டோங்
Appearance
டோங் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 26°10′N 75°47′E / 26.17°N 75.78°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | இராஜஸ்தான் |
மாவட்டம் | டோங் |
அரசு | |
• நிர்வாகம் | நகராட்சி |
ஏற்றம் | 289 m (948 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,65,363 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 304001 |
ஐஎசுஓ 3166 குறியீடு | RJ-IN |
வாகனப் பதிவு | RJ-26 |
இணையதளம் | www |
டோங் (Tonk) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் டோங்கு மாவடத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இந்நகரம் மாநிலத் தலைநகரான ஜெய்ப்பூருக்கு தெற்கே 95 கிமீ தொலைவில், பனஸ் ஆற்றின் வலது கரையில் உள்ளது.
மேலும் இந்நகரம் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் டோங் சுதேச சமஸ்தானத்தின் தலைநகரமாக 1817 முதல் 1947 முடிய விளங்கியது.[1]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, டோங் நகரத்தின் மொத்த மக்கள்தொகை 1,65,294 ஆகும். அதில் ஆண்கள் 84,806 மற்றும் பெண்கள் 80,488 உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 23,852 ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 949 பெண்கள் வீதம் உள்ளது. சராசரி எழுத்தறிவு 68.62% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 50.31%, முஸ்லீம்கள் 47.18%, சமணர்கள் 2.34% மற்றும் பிற சமயத்தவர்கள் 0.17% ஆகவுள்ளனர்.[2]