உள்ளடக்கத்துக்குச் செல்

திருப்பள்ளியெழுச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருப்பள்ளி எழுச்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திருப்பள்ளியெழுச்சி என்பது இறைவனைத் துயில் எழுப்புவதாகவும் நம்மில் ஆன்மீக விழிப்பின்றி உறங்கிக் கொண்டிருக்கும் ஆத்மாவைத் துயிலெழுப்பி இறைவனின் கருணையை உணரச் செய்வதாகவும் பாடப்படும் பாடல்கள் ஆகும். 'சுப்ரபாதம்' என்பது இதன் இணையான சமஸ்கிருதச் சொல்லாகும்.

திருவரங்கத்தைச் சேர்ந்த தொண்டரடிப்பொடியாழ்வார் தமிழில் இயற்றிய அரங்கநாதன் மீது பாடப்பட்ட திருப்பள்ளியெழுச்சியே திருப்பள்ளியெழுச்சிவகை படைப்புகளுக்கு முன்னோடியாக திகழ்கிறது.

பாவை நோன்பு மற்றும் திருவெம்பாவை நோன்பு பொதுவாகக் கன்னிப் பெண்களே கடைப்பிடிப்பர். நோன்புகாலத்தில் கன்னிப் பெண்கள் அதிகாலையில் எழுந்து தம் தோழியரைத் துயில் எழுப்பி அழைத்துக் கொண்டு நீர் நிலைகளுக்குச் சென்று திருப்பாவையில் கண்ணன் மற்றும் திருவெம்பாவையில் அம்மையப்பர் புகழ்பாடி நீராடுவர். அப்பொழுதில் பாடும் பாடல்களாகவும் இவை கொள்ளப்படுகின்றன.

திருப்பதியில் அதிகாலையில் ஆலயத்தில் இசைக்கப்படும் 'ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்', இந்தியா முழுவதிலும் பிரசித்தி பெற்ற ஒன்று. சமஸ்கிருத மொழியிலமைந்த இந்த சுப்ரபாதம், கிபி பதினைந்தாம் நூற்றாண்டில் மணவாள மாமுனிகள் ஆணைக்கிணங்க காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரதிவாதிபயங்கரம் அண்ணங்காச்சாரியரால் இயற்றப்பட்டு இன்றளவும் பாடப்பெற்றுவருகிறது. எம். எஸ். சுப்புலக்ஷ்மியின் குரலில் இந்த சுப்ரபாதம் மிகுந்த வரவேற்பை பெற்றதோடு இதன் தமிழ் வடிவமும் எம். எஸ். சுப்புலக்ஷ்மியாலே பாடப்பட்டுள்ளது.

மார்கழியில் மட்டும் திருப்பதி உட்பட அனைத்து வைணவ ஆலயங்களிலும் தொண்டரடிப்பொடியாழ்வார் தமிழில் இயற்றிய அரங்கநாதன் மீது பாடப்பட்ட திருப்பள்ளியெழுச்சியே பாடப்பெற்று வருகிறது.

இவை தவிர சபரிமலையில் அதிகாலையில் 'ஐயப்ப சுப்ரபாதம்' இசைக்கப்படுகிறது, விக்னேஷ்வர சுப்ரபாதம், பாடகர் கே. ஜே. யேசுதாசால் பாடப் பெற்றுள்ளது.

திருப்பள்ளியெழுச்சிப் பாடல்கள்

[தொகு]

தொண்டரடிப்பொடியாழ்வாரின் திருப்பள்ளியெழுச்சி

[தொகு]
1. கதிரவன் குண திசை சிகரம் வந்து அணைந்தான்,
கனவிருள் அகன்றது, கலயம் பொழுதை,
மது விருண்டோழ்கின மாமலர் எல்லாம்,
வானவர் அரசர்கள் வந்து வந்தீண்டி,
எதிர் திசை நிறைந்தனர், இவரோடும் புகுந்த,
இரு களிதீட்டமும், பிடியோடு முரசும்,
அதிர்தலில் அலை கடல் போன்று உளது எங்கும்,
அரங்கத்தம்மா, பள்ளி எழுந்தருல்வையே.
2. கொழும்கொடி முல்லையின் கொழுமல ரணவி,
கூர்ந்தது குண திசை மருதம் இதுவோ,
எழுந்தன மலரனை பள்ளி கொள் அன்னம்,
ஈன்பனி நனைந்ததும் இரு சிறகுதறி,
விழுங்கிய முதலையின் பிளம்புரை பேழ் வாய்,
வெள்ளயிர் உருவுதான் விடதின்முக்கனுங்கி,
அழுங்கிய ஆணையின் அரும் துயர் கெடுத்த,
அரங்கத்தம்மா, பள்ளி எழுந்தருல்வையே.
3. சுடர் ஒழி பறந்தன சூழ் திசை எல்லாம்,
துன்னிய தாரகை மின்னொளி சுருங்கிப்,
படரொளி பசுதணன், பனி மதி இவனோ,
பாயிருள் அகன்றது, பைம் பொழிற் கமுகின்,
மடலிடை கீறி வான் பலிகள் நர,
வைகறை கூர்ந்தது மருதம் இதுவோ,
அடலொளி திகழ் தரு திகிரம் தடக்கை,
அரங்கத்தம்மா, பள்ளி எழுந்தருல்வையே.
4. மெட்டு இல மேதிகள் தலை விடும் ஆயர்கள்,
வேய் குழல் ஓசையும் விடை மணி குரலும்,
ஈட்டிய விசை திசை பறந்தன வயுளுள்,
இரிந்தின கரும்பினம் இலனன்கையர் குளத்தை,
வாட்டிய வரிசிலை வானவரேறே,
மாமுனி வேள்வியை கதவ, பிரதம்,
ஆடிய அடுதிறல் அயோதிஎம்மஅரசே,
அரங்கத்தம்மா, பள்ளி எழுந்தருல்வையே.
5. புலம்பின புட்களும் பூம் பொழில் களின் வாய்,
போயித்து கங்குல் புகுந்தது புலரி,
கலந்தது குண திசை கணை கடல் அரவம்,
கை வண்டு மிழதிய, கலம்பகம் புனைந்த,
அலங்கல தொடையல் கொண்டு அடியினை பணிவான்,
அமரர்கள் புகுந்தனர் ஆடலின் அம்மா,
இலங்கையால் கொண் வழிபடு சே கோயில்,
அரங்கத்தம்மா, பள்ளி எழுந்தருல்வையே.
6. இரவியர் மணி நெடும் தேரோடும் இவரோ?
இறைவர் பதினோரு விடயரும் இவரோ?
மருவிய மயிலிணன் அருமுக்ஹன் இவனோ?
மருதரும் வசுக்களும் வந்து வந்தீண்டி,
புரவியோடடலும் பாடலும் தேறும்,
குமார தண்டம் புகுந்தீண்டிய வெள்ளம்,
அருவரியானைய நின் கோயில் முன் இவரோ?
அரங்கத்தம்மா, பள்ளி எழுந்தருல்வையே.
7. அன்றது அமரர்கள் கூடங்கள் இவையோ?
அருந்தவ முனிவரும் மருதரும் இவரோ?
இன்டிரனனையும் தானும் வந்திவனோ?
எம் பெருமான், உன் கோயிலின் வசால்,
சுந்தரர் நெருக்கவி சாதரர் நூக,
இயக்கரும் மயக்கினர் திருவடி தொழுவன்,
அந்தரம் பரிடம் இல்லை மதிதுவோ,
அரங்கத்தம்மா, பள்ளி எழுந்தருல்வையே.
8. வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க,
மாநிதி கபிலயோன் கண்ணாடி முதலா,
எம்பெருமான் படிமை களம் காண்டற்கு,
எற்பனவயின கொண்டு நன் முனிவர்,
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ,
தோன்றினான் இரவியும் துளங்கொளி பரப்பி,
அம்பாறை தாதி நின்று அகலுகின்றது இருள் போய்,
அரங்கத்தம்மா, பள்ளி எழுந்தருல்வையே.
9. ஏதமில் தன உம்மை ஏக்கம் ம தளியே,
யாழ் குழல் முழவ மோட இசை திசை கேழ்மி,
கீதங்கள் பாடினார் கின்னரர் கெருடர்கள்,
கந்தருவர் அவர் கங்குலுஹமெல்லாம்,
மாதவர் வானவர் சாரணர் இயக்கர்,
சிதறும் மயங்கினர் திருவடி தொழுவன்,
ஆதலில் அவர்க்கு நலோக்க மருள,
அரங்கத்தம்மா, பள்ளி எழுந்தருல்வையே.
10. கடி மலர் கமலங்கள் மலர்ந்தன இவையோ,
கதிரவன் கணை கடல் முளைதணன் இவனோ.
துடி இடையார் சரி குழல் பிழிந்து உதறி,
துகில் உடுதேரினர் சூழ் புனலரங்க,
தொடை ஓத துளவமும் கூடையும் பொழிந்து,
தோன்றிய தோல் தொண்டர் அடிபோடி என்னும்,
அடியனை அளியனனென்று அருளி உன்னடியார்க்கு,
ஆட்படுத்தாய், பள்ளிஎழுண்டரலையே.

மணிவாசகரின் திருப்பள்ளியெழுச்சி

[தொகு]
கூவின பூங்குயில்; கூவின கோழி;
குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம் ;
ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து
ஓருப்படுகின்றது; விருப்பொடு நமக்குத்
தேவ நற்செறிகழல் தாளிணை காட்டாய் !
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே !
யாவரும் அறிவரியாய் ! எமக்கெளியாய் !
எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே !

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருப்பள்ளியெழுச்சி&oldid=3485327" இலிருந்து மீள்விக்கப்பட்டது