உள்ளடக்கத்துக்குச் செல்

குல்தரா

ஆள்கூறுகள்: 26°49′N 70°48′E / 26.81°N 70.80°E / 26.81; 70.80
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குல்தரா
குல்தர்
ஆளில்லா கிராமம்
குல்தரா கிராமத்தின் சிதிலமடைந்த வீடுகள்
குல்தரா கிராமத்தின் சிதிலமடைந்த வீடுகள்
குல்தரா is located in இராசத்தான்
குல்தரா
குல்தரா
இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சல்மேர் மாவட்டத்தில் குல்தரா கிராமத்தின் அமைவிடம்
குல்தரா is located in இந்தியா
குல்தரா
குல்தரா
குல்தரா (இந்தியா)
ஆள்கூறுகள்: 26°49′N 70°48′E / 26.81°N 70.80°E / 26.81; 70.80
நாடுஇந்தியா
மாநிலம்இராஜஸ்தான்
மாவட்டம்ஜெய்சல்மேர்
ஏற்றம்
266 m (873 ft)
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
சிதிலமடைந்த குல்தரா கிராமம்
குல்தரா கிராமக் கோயிலின் கல்வெட்டு
குல்தரா பாரம்பரிய விடுதியின் பலகை

குல்தரா (Kuldhara), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் தார் பலைவனத்தில் உள்ள ஜெய்சல்மேர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான ஜெய்சல்மேர் நகரத்திற்கு தென்மேற்கில் 27 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த ஆளில்லா கிராமம் ஆகும். ஜெய்சல்மேர் இராச்சியத்தினர் காலத்தில், 13-ஆம் நூற்றாண்டில் பாலிவால் பிராமணர்களுக்காக, 410 வீடுகளும், இரண்டு தெருக்களும் கொண்ட அக்கிரகாரத்தை குல்தரா கிராமத்தில் புதிதாக நிறுவப்பட்டது. இக்கிராமத்தில் மழை நீர் சேரிக்க படிக்கிணறுகள் அமைக்கப்பட்டது. 19-ஆம் நூற்றாண்டில் ஜெய்சல்மேர் சமஸ்தானத்தின் திவான் சலீம் சிங்கின் இக்கிராமத்தின் மக்கள் மீதான அடாவடியான செயல்களால், இக்கிராமத்தினர் தம் வீடுகளை காலி செய்து விட்டு, இரவோடு இரவாக வெளியேறினர். அது முதல் இக்கிராமம் ஆளில்லாது, சிதிலமடைந்துள்ளது. இராஜஸ்தான் அரசின் தொல்லியல் துறை குல்தரா கிராமத்தை சீரமைத்து 2015-ஆம் ஆண்டு முதல் சுற்றுலாத் தளமாக மாற்றியுள்ளனர்.[1]சிதிலமடைந்த குல்தரா கிராமத்தில் 3 சுடுகாடுகளும், 13-ஆம் நூற்றாண்டின் இரண்டு நினைவுக் கற்களும் கொண்டுள்ளது.

வரலாறு

[தொகு]

உள்ளூர் கதைகளின்படி, 19-ஆம் நூற்றாண்டில் ஜெய்சல்மேர் சமஸ்தானத்தின் திவான் சலீம் சிங் என்பவர், குல்தரா கிராமத்தில் வாழ்ந்த ஒரு சிறுமியின் அழகில் மயங்கி, அப்பெண்ணை தனக்கு திருமணம் செய்து தருமாறு இக்குடும்பத்தினரை வற்புறுத்தினார். ஆனால் குல்தரா மக்கள் அந்த சிறுமியை சலீம் சிங்குக்கு திருமணம் செய்துகொடுக்க மறுத்துவிட்டனர். சலீம் சிங் கிராம மக்கள் இதுகுறித்து யோசிக்க சில நாட்கள் அவகாசம் கொடுத்தார். சலீம் சிங் சொல்வதைக் கேட்காவிட்டால், கிராமத்தில் அவர் படுகொலைகளைச் செய்வார் என்று கிராம மக்களுக்குத் தெரியும். எனவே குல்தரா மக்கள் கூட்டம் நடத்தி, தங்கள் சிறுமி மற்றும் கிராமத்தின் கொளரவத்தை காப்பாற்றுவதற்காக கிராமத்தை விட்டு வெளியேற முடிவு செய்தனர். கிராம மக்கள் அனைவரும் தங்கள் உடமைகள், கால்நடைகள், தானியங்கள், துணிமணிகள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு இரவு வேளையில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். பின்னர் அவர்கள் இங்கு திரும்பி வரவே இல்லை.[2]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Rachna Singh (8 February 2016). "Game for night out at 'haunted' Kuldhara?". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/jaipur/Game-for-night-out-at-haunted-Kuldhara/articleshow/50896761.cms. 
  2. {https://www.bbc.com/tamil/india-61652171குல்தரா[தொடர்பிழந்த இணைப்பு] வரலாறு: 200 ஆண்டுகளாகப் பாழடைந்து கிடக்கும் ஒரு ராஜஸ்தான் கிராமத்தின் கதை]

உசாத்துணை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குல்தரா&oldid=3582112" இலிருந்து மீள்விக்கப்பட்டது