தனிமங்களை நேரடியாக வினையில் ஈடுபடுத்தும் நேரடி தயாரிப்பும் சாத்தியமாகும்:[5]

Nd + I2 → NdI2

1961 ஆம் ஆண்டில் இயான் டி. கார்பெட்டு என்பவரால் நியோடிமியம்(II) அயோடைடு முதன்முதலில் தயாரிக்கப்பட்டது.[6]

பண்புகள்

[தொகு]

நியோடிமியம்(II) அயோடைடு ஒரு கருநீல நிறத் திண்மப்பொருளாகும்.[1] மிகவும் நீருறிஞ்சும் தன்மை கொண்டது. உலர்ந்த மந்த வாயுவின் கீழ் அல்லது அதிக வெற்றிடத்தின் கீழ் மட்டுமே இச்சேர்மத்தை சேமித்து கையாள முடியும்.[7] காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சுவதன் மூலம் இது நீரேற்றாக மாறும். ஆனால் இவை நிலையற்றவை. அதிகமாகவோ அல்லது குறைவாகவோ விரைவாக ஐதரசனை வெளியேற்றி ஆக்சைடு அயோடைடுகளாக இவை மாறுகின்றன:

2NdI2 + 2H2O → 2NdOI + H2↑ + 2HI

நியோடிமியம்(II) அயோடைடு சேர்மத்தின் உட்கூறுகள் விகிதவியல் அளவுகளில் இருக்காது. மேலும் இது NdI1.95 என்ற நெருக்கமான வாய்பாட்டைக் கொண்டுள்ளது.[3] இது 562° செல்சியசு வெப்பநிலையில் உருகும்.[4] இசுட்ரோன்சியம்(II) புரோமைடு வகை படிகக் கட்டமைப்பை நியோடிமியம்(II) அயோடைடும் ஏற்றுக் கொள்கிறது.[1] அழுத்தத்தின் கீழ், இது பொதுவாக உலோகமிடை சேர்மத்தில் காணப்படும் மாலிப்டினம் இருசிலிசைடு கட்டமைப்புக்கு மாறுகிறது. ஏற்கனவே மற்ற அருமண் ஈரயோடைடுகளில் (எ.கா. பிரசியோடைமியம்(II) அயோடைடு மற்றும் இலந்தனம்(II) அயோடைடு) இயல்பான நிலையில் உள்ளது.[8] டெட்ரா ஐதரோ பியூரான் மற்றும் பிற கரிமச் சேர்மங்களுடன் சேர்ந்து அணைவுச் சேர்மங்களையும் நியோடிமியம்(II) அயோடைடு உருவாக்குகிறது.[9][10][11]

நியோடிமியம்(II) அயோடைடு ஒரு மின்சார அரிதிற் கடத்தியாகும்.[3]

வினைகள்

[தொகு]

நியோடிமியம்(II) அயோடைடு ஆலசனைப் பிரித்தெடுப்பதன் மூலம் கரிம ஆலைடுகளுடன் வினைபுரிகிறது. இதன் விளைவாக இருபடிகள், சில்படிமங்கள் அல்லது கரைப்பானுடன் வினைகள் ஏற்படுகின்றன.[11]

டெட்ரா ஐதரோ பியூரான் மற்றும் டைமெத்தாக்சியீத்தேன் ஆகியவற்றுடன் கரைசல்கள் அறியப்படுகின்றன: NdI2(THF)2 மற்றும் NdI2(DME)2.[12]

நியோடிமியம்(II) அயோடைடு சூடான நைட்ரசனுடன் சேர்ந்து அயோடைடு நைட்ரைடை உருவாக்குகிறது: (NdI2)3N) இது டெட்ரா ஐதரோ பியூரானுடன் வினையில் ஈடுபட்டு (NdI)3N2 சேர்மத்தை தருகிறது.[13]

டெட்ரா ஐதரோ பியூரானிலுள்ள வளைய பெண்டாடையீனுடன் சேர்ந்து CpNdI2(THF)3 என்ற சேர்மத்தைக் கொடுக்கிறது.[14]

பயன்கள்

[தொகு]

கரிம வேதியியலில்[15]நியோடிமியம்(II) அயோடைடு ஒடுக்கும் முகவராகவும் வினையூக்கியாகவும் பயன்படுத்தப்படுகிறது.[16]

இவற்றையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Handbuch der präparativen anorganischen Chemie (in ஜெர்மன்). Stuttgart: Enke. 1975. p. 1081. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-432-02328-6. இணையக் கணினி நூலக மைய எண் 310719485.
  2. 2.0 2.1 See https://pubchem.ncbi.nlm.nih.gov/compound/Neodymium_II_-iodide
  3. 3.0 3.1 3.2 3.3 Sallach, Robert A.; Corbett, John D. (July 1964). "Magnetic Susceptibilities of Neodymium (II) Chloride and Iodide". Inorganic Chemistry 3 (7): 993–995. doi:10.1021/ic50017a015. 
  4. 4.0 4.1 Druding, Leonard F.; Corbett, John D. (June 1961). "Lower Oxidation States of the Lanthanides. Neodymium(II) Chloride and Iodide 1". Journal of the American Chemical Society 83 (11): 2462–2467. doi:10.1021/ja01472a010. 
  5. Karl A. Jr. Gschneidner, Jean-Claude Bunzli, Vitalij K. Pecharsky (2009). Handbook on the Physics and Chemistry of Rare Earths. Elsevier. p. 247. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-008093257-6.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  6. Angelika Jungmann, R. Claessen, R. Zimmermann, G. e. Meng, P. Steiner, S. Hüfner, S. Tratzky, K. Stöwe, H. P. Beck: Photoemission of LaI2 and CeI2. In: Zeitschrift für Physik B Condensed Matter. 97, 1995, S. 25–34, எஆசு:10.1007/BF01317584.
  7. Ortu, Fabrizio (2022). "Rare Earth Starting Materials and Methodologies for Synthetic Chemistry". Chem. Rev. 122 (6): 6040–6116. doi:10.1021/acs.chemrev.1c00842. பப்மெட்:35099940. 
  8. Ralf Alsfasser, Erwin Riedel (2007). Moderne Anorganische Chemie. Walter de Gruyter. p. 188. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-311019060-1.
  9. Mikhail N. Bochkarev, Igor L. Fedushkin, Sebastian Dechert, Anatolii A. Fagin, Herbert Schumann: [NdI2(thf)5], der erste kristallographisch charakterisierte Neodym(II)-Komplex. In: Angewandte Chemie. 113, 2001, S. 3268–3270, எஆசு:<3268::AID-ANGE3268>3.0.CO;2-K 10.1002/1521-3757(20010903)113:17<3268::AID-ANGE3268>3.0.CO;2-K.
  10. G. V. Khoroshen kov, A. A. Fagin, M. N. Bochkarev, S. Dechert, H. Schumann: Reactions of neodymium(II), dysprosium(II), and thulium(II) diiodides with cyclopentadiene In: Russian Chemical Bulletin. 52, S. 1715–1719, எஆசு:10.1023/A:1026132017155.
  11. 11.0 11.1 Fagin, Anatolii A.; Balashova, Tatyana V.; Kusyaev, Dmitrii M. et al. (March 2006). "Reactions of neodymium(II) iodide with organohalides". Polyhedron 25 (5): 1105–1110. doi:10.1016/j.poly.2005.08.050. 
  12. Bochkarev, Mikhail N.; Fagin, Anatolii A. (24 September 1999). "A New Route to Neodymium(II) and Dysprosium(II) Iodides". Chemistry - A European Journal 5 (10): 2990–2992. doi:10.1002/(SICI)1521-3765(19991001)5:10<2990::AID-CHEM2990>3.0.CO;2-U. 
  13. Fagin, A. A.; Salmova, S. V.; Bochkarev, M. N. (January 2009). "Reduction of nitrogen with neodymium(II) and dysprosium(II) diiodides and selected properties of the resulting nitrides". Russian Chemical Bulletin 58 (1): 230–233. doi:10.1007/s11172-009-0034-2. 
  14. Khoroshen'kov, G. V.; Fag, A. A.; Bochkarev, M. N.; Dechert, S.; Schumann, H. (1 August 2003). "Reactions of neodymium(ii), dysprosium(ii), and thulium(ii) diiodides with cyclopentadiene. Molecular structures of complexes CpTmI2(THF)3 and [NdI2(THF)5]+[NdI4(THF)2]–". Russian Chemical Bulletin 52 (8): 1715–1719. doi:10.1023/A:1026132017155. 
  15. Handbook on the Physics and Chemistry of Rare Earths. Elsevier. 2009. p. 261. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-008093257-6.
  16. Fundamental Chemistry (2006). Neodymium Based Ziegler Catalysts. Springer. p. 13. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 354034809-3.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நியோடிமியம்(II)_அயோடைடு&oldid=4069357" இலிருந்து மீள்விக்கப்பட்டது