உள்ளடக்கத்துக்குச் செல்

சாப்ரா நகரம்

ஆள்கூறுகள்: 24°40′N 76°50′E / 24.67°N 76.83°E / 24.67; 76.83
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாப்ரா
நகரம்
சாப்ரா is located in இராசத்தான்
சாப்ரா
சாப்ரா
இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் சாப்ரா நகரத்தின் அமைவிடம்
சாப்ரா is located in இந்தியா
சாப்ரா
சாப்ரா
சாப்ரா (இந்தியா)
ஆள்கூறுகள்: 24°40′N 76°50′E / 24.67°N 76.83°E / 24.67; 76.83
நாடு இந்தியா
மாநிலம்இராஜஸ்தான்
மாவட்டம்[[[பாரான் மாவட்டம்|பாரான்]]
ஏற்றம்
321 m (1,053 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்32,285
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
325220
இடக் குறியீடு07452
ஐஎசுஓ 3166 குறியீடுISO 3166-2:IN
வாகனப் பதிவுRj28

சாப்ரா (Chhabra) (छाबड़ा गुगोर/ छबड़ा / چھابرہ), இந்தியாவின் மேற்கில் அமைந்த இராஜஸ்தான் மாநிலத்தின் தென்மேற்கில் உள்ள பாரான் மாவட்டத்தில் உள்ள நகரம் ஆகும். சாப்ரா நகரம் நாற்புறமும் கோட்டைச் சுவர்களுடன் ஆறு நுழைவாயில்களுடன் கூடிய வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரம் ஆகும். இது இராஜஸ்தான்-மத்தியப் பிரதேசம் எல்லையில் அமைந்த நகரம் ஆகும். இது ஜெய்ப்பூருக்கு தென்கிழக்கில் 390 கிலோ மீட்டர் தொலைவிலும்; புது தில்லிக்கு கிழக்கே 196 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இதனருகே பாரான் மாவட்டத் தலைமையிடம் பாரான் நகரம் உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 321 மீட்டர் உயரத்தில் உள்ளது.

சாப்ரா கோட்டா, ஜெய்ப்பூர், இந்தூர், ஜபல்பூர் போன்ற நகரங்களுடன் இருப்புப் பாதையால் இணைக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, 20 வார்டுகளும், 6326 வீடுகளும் கொண்ட சாப்ரா நகராட்சியின் மக்கள் தொகை 32,285 ஆகும். அதில் ஆண்கள் 16,844 மற்றும் பெண்கள் 15,441 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 917 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 4,649 (14.40 %)ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 72.84% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 69.59%, இசுலாமியர் 29.34%, சமணர்கள் 0.75%, கிறித்தவர்கள் 0.15%, மற்றும் பிறர் 0.16% ஆகவுள்ளனர்.[1]

தொழில்

[தொகு]

சாப்ராவில் 3000 மெகா வாட் திறன் கொண்ட இரண்டு அனல் மின் நிலையங்கள் உள்ளது. 3000

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாப்ரா_நகரம்&oldid=3518025" இலிருந்து மீள்விக்கப்பட்டது