உள்ளடக்கத்துக்குச் செல்

தீக் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீக் மாவட்டம்
மாவட்டம்
தீக் அரண்மனை
இராஜஸ்தான் மாநிலத்தில் தீக் மாவட்டத்தின் அமைவிடம்
இராஜஸ்தான் மாநிலத்தில் தீக் மாவட்டத்தின் அமைவிடம்
நாடு இந்தியா
மாநிலம்இராஜஸ்தான்
வருவாய் கோட்டம்பரத்பூர்
நிறுவிய நாள்7 ஆகஸ்டு 2023
தலைமையிடம்தீக்
மக்கள்தொகை
 (2011)[1]
 • Total10,72,755
நேர வலயம்ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்)
இணையதளம்https://deeg.rajasthan.gov.in/home/dptHome

தீக் மாவட்டம் (Deeg district), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் வடகிழக்கில் அமைந்த புதிய மாவட்டம். இதன் தலைமையிடம் தீக் நகரம் ஆகும். பரத்பூர் மாவட்டத்தின் 9 வருவாய் வட்டங்களைக் கொண்டு தீக் மாவட்டம் 7 ஆகஸ்டு 2023 அன்று நிறுவப்பட்டது.

இதன் வடக்கில் அரியானா மாநிலம், கிழக்கில் உத்தரப் பிரதேசம் மாநிலம், தெற்கில் பரத்பூர் மாவட்டம், மேற்கில் அல்வர் மாவட்டம் அமைந்துள்ளது.

மாவட்ட நிர்வாகம்

[தொகு]

தீக் மாவட்டம் 9 வருவாய் வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள்து.[2]

  1. தீக் வட்டம்
  2. ஜனௌதர் வட்டம்
  3. கும்கெர் வட்டம்
  4. ராரா வட்டம்
  5. நகர் வட்டம்
  6. சிக்ரி வட்டம்
  7. காமன் வட்டம்
  8. ஜுர்கரா வட்டம்
  9. பகாடி வட்டம்

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, தீக் மாவட்டத்தின் மக்கள் தொகை 10,72,755. அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 894 பெண்கள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 1,63,199 (15.21%) மற்றும் 10,669 (0.99%) ஆக உள்ளனர்.[1]இந்துக்கள் 66.02%, முஸ்லீம்கள் 31.90%, சீக்கியர்கள் 1.65% மற்றும் பிறர் 0.43% ஆக உள்ளனர்.[3]இந்தி 52.86%, பிரஜ் மொழி 31.65%, இராஜஸ்தானி மொழி 11.87%, உருது 1.62% பஞ்சாபி மொழி 1.55% மற்றும் பிற மொழிகள் 0.45% பேசுகின்றனர்.[4]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "District Census Handbook 2011 - Bharatpur" (PDF). Census of India. Registrar General and Census Commissioner of India.
  2. Taluks of Deeg District
  3. "Table C-01 Population By Religion - Rajasthan". census.gov.in. Registrar General and Census Commissioner of India.
  4. "Table C-16 Population by Mother Tongue: Rajasthan". censusindia.gov.in. Registrar General and Census Commissioner of India.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீக்_மாவட்டம்&oldid=4112334" இலிருந்து மீள்விக்கப்பட்டது