உள்ளடக்கத்துக்குச் செல்

உய்யக்கொண்டார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உய்யக்கொண்டார் நாதமுனிகளின் மாணாக்கர். இவர் தமது இளமைக் காலத்தில் ஆசிரியருக்குத் தொண்டு செய்வதிலேயே ஆர்வம் கொண்டிருந்தார். இறுதிக் காலத்தில்தான் ஆசிரியரிடம் திருவருள் பாடம் கற்றார். நாதமுனிகள், தன் மகன் ஈசுவரமுனிக்குப் பிறக்கும் குழந்தைக்கு யமுனைத்துறைவன் எனப் பெயர் சூட்டி அருளுரை புகட்டுமாறு உய்யக்கொண்டாரை வேண்டிக்கொண்டார். உய்யக்கொண்டார் தன் இறுதிக்காலத்தில் தனது மாணாக்கர் மணக்கால் நம்பியிடம் அப்பணியை ஒப்படைத்தார். மணக்கால் நம்பி தமது ஆசிரியரின் விருப்பப்படி ஈசுரமுனி மகனுக்கு யமுனைத்துறைவன் என முறைப்படி பெயர் சூட்டித் திருவருள் பாடம் புகட்டினார். யமுனைத்துறைவன், ஆளவந்தார் எனப் பெயர் பெற்றார்.

  • ஆளவந்தார் திருப்பாவைக்குப் பாடிய தனியன்கள் இரண்டு.

1

அன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல்பதியம் - இன்னிசையால்
பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு

2

சூடிக் கொடுத்தாள் சுடர்க் கொடியே தொல்பாவை
பாடி அருளவல்ல பல்வளையாய் - நாடி நீ
வேங்கடவற்கு என்னை விதி ஒன்ற இம்மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு.

கருவிநூல்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உய்யக்கொண்டார்&oldid=2880014" இலிருந்து மீள்விக்கப்பட்டது